ஆஸ்திரேலிய நேர வலயம்

ஆஸ்திரேலிய நேர வலயம் எனப்படுவது ஆஸ்திரேலியா கண்டத்தில் கடைப்பிடிக்கப்படும் நேர வலயத்தைக் குறிக்கும். ஆஸ்திரேலியாவில் தற்போது கிரீன்விச் நேர வலயத்தில் இருந்து வேறுபட்ட மூன்று நேர வலயங்கள் நடைமுறையில் உள்ளன. அவையாவன: கீழைத்தேய (UTC+10, AEST), மத்திய (UTC+9:30, ACST) மற்றும் மேற்கத்தைய (UTC+8, AWST)[1]. இவற்றைவிட சில பகுதிகள் அதிகாரபூர்வமற்ற "மத்திய மேற்கத்திய" (UTC+8:45) நேர அலகைப் பயன்படுத்துகின்றன. ஆஸ்திரேலியாவின் வெளியே உள்ள பல பிரதேசங்கள் தமக்கென வேறுபட்ட நேர வலயங்களைப் பயன்படுத்துகின்றன.

ஆஸ்திரேலிய நேர வலயங்கள்

ஆஸ்திரேலியாவின் அனைத்துக் குடியேற்ற நாடுகளும் தரப்படுத்தப்பட்ட நேரத்தை 1890களில் அறிமுகப்படுத்தின.

ஆஸ்திரேலிய மாநிலங்களில் நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், விக்டோரியா, தாஸ்மானியா, தெற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆண்டு தோறும் கோடை காலங்களில் பகலொளி சேமிப்பு நேரத்தை அறிமுகப்படுத்துகின்றன. மேற்கு ஆஸ்திரேலியா பகலொளி சேமிப்பு நேரத்தை சோதனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்து, வட மண்டலம் ஆகியவற்றில் பகலொளி சேமிப்பு நடைமுறையில் இல்லை.

மாநிலங்களில் நேரங்கள்

தொகு

மேற்கத்திய தரப்படுத்தப்பட்ட நேரம் (AWST) - UTC+8 மணி

மத்திய தரப்படுத்தப்பட்ட நேரம் (ACST)- UTC+9:30 மணி

கீழைத்தேய தரப்படுத்தப்பட்ட நேரம் (AEST) - UTC+10 மணி

மேற்கோள்கள்

தொகு
  1. "Official government website". Archived from the original on 2008-08-20. பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
  2. Standard Time Act 2005
  3. The Standard Time Act 1898
  4. "Standard Time Act 2005". Archived from the original on 2006-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
  5. "Standard Time Act 1894" (PDF). Archived (PDF) from the original on 2006-02-16. பார்க்கப்பட்ட நாள் 2006-02-16.
  6. "Standard Time Act 1987 No 149". Archived from the original on 2012-01-12. பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
  7. Standard Time and Summer Time Act 1972
  8. "Summer Time Act 1972" (PDF). Archived from the original (PDF) on 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
  9. Standard Time Act 1895

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்திரேலிய_நேர_வலயம்&oldid=3781294" இலிருந்து மீள்விக்கப்பட்டது