வில்லியம் டெனிசன்
வில்லியம் டெனிசன் (William Denison , பிறப்பு: சனவரி 13 1801, இறப்பு: மார்ச்சு 9 1856), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் என்று அறியப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், நிர்வாகி மற்றும் துடுப்பாட்ட வீரராக இங்கிலாந்தில் இருந்தார். இளம் வயதில் சிறந்த துடுப்புக்காரனாக இருந்தார்.[2]
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் துடுப்பாட்ட விளையாட்டு நிருபராகவும், இலண்டனில் உள்ள தி எரா செய்தித்தாளின் வழக்கமான கட்டுரையாளராகவும் இவர் இருந்தார்.[3]
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1832-1847 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lemmon, David (1989). The History of Surrey County Cricket Club. Christopher Helm. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0747020108.
- ↑ "Decease of Mr. William Denison". The Bucks Herald, Uxbridge Advertiser, Agricultural Journal, and Advertising Chronicle, for the Counties of Buckingham, Bedford, Hertford, Berks, Oxford, Northampton, and Middlesex (Aylesbury) (1,262): p. 3. 22 March 1856. https://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000270/18560322/012/0003.
- ↑ "Decease of Mr. William Denison". The Era (London) 18 (913): p. 3. 23 March 1856. https://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000053/18560323/003/0003.
வெளி இணைப்பு
தொகுவில்லியம் டெனிசன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 31 2011.