ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்

ஆத்திரேலிய நாடாளுமன்றம் (Parliament of Australia) அல்லது பொதுநலவாய நாடாளுமன்றம் (Commonwealth parliament) என்பது ஆத்திரேலிய அரசாங்கத்தின் சட்டமன்றத்தின் ஒரு கிளையாகும். இரு அவைகளைக் கொண்ட இச்சட்டமன்றம் பெரும்பாலும் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை ஒத்தது. ஆனாலும் ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசின் சில சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆத்திரேலிய அரசியமைப்பின் படி, ஆத்திரேலிய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது: அரசி, மேலவை, மற்றும் பிரதிநிதிகள் அவை. அரசி பொதுவாக தனது பிரதிநிதியாக பொது-ஆளுநரை (Governor-General) நியமித்துள்ளார்.

ஆத்திரேலிய நாடாளுமன்றம்
Parliament of Australia
43வது நாடாளுமன்றம்
Coat of arms or logo
வகை
வகை
அவைகள்மேலவை
பிரதிநிதிகள் சபை
வரலாறு
தோற்றுவிப்பு9 மே 1901
தலைமை
அரசி
ஆளுனர்
குவெண்டின் பிரீசு
5 செப்டம்பர் 2008
மேலவைத் தலைவர்
ஜோன் ஒக், தொழிற்கட்சி
26 ஆகத்து 2008
சபாநாயகர்
அனா பேர்க், தொழிற்கட்சி
9 அக்டோபர் 2012
கட்டமைப்பு
உறுப்பினர்கள்150 கீழவை உறுப்பினர்கள்,
76 மேலவை உறுப்பினர்கள்
கீழவையின் தற்போதைய அமைப்பு
கீழவை அரசியல் குழுக்கள்
அரசு (71)

     தொழிற்கட்சி (71)
எதிர்க்கட்சி
கூட்டமைப்பு (72)

     லிபரல் (44)
     லிதேக (20)
     தேசியவாதிகள் (6)
     தேசி. மேஆ (1)
     நாலிக (1)
ஏனையோர் (7)
     சுயே. (5)
     பசுமை (1)

     காஆக (1)
மேலவையின் தற்போதைய நிலவரம்
செனட் அரசியல் குழுக்கள்
அரசு (31)

     தொழிற்கட்சி (31)
Opposition
Coalition (34)

     Liberal (24)
     லிதேக (6)
     தேசியவாதிகள் (3)
     நாலிக (1)
ஏனையோர் (11)
     பசுமை (9)
     சதொக (1)

     சுயே. (1)
தேர்தல்கள்
கீழவை அண்மைய தேர்தல்
21 ஆகத்து 2010
செனட் அண்மைய தேர்தல்
21 ஆகத்து 2010
கீழவை அடுத்த தேர்தல்
7 செப்டம்பர் 2013
செனட் அடுத்த தேர்தல்
7 செப்டம்பர் 2013
கூடும் இடம்
Parliament House, Canberra.jpg
நாடாளுமன்ற மாளிகை, கான்பரா, தலைநகரம், ஆத்திரேலியா
வலைத்தளம்
www.aph.gov.au

கீழவை, (அல்லது பிரதிநிதிகள் அவை), தற்போது 150 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் ஆத்திரேலியாவின் நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தொகுதிகளின் மக்கள் தொகை, எல்லைகள் மாறும் போது உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மாற்றமடையும். 1984 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 125 இலிருந்து 148 ஆக உயர்த்தப்பட்டது. இது 1993 இல் 147 ஆகக் குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 1996 இல் 148 ஆக அதிகரிக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டில் 150 ஆக அதிகரித்தது.

மேலவை, (அல்லது செனட் அவை), 76 உறுப்பினர்களைக் கொண்டது: ஒவ்வொரு மாநிலத்திலும் 12 உறுப்பினர்களும், இரண்டு மண்டலங்களில் ஒவ்வொன்றிலும் இருவருமாக மொத்தம் 76 உறுப்பினர்கள் உள்ளனர். செனட்டர்கள் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரு அவைகளும் கான்பராவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் இரு வெவ்வேறு அறைகளில் கூடுகின்றன.

வெளி இனைப்புகள்தொகு