1803
1803 (MDCCCIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1803 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1803 MDCCCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1834 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2556 |
அர்மீனிய நாட்காட்டி | 1252 ԹՎ ՌՄԾԲ |
சீன நாட்காட்டி | 4499-4500 |
எபிரேய நாட்காட்டி | 5562-5563 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1858-1859 1725-1726 4904-4905 |
இரானிய நாட்காட்டி | 1181-1182 |
இசுலாமிய நாட்காட்டி | 1217 – 1218 |
சப்பானிய நாட்காட்டி | Kyōwa 2 (享和2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2053 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4136 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 5 - வில்லியம் சைமிங்ட்டன் தனது முதலாவது ஓடக்கூடிய நீராவிப்படகை காட்சிப்படுத்தினார்.
- பெப்ரவரி 21 - ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைக் கொலை செய்யத் திட்டமிட்ட எட்வர்ட் டெஸ்பார்ட் மற்றும் அறுவர் தூக்கிலிடப்பட்டனர்.
- மார்ச் 1 - ஐக்கிய அமெரிக்காவின் 17வது மாநிலமாக ஒகையோ இணைக்கப்பட்டது.
- மார்ச் 22 - கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியருடன் போரை அறிவித்தான்.
- ஏப்ரல் 30 - லூசியானா வாங்கல்: லூசியானாவை அமெரிக்கா பிரான்சிடம் இருந்து விலைக்குப் பெற்றுக் கொண்டது.
- மே - முதலாம் நெப்போலியன் இங்கிலாந்தைத் தாக்குவதற்குத் தயாரானான்.
- மே 18 - ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
- ஜூலை 4 - லூசியானா வாங்கல் அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 25 - மன்னார் விடத்தல்தீவுப் பகுதியை பண்டார வன்னியன் தாக்கினான். ஆனாலும் இது மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது. முல்லைத்தீவில் குமாரசேகர முதலியார் மற்றும் பலர் தூக்கிலிடப்பட்டனர்.
- செப்டம்பர் 23 - தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின.
- அக்டோபர் 31 - கப்டன் ட்றிபேர்க் (Drieberg) தலைமையில் பண்டார வன்னியனின் படைகள் தாக்கப்பட்டதில் பண்டார வன்னியன் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 18 - எயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டான்.
நாள் அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- பலேடியம் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
- வான் டீமனின் நிலத்தில் (தற்போதைய தாஸ்மானியா) குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புக்கள்
தொகு- டிசம்பர் 11 - ஹெக்டர் பேர்லியோஸ், பிரெஞ்சு இசையமைப்பாளர் (இ. 1869)
இறப்புக்கள்
தொகு- ஏப்ரல் 8 - டூசான் லூவர்சூர், எயிட்டிய புரட்சியின் தலைவர் (பி. 1743)
- அக்டோபர் 14 - அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து அறிவியலாளர் (பி. 1750)
1803 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Historical Events for Year 1803 | OnThisDay.com". Historyorb.com. Archived from the original on June 30, 2015. பார்க்கப்பட்ட நாள் August 4, 2016.
- ↑ "Ohio Statehood | OhioHistoryCentral.org". Archived from the original on October 7, 2019. பார்க்கப்பட்ட நாள் October 7, 2019.
- ↑ Laws of the United States of America; from March 4, 1789, to March 4, 1815 (Weightman, 1815) p714