ஆத்திரேலியப் பசுமைக் கட்சி

ஆத்திரேலியப் பசுமைக் கட்சி (Australian Greens) எனப்படுவது ஆத்திரேலியாவின் ஓர் அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சூழலியத்துடன் இக்கட்சி பின்வரும் நான்கு அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டுள்ளது: பேண்தகுநிலை, சமூகநீதி, அடிமட்ட சனநாயகம், அமைதியும் வன்முறையின்மையும்[1]

ஆத்திரேலியப் பசுமைக் கட்சி
The Australian Greens
தலைவர்கிறிஸ்டீன் மில்னி
பிரதித் தலைவர்ஆடம் பாண்ட்
தொடக்கம்1992
தலைமையகம்8–10 ஓபார்ட் பிளேசு
கான்பரா
கொள்கைபசுமை அரசியல்
பன்னாட்டு சார்புஉலகப் பசுமைவாதிகள்
கீழவை
1 / 150
செனட்
9 / 76
தாசுமேனிய நாடாளுமன்றம்
5 / 40
விக்டோரிய நாடாளுமன்றம்
3 / 128
மேற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம்
2 / 95
தெற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம்
2 / 69
நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றம்
6 / 135
தலைநகர நாடாளுமன்றம்
1 / 17
இணையதளம்
www.greens.org.au

ஆத்திரேலிய சுற்றுச்சூழல் இயக்கம், ஐக்கிய தாசுமேனியக் குழு போன்ற இயக்கங்கள் இக்கட்சியின் முன்னோடிகள் எனக் கருதப்படுகிறது. ஐக்கிய தாசுமேனியக் குழு உலகின் முதல் பசுமைக் கட்சிகளில் ஒன்றாகும்,[2] அத்துடன் மேற்கு ஆத்திரேலியாவின் அணுவாயுதக் குறைப்பு இயக்கம், நியூ சவுத் வேல்சின் தொழிலாளர் இடதுசாரிகள் போன்றவையின் பசுமைக் கட்சியின் முன்னோடிகள் ஆகும். ஐக்கிய தாசுமேனியக் குழு 1972 இல் தாசுமேனிய மாநிலத் தேர்தல்களில் பங்குபற்றியது.

மேற்கு ஆத்திரேலியாவின் பசுமைக் கட்சியின் ஜோ வலண்டைன் என்பவர் 1990 ஆம் ஆண்டில் முதலாவது செனட் இருக்கையைப் பெற்றுக் கொண்டது. பசுமைக் கட்சியின் முன்னாள் தலைவர் பாப் பிரவுண் 1996 ஆம் ஆண்டில் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் பசுமைக் கட்சியினர் செனட் அவையில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் தற்போது ஒன்பது மேலவை உறுப்பினர்களும், கீழவையில் ஒரு உறுப்பினரும் உள்ளனர். மாநில நாடாளுமன்றங்களில் 24 உறுப்பினர்களும், உள்ளூராட்சிகளில் நூற்றுக்கும் அதிகமானோர் உள்ளனர்.[3] 10,000 இற்கும் அதிகமானோர் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.themonthly.com.au/australian-greens-party-divided-we-fall-sally-neighbour-4524
  2. "About Us". Global Greens. பார்க்கப்பட்ட நாள் 19 December 2011.
  3. "Greens celebrate 40 years of movement". ஏபிசி (Australian Broadcasting Corporation). 24 மார்ச்சு 2012. http://www.abc.net.au/news/2012-03-23/greens-celebrate-40-years-of-movement/3909912. பார்த்த நாள்: 6 சூலை 2012. 
  4. Ashley Hall (29 June 2011). "Bob Brown outlines Greens plans for Senate power". PM (Australian Broadcasting Corporation). http://www.abc.net.au/pm/content/2011/s3256735.htm. பார்த்த நாள்: 6 July 2012. 

வெளி இணைப்புகள் தொகு