பெருந் தடுப்புப் பவளத்திட்டு
பெரும் தடுப்புப் பவளத்திட்டு (The Great Barrier Reef) உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டுத் தொகுதியாகும்[1][2]. 2,900 தனித் திட்டுக்களையும்[3], 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும்கொண்டு ஏறத்தாழ 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பவளத்திட்டு பரந்து விரிந்துள்ளது[4][5]. இப்பவளத்திட்டு வடகிழக்கு ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் (Coral Sea) அமைந்துள்ளது.
பெரும் தடுப்புப் பவளத்திட்டு The Great Barrier Reef | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | இயற்கை |
ஒப்பளவு | vii, viii, ix, x |
உசாத்துணை | 154 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1981 (5வது தொடர்) |
பெரும் தடுப்புப் பவளத்திட்டு The Great Barrier Reef | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | இயற்கை |
ஒப்பளவு | vii, viii, ix, x |
உசாத்துணை | 154 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1981 (5வது தொடர்) |
ஆத்திரேலியாவின் வடகீழ் கரையோரத்திற்கு அப்பால் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பெருந்தடுப்புபவளப் பாறையானது, புவியில் வாழும் அங்கிப்பிரிவொன்றால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மிக எளிமையான கட்டமைப்பை உடைய பவளப்பாறைகள் விலங்குகளால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இது 33,000 பவளப்பாறைகளையும் 300 பவளப் பாறை தீவுகளையும் கொண்டுள்ளது. இந்தப் பவளப்பாறை ஒரு சிக்கலான அமைப்பு முறையிலேயே உருவாகியுள்ளது.
பெரும் தடுப்புப் பவளத்திட்டு, உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும். இதனை விண்வெளியில் இருந்து காணமுடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் ஆக்கப்பட்டுள்ளது[6]. இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான பவள விழுதுகள் எனப்படும் நுண்ணிய உயிரினங்களால் ஆக்கப்பட்டுள்ளன [7]. உயிரியற் பல்வகைமைப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள பெரும் தடுப்புப் பவளத்திட்டு 1981 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது [1][2] CNN. சி.என்.என் (CNN) எனப்படும் ஆங்கில மொழித் தொலைக்காட்சிச் சேவை இதனை உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகவும் தெரிவு செய்துள்ளது. குயீன்சுலாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் இதனை மாநிலத்தின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது [8] இப் பவளத்திட்டின் பெரும் பகுதி, பெரும் தடுப்புப் பவளத்திட்டுக் கடல்சார் பூங்கா என்ற திட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அளவுக்கதிகமான மீன்பிடித்தல், சுற்றுலா போன்ற மனித நடவடிக்கைகளால் இப் பவளத்திட்டு பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது. இப் பவளத்திட்டுக்களுக்கும், அதன் சூழ்நிலை மண்டலத்துக்கும் இருக்கக்கூடிய இன்னொரு தாக்கம், இப்பகுதியில் வந்து விழும் நீரின் தரம் ஆகும். அத்துடன், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாரிய பவள வெளிறல் மற்றும் "முள்முடி நட்சத்திர மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியில் ஏற்படும் திடீர் நிகழ்வுகளின் தாக்கம் என்பனவும் குறிப்பிடத்தக்கவையாகும். 2012 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தின்படி 1985 இல் இருந்ததைக் காட்டிலும் இப்பவளத்திட்டு பாதியாகக் குறைந்துள்ளது எனக் கருதப்படுகிறது[9].
டொரெசு நீரிணை தீவினர் மற்றும் ஆத்திரேலியப் பழங்குடி மக்கள் நீண்டகாலமாக இப்பவளத்திட்டை அறிந்தும் பயன்படுத்தியும் வந்துள்ளனர். உள்ளூர் குழுக்களின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தில் இவ்விடம் ஒரு முக்கியமான பகுதியாக விளங்கியிருக்கிறது. ஆத்திரேலியாவிலுள்ள வொயிட்சண்டே தீவுகள், கெய்ன்சு போன்ற பகுதிகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மிகவும் பிரபலமான இடங்களாக உள்ளன. சுற்றுலாத்துறை ஒரு முக்கியமான பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையாகக் கருதப்பட்டு பல ஆயிரம் பில்லியன் டாலர்களை ஈட்டித்தருகிறது. நவம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் பெருந்தடுப்புப் பவளத்திட்டின் கடலடிக் காட்சியை முப்பரிமாணக் காட்சியாகக் காண்பதற்கான வசதியைச் செய்துள்ளது [10].
முன்னதாக நினைத்ததைவிட இப்பவளத்திட்டில் பவள வெளிரல் பரவலாக மிகுந்து இருப்பதாக 2016 ஆம் ஆண்டு மார்ச் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் வெப்பநிலை வெப்பமடைவதன் விளைவாக திட்டின் வடபகுதி கடுமையாக பாதிக்கப்படைந்திருந்தது[11]. அக்டோபர் 2016 ல் அவுட்சைடு பத்திரிகை இத்திட்டிற்காக ஒரு இரங்கல் செய்தியை வெளியிட்டது [12]. இந்தக் கட்டுரை முதிர்ச்சியில்லா அறிக்கையாக இருப்பதாகவும், பவளத்திட்டின் பின்னடைவை மேம்படுத்தும் முயற்சிகள் தடுக்கப்படுவதாகவும் இவ்விரங்கல் செய்தி விமர்சிக்கப்பட்டது [13].
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், நேச்சர் பத்திரிகை ஒரு பத்திரிகை ஒன்றை வெளியிட்டது. பவளத்திட்டின் வடக்கு பகுதி நீட்சியின் 800 கிலோமீட்டர் நீளத்தில் பெரும்பகுதிகள் அழிந்துவிட்டதாக 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நேச்சர் பத்திரிகை ஒரு பத்திரிகைச் செய்தியை வெளியிட்டது. இந்த அழிவு உலகளாவிய காலநிலை மாற்றத்தின் விளைவு என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்[14].
நிலவியலும் புவியியலும்
தொகுகிழக்கு ஆத்திரேலிய கார்டில்லெரா மலைத்தொடரின் ஒரு தனித்துவமான அம்சமாக பெருந்தடுப்பு பவளத்திட்டு கருதப்படுகிறது. இது சிறிய முர்ரே தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது [15]. தென்கோடித் தீவான லேடி இலியட் தீவுக்கு வடக்கில், வடக்குக் கோடித் தீவும் பப்புவா நியூ கினியின் தெற்கு கடற்கரையுமான பிரம்பிள் கேய் நகருக்கும் பிரேசர் தீவுக்கும் இடையிலுள்ள பெயரிடப்படாத செல்வழியில் அமைந்துள்ள டொரெசு நீரிணையிலிருந்து இது வருகிறது. பிரம்பிள் கேய் நகரத்திலிருந்து தென்கிழக்கில் 1915 கிலோமீட்டர் தொலைவில் லேடி இலியட் தீவு அமிந்துள்ளது.
அண்மை ஊழிக்காலம் தொடங்கி ஆத்திரேலியா ஆண்டிற்கு 7 செமீ (2.8 அங்குலம்) என்ற விகிதத்தில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது என்று கண்டத்தட்டு இயக்கவியல் கோட்பாடு குறிப்பிடுகிறது[16]. புவித்தட்டுகளின் உயர்வால் கிழக்கு ஆத்திரேலியாவின் வடிநிலப்பகுதியை குயின்சுலாந்தில் 400 கிலோமீட்டர் தொலைவுக்குப் பிரித்தது. இதே நேரத்தில் குயின்சுலாந்தின் எரிமலை வெடிப்புகளால் மத்திய மற்றும் கவச எரிமலைகள் உருவாகவும் எரிமலைக் குழம்பு பாய்வுகளுக்கும் வழிவகுத்தது [17] Some of these became high islands.[18]. இவற்றில் சில உயர்ந்த தீவுகளாயின .[18]. பவளக்கடல் வடிநிலம் அமைக்கப்பட்ட பிறகு, பவளப் பாறைகள் வடிநிலத்தில் வளர ஆரம்பித்தன. ஆனால் சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலிருந்து வட குயின்சுலாந்து வெப்ப மண்டலத்தின் தென்பகுதியில் உள்ள மிதமான நீர்நிலையில்தான் இருந்தது. இக்குளிர்ச்சியான சூழல் பவளத்திட்டுகளின் வளர்ச்சியை ஊக்குவித்தது [19]. பெருந்தடுப்பு பவளத் திட்டின் வளர்ச்சி வரலாறு சிக்கலானதாகும். குயின்சுலாந்து வெப்பமண்டல கடல் பகுதிக்குச் சென்ற பின்னர், கடல் மட்ட மாறுபாடுகளால் பவழப்பாறைகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெரிதும் பாதிப்படைந்தன [20]. ஆண்டிற்கு 1 முதல் 3 சென்டிமீட்டர் (0.39 முதல் 1.18 அங்குலம்) வரை பவளத்திட்டுகளின் விட்டம் அதிகரிக்க இயலும். மேலும் செங்குத்தாக 1 முதல் 25 செ.மீ வரை (0.39 முதல் 9.84 அங்குலம் வரை) உயர்ந்தும் வளரும்; இருப்பினும், சூரிய ஒளியின் தேவை காரணமாக இவை 150 மீட்டர் (490 அடி) ஆழத்திற்கு மேல் மட்டும் வளரும், கடல் மட்டத்திற்கு மேல் இவற்றால் வளர முடியாது [21].
24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் குயின்சுலாந்து வெப்ப மண்டல நீரில் ஓரமாகத் தள்ளப்பட்டபோது சில பவளங்கள் வளர்ந்தன [22],ஆனால் ஒரு வண்டல் படிவுக்காலம் விரைவில் உருவாக்கப்பட்டு பெரும் பிளவு வீச்சின் அரிப்பு விளைந்தது. ஆற்று வடிநிலங்கள், பவளப்பாறைகள், கடலடி மென்தரைகள், மற்றும் கலங்கல் நீர்மப்படிவுகள் தோன்றி பவள வளர்ச்சிக்கான பொருத்தமற்ற நிலைமைகளை உருவாக்கின. 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் மேலும் கணிசமாக குறைந்தது. இதனால் மேலும் மேலும் வண்டல் மிகுதியானது. வண்டலிலிருந்து பவளப்பாறைகளின் உட்கூறுகள் வளரவேண்டியதாக இருந்தது. இவற்றின் விளிம்பு வண்டலுக்கு தூரத்திலிருந்ததால் , பவளப்பாறைகளின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. கூடுதலாக, சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சூடான இடைக்கழி காலம் இருந்தது. அப்போது அதிக கடல் மட்டங்களும் 4 ° செல்சியசு வெப்பநிலை மாற்றம் கொண்ட நீரும் இருந்தது [23].
மேலும் வாசிக்க
தொகு- Bell, Peter (1998). AIMS: The First Twenty-five Years. Townsville: Australian Institute of Marine Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-642-32212-8.
- Bowen, James; Bowen, Margarita (2002). The Great Barrier Reef : history, science, heritage. Cambridge : Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-82430-3.
- Done, T.J. (1982). "Patterns in the distribution of coral communities across the central Great Barrier Reef". Coral Reefs 1 (2): 95–107. doi:10.1007/BF00301691. https://archive.org/details/sim_coral-reefs_1982-10_1_2/page/95.
- "Research Publications". Great Barrier Reef Marine Park Authority. Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
- Hutchings, Pat; Kingsford, Mike; Hoegh-Guldberg, Ove (2008). The Great Barrier Reef: Biology, Environment and Management. CSIRO Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-643-09557-1.
- Lucas, P.H.C.; et al. (1997). The outstanding universal value of the Great Barrier Reef World Heritage Area. Great Barrier Reef Marine Park Authority. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-642-23028-5.
{{cite book}}
: Explicit use of et al. in:|first=
(help) - Mather, P.; Bennett, I., ed. (1993). A Coral Reef Handbook: A Guide to the Geology, Flora and Fauna of the Great Barrier Reef (3rd ed.). Chipping North: Surrey Beatty & Sons Pty Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-949324-47-7.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 UNEP World Conservation Monitoring Centre (1980). "Protected Areas and World Heritage – Great Barrier Reef World Heritage Area". Department of the Environment and Heritage. Archived from the original on 11 May 2008. பார்க்கப்பட்ட நாள் 14 March 2009.
- ↑ 2.0 2.1 "The Great Barrier Reef World Heritage Values". பார்க்கப்பட்ட நாள் 3 September 2008.
- ↑ The Great Barrier Reef World Heritage Area, which is 348,000 km squared, has 2900 reefs. However, this does not include the reefs found in the Torres Strait, which has an estimated area of 37,000 km squared and with a possible 750 reefs and shoals. (Hopley, p. 1)
- ↑ Fodor's. "Great Barrier Reef Travel Guide". பார்க்கப்பட்ட நாள் 8 August 2006.
- ↑ Department of the Environment and Heritage. "Review of the Great Barrier Reef Marine Park Act 1975". Archived from the original on 18 October 2006. பார்க்கப்பட்ட நாள் 2 November 2006.
- ↑ Sarah Belfield (8 பெப்பிரவரி 2002). "Great Barrier Reef: no buried treasure". Geoscience Australia (Australian Government). Archived from the original on 1 October 2007. பார்க்கப்பட்ட நாள் 11 June 2007.
- ↑ Sharon Guynup (4 September 2000). "Australia's Great Barrier Reef". Science World இம் மூலத்தில் இருந்து 8 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708000309/http://findarticles.com/p/articles/mi_m1590/is_1_57/ai_65370824. பார்த்த நாள்: 11 June 2007.
- ↑ CNN (1997). "The Seven Natural Wonders of the World" இம் மூலத்தில் இருந்து 21 July 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060721011803/http://www.cnn.com/TRAVEL/DESTINATIONS/9711/natural.wonders/. பார்த்த நாள்: 6 August 2006.
- ↑ Eilperin, Juliet (1 October 2012). "Great Barrier Reef has lost half its corals since 1985, new study says". The Washington Post. http://www.washingtonpost.com/national/health-science/great-barrier-reef-has-lost-half-its-corals-since-1985-new-study-says/2012/10/01/c733025c-0bda-11e2-bb5e-492c0d30bff6_story.html?wprss=rss_social-nation-headlines&Post+generic=%3Ftid%3Dsm_twitter_washingtonpost. பார்த்த நாள்: 1 October 2012.
- ↑ "Google Launches Underwater Street View". 16 November 2014.
- ↑ "Great Barrier Reef coral bleaching more widespread than first thought". The Sydney Morning Herald. 31 March 2016. http://www.smh.com.au/environment/great-barrier-reef-coral-bleaching-more-widespread-than-first-thought-surveys-reveal-20160331-gnux7x.html. பார்த்த நாள்: 2 April 2016.
- ↑ Jacobsen, Rowan (11 October 2016). "Obituary: Great Barrier Reef (25 Million BC-2016)". Archived from the original on 16 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூலை 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ CNN, Sophie Lewis. "The Great Barrier Reef is not actually dead".
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "Large Sections of Australia’s Great Reef Are Now Dead, Scientists Find", New York Times, 16 March 2017 https://www.nytimes.com/2017/03/15/science/great-barrier-reef-coral-climate-change-dieoff.html
- ↑ A. K. Lobeck (1951). Physiographic Diagram of Australia. New York: The Geological Press, Columbia University.
to accompany text description and geological sections which were prepared by Joseph Gentili and R.W. Fairbridge of the University of Western Australia
- ↑ Davies, P.J., Symonds, P.A., Feary, D.A., Pigram, C.J. (1987). "Horizontal plate motion: a key allocyclic factor in the evolution of the Great Barrier Reef". Science 238 (4834): 1697–1700. doi:10.1126/science.238.4834.1697. Bibcode: 1987Sci...238.1697D.
- ↑ Hopley, p. 19
- ↑ 18.0 18.1 Hopley, p. 26
- ↑ Hopley, p. 27
- ↑ Hopley, pp. 27–28
- ↑ MSN Encarta (2006). "Great Barrier Reef".. அணுகப்பட்டது 11 December 2006. பரணிடப்பட்டது 2009-10-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Hopley, p. 29
- ↑ Hopley, p. 37
புத்தக விவரணம்
தொகு- Hopley, David; Smithers, Scott G.; Parnell, Kevin E. (2007). The geomorphology of the Great Barrier Reef: development, diversity, and change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-85302-8.
வெளி இணைப்புக்கள்
தொகுபொதுவகத்தில் Great Barrier Reef பற்றிய ஊடகங்கள்
- "How the Great Barrier Reef Works". howstuffworks.com.
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Great Barrier Reef
- World heritage listing for Great Barrier Reef
- Great Barrier Reef Marine Park Authority
- CRC Reef Research Centre பரணிடப்பட்டது 2014-03-02 at the வந்தவழி இயந்திரம்
- "Dive into the Great Barrier Reef". National Geographic.
- Battle for the Reef – Four Corners – ABC.au
- The Great Barrier Reef