பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா

(பெரும் ஆஸ்திரேலிய பைற் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா (Great Australian Bight) என்பது ஆஸ்திரேலியாவின் தெற்குக் கரையோரத்தின் நடு மற்றும் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரும் விரிகுடா (bay) ஆகும்.

பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா (நாசா)

இவ்விரிகுடா இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியின் ஒரு பகுதியாகும். இது கிழக்கே மேற்கு ஆஸ்திரேலியாவின் மேற்கு கேப் ஹவ் வரை நீண்டுள்ளது. இதன் வரையறுக்கப்பட்ட எல்லை மேற்கு ஆஸ்திரேலியாவின் கேப் பாஸ்லி முதல் தெற்கு ஆஸ்திரேலியாவின் கேப் கார்னோ வரை 1,160 கிமீ (720 மைல்) தூரம் நீண்டுள்ளது. இவ்வவிரிகுடாவை அண்டியுள்ள நீர்ப்பகுதி ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெருங்கடல் என்று அழைக்கப்படாமல், தெற்குப் பெருங்கடல் என அழைக்கப்படுகிறது.

கண்டுபிடிப்பு

தொகு

பெரும் ஆஸ்திரேலிய விரிகுடாவை முதன்முதலாக 1627 ஆம் ஆண்டில் சென்றடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமி கப்டன் தைசன் என்பவர். பின்னர் ஆங்கில மாலுமி மத்தியூ பிலிண்டேர்ஸ் 1802 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியக் கண்டத்தை சுற்றிவரும் போது இவ்விரிகுடாவையும் சுற்றிவந்தார்.

 
பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா

இவ்வளைகுடா பல ஆண்டுகாலமாக மாலுமிகளால் மீன்பிடித்தலை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். Bluefin tuna இங்கு பெருமளவில் காணப்படுகிறது.

விரிகுடாவின் கரையோரங்களில் குடியெற்றத்திட்டங்கள் காணப்படுகின்றன. செடூனா, யூக்லா போஒன்ற குடியேற்றப் பகுதிகளில் இருந்து இவ்விரிகுடாவை நோக்கி வருவதற்கு வசதிகள் உண்டு.

வெளி இணைப்புகள்

தொகு