தாமஸ் ஹார்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாமஸ் ஹார்டி. (Thomas Hardy, ஜூன் 2, 1840 – ஜனவரி 11, 1928) ஒரு ஐக்கிய இராச்சியப் புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர். ஆங்கில புதின இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்.
இங்கிலாந்திலுள்ள டார்செஸ்டர் எனும் நகரில் 02-06-1840 ஆம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தார். ஜான்ஹிக்சு எனும் கட்டிடக்கலை அறிஞரிடம் ஆறு வருடங்கள் பணியாற்றினார். கட்டிடக் கலையைக் கற்றுக் கொள்ளும் போதே இலத்தீன், பிரெஞ்ச் மற்றும் ஆங்கில இலக்கியங்களைப் படித்து அவர் அறிவை வளர்த்துக் கொண்டார். 1865 ஆம் ஆண்டில் கவிதை எழுதத் தொடங்கிய இவர் முதன் முதலாக “த புவர்மேன் அண்ட் த லேடி” எனும் நாவலை எழுதி பதிப்பகத்திற்கு அனுப்பினார். அந்த நாவல் பிரசுரிக்க ஏற்றதல்ல என்று திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பிறகு 1871 ஆம் ஆண்டில் “டெஸ்பரேட் ரெமிடீஸ்” எனும் நாவலை எழுதி சொந்தமாக பதிப்பித்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து புத்தகங்கள் எழுதும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.
“த உட்லாண்டர்ஸ்”, “ஏ சேஞ்சிடுமேன்”, “ஃபார் ஃபிரம் த மாட்னிங் கிரௌட்”, “டேஸ் ஆஃப் த அம்பர்வில்லி”, “த டைனாஸ்ட்”, “ஏ பேர் ஆஃப் புளூ ஐஸ்”, “மொமண்ட்ஸ் ஆஃப் விஷன்” எனும் நாவல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் சிறப்புப் பட்டங்களை அளித்துள்ளது. 1910 ஆம் ஆண்டு “ஆர்டர் ஆஃப் மெரிட்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இவர் 11-01-1928 ஆம் நாள் மரணமடைந்தார்.