உலகளாவிய பசுமை கட்சிகள்

சூழல் நோக்கிய கவனம் உலகின் பல பாகங்களிலும் முக்கியம் பெற்று வருகின்றது. சூழலை அல்லது சுற்றாடலை தமது முக்கிய முனையாக முன்னிறுத்தி, இட-வல அரசியல் சிந்தனைகளுக்கு மாற்றான சிந்தனைகளுடன் தம்மை முன்னிறுத்தும் கட்சிகள் பசுமை கட்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. உலகம் பூராகவும், குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் இக்கட்சிகள் தற்சமயம் வேரூன்றி வருகின்றன. எனினும், இக்கட்சிகள் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவை இன்னும் எங்கும் பெறவில்லை. இக்கட்சிகள் கருத்தியல் கட்சிகளாகவே இப்பொழுது பெருதும் இயங்குகின்றன.

ta:உலகளாவிய பசுமை கட்சிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகளாவிய_பசுமை_கட்சிகள்&oldid=2740412" இலிருந்து மீள்விக்கப்பட்டது