ஆத்திரேலியப் பிரதிநிதிகள் அவை

(ஆத்திரேலியப் பிரதிநிதிகள் சபை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரதிநிதிகள் அவை (House of Representatives) என்பது ஆத்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். நாடாளுமன்றத்தின் மேலவை செனட் அவையைக் குறிக்கும். கீழவையின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பதவிக் காலம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகும்.

பிரதிநிதிகள் அவை
House of Representatives
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
தலைமை
சபாநாயகர்
அன்னா பேர்க், தொழிற்கட்சி
9 அக்டோபர் 2012 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்150
பிரதிநிதிகள் அவையின் தற்போதைய நிலை
அரசியல் குழுக்கள்
அரசு (71)

எதிர்க்கட்சிக்
கூட்டமைப்பு (72)

Crossbench (7)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
21 ஆகத்து 2010]]
அடுத்த தேர்தல்
7 செப்டம்பர் 2013
கூடும் இடம்
நாடாளுமன்ற மாளிகை
கான்பரா, தலைநகர்
ஆத்திரேலியா
வலைத்தளம்
கீழவை

தற்போதைய கீழவை 2013 ஆகத்து 5 இல் கலைக்கப்பட்டது. புதிய தேர்தல்கள் 2013 செப்டம்பர் 7 இல் இடம்பெறும். முன்னாள் கீழவை 2010 தேர்தலின் பின்னர் தெரிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் இது 43வது நடுவண் நாடாளுமன்றம் ஆகும். 1940 தேர்தலுக்குப் பின்னர் இந்த நாடாளுமன்றமே தொங்கு நாடாளுமன்றமாகும். மொத்தமுள்ள 150 இருக்கைகளில் தொழிற்கட்சியும், கூட்டமைப்பும் தலா 72 இருக்கைகளைப் பெற்றன. ஆஸ்திரேலியப் பசுமைக் கட்சியின் உறுப்பினர் ஆடம் பாண்ட், சுயேட்சைகள் ஆண்ட்ரூ விக்கி, ரொப் ஓக்சோட், டோனி வின்ட்சர் ஆகியோரின் ஆதரவில் தொழிற்கட்சி சிறுபான்மை அரசை அமைத்தது.

வெளி இணைப்புகள்

தொகு