ஜியோவன்னி டொமினிகோ காசினி

இத்தாலிய/பிரெஞ்சு கணிதவியலாளரும் வானியலாளரும் பொறியியலாளரும் கணியவியலாளரும்

ஜியோவன்னி (Giovanni) அல்லது ஜியோவான் (Giovan) அல்லது ஜியான் (Gian) டொமினிகோ காசினி (Domenico Cassini) (8 ஜூன் 1625 – 14 செப்டம்பர் 1712)ஓர் இத்தாலிய வானியலாளரும் கணிதவியலாளரும் பொறியாளரும் கணியவிய்ல் வல்லுனரும் ஆவார்.

ஜியோவன்னி டொமினிகோ காசினி
Giovanni Domenico Cassini
பிறப்பு(1625-06-08)8 சூன் 1625
பெரினால்டோ, ஜெனோவா குடியரசு
இறப்பு14 செப்டம்பர் 1712(1712-09-14) (அகவை 87)
பாரீசு, பிரான்சு
வாழிடம்இத்தாலி, பிரான்சு
தேசியம்இத்தாலியர் பிரெஞ்சுக்காரர்
துறைகணிதவியல், கணியம் (சோதிடம்) வானியல், பொறியியல்
பணியிடங்கள்பொலோகுனா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஜெனோவா இயேசுவழிக் கல்லூரி
அறியப்படுவதுகாசினிப் பிரிவு, காசினி விதிகள், காசினி முட்டையுரு;
காரிக்கோளின் வலயங்களின் பிரிவுகளை முதன்முதலாக நோக்கியவர்

காசினி பெரினால்டோவில் பிறந்தார்.[1][2] பெரினால்டோ அப்போது நைசு நாட்டின் இம்பீரியாவுக்கு அருகில் சாவோய் துச்சியின் பகுதியாக இருந்தது .[3][4] இவர் தன் வானியல், பொறியியல் பங்களிப்புகளுக்காகப் பெயர்பெற்றவர். இவர் காரிக்கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டுபிடித்தார், காரிக்கோள் வலயங்களின் பிரிவுகளையும் கண்ணுற்றார் காசினிப் பிரிவு இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டது. இவர்தான் முதன்முதலில் பிரான்சின் நிலக் கிடப்பியல் வரைபடத் திட்டத்தைத் தன் குடும்பத்தில் மேற்கொண்டு வரைந்தார்.

இவரது நினைவாக, 1997 இல் ஏவப்பட்ட காசினி விண்ணாய்கலம் பெயர் இடப்பட்டது. இக்கலம் காரிக்கோளுக்கு நான்காவதாக வந்த விண்கலமாகும். இதுவே முதன்முறையாக காரிக்கோளை முதன்முதலாகச் சுற்றிவந்தது.

வாழ்க்கை தொகு

இத்தாலி வாழ்க்கை தொகு

காசினி தசுக்கான் நகர யாகோபோ காசினிக்கும் கியூலியாகுரோவெர்சிக்கும் மகனாகப் பிறந்தார். ஒருசெல்வந்தப் பயில்நிலை வானியலாளரான மார்க்குவிசு கார்னெலியோ மல்வாசியாவுடன் பொலோகுனா அருகில் இருந்த பாஞ்சானா வான்காணகத்தில் ஒருபதவியில் பணிபுரிய ஒப்புக்கொண்டார். காசினியின் வாழ்க்கையின் முதற்பகுதி இப்படி தான் 1648 இல் தொடங்கியது.[5] இவர் பாஞ்சானா வான்காணகத்தில் பணிபுரிந்த போது, தன் கல்வியை ஜியோவன்னி பாட்டிசுட்டா இரிக்கியோலி, பிரான்சிசுக்கோ மரியா கிரிமால்டி ஆகியோரிடம் படித்து முடித்துள்ளார். பொலோகுனா சட்டமன்றக் குழு 1650 இல் பொலோகுனா பல்கலைக்கழக வானியல் துறையின் முதன்மைக் கட்டிலில் காசினியைப் பணியமர்த்தியது.[5] இவர் பொலோகுனாவைச் சார்ந்த சான் பெத்ரோனியோவில் சான் பெத்ரோனியா பேசிலி எனும் ஒரு சூரியக் கடிகையை உருவாக்கினார். இது அண்டம் புவிமைய அமைப்பா எனும் விவாதத்தை வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளது. பாரீசு வான்காணகத்தில் உதவிபுரிய சோல்பெர்ட்டு பாரீசுக்கு காசினியை அழைக்கும் வரை இவர் பொலோகுனாவைலேயே தங்கியிருந்தார். இவர் 1669 பிப்ரவரி 25 இல் பாரீசுக்குப் போக பொலோகுனாவில் இருந்து புறப்பட்டார்.[5]

பிரான்சு புலம்பெயர்தல் தொகு

 
காசினி காலத்துப் பாரீசு வான்காணகப் பொறிப்பு. வலதுபுறத்தில் உள்ளது "மார்லி கோபுரம் ". மார்லி எந்திரத்தைப் பிரித்தெடுத்த பகுதிகள் காசினியால் இங்கே கொணரப்பட்டு நெடுங்குவிய வான்தொலைநோக்கிகளைக் கட்டியமைக்கப் பயன்படுத்தப்பட்டன.

காசினி 1669 இல் பாரீசு நகருக்குச் சென்றார். இவர பாரீசு வான்காணகத்தை கட்டியமைக்க, பதினான்காம் உலூயிசு எனும் பாரீசின் மன்னர் உதவினார். இந்த வான்காணகம் 1671 இல் திறக்கப்பட்டது; காசினி இதன் இயக்குநராக வாழ்நாள் முழுவதும் தான் இறந்த 1712 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார். கடைசி 41 ஆண்டுகளும் இவர் பதினான்காம் உலூயிசுக்கு வானியலாளராகவும் அரசருக்குக் கணியம்(சோதிடம்) கணிப்பவராகவும் இருபதவிகளிலும் இருந்துள்ளார். என்றாலும், தன் இளமையிற் பயின்ற கணியத்தை விட இவர் வானியலில் தன் நேரத்தைக் கூடுதலாகச் செலவிட்டார்.

இக்காலத்தில் இவர் தனது நெட்டாங்கு தீர்மானிப்பு முறையைப் பின்பற்றி பிரான்சின் பரப்பளவை முதன்முதலாகத் துல்லியமாகக் கணித்தார். நாட்டின் பரப்பளவு எதிர்பார்த்ததைவிட குறைவாக் அமைந்தது. எனவே அரசர் தான் அனைத்துப் போர்களிலும் வென்ற பகுதிகளைவிட, தன் நாட்டை மிகவும் குறைத்து, அதைக் காசினி பறித்துவிட்டதாகக் குறைகூறினார்.

இவர் 1673 ஜூலை 14 இல் பிரான்சின் குடிமகனுக்குரிய நலங்களை பெற்றார். இவர்1674 இல் ஜெனிவீவே இலசுத்திரேவை மணந்தார். இவரது மனைவி கிளெர்மான்ட்டு, காம்ப்தே சார்ந்த மாதண்ட நாயகரின் மகளாவார். " இந்தத் திருமணம் வழி காசினி இரு மகன்களைப் பெற்றார்; இவரது இளைய மகன் யாக்குவசு காசினி புவியளவை இயலாளராகவும் வானியலாளராகவும் இரண்டாம் காசினி எனும் பெயரில் விளங்கினார்."[5]

இவர் 1711 இல் கண்பார்வையிழந்தார். இவர் 1712 செப்டம்பர் 14 இல் தன் 87 ஆம் அகவையில் இறந்தார்.[1]

இவர் கீழ்வரும் பல பெருந்தகைமைகளுக்கு உரியவர் ஆவார்:

 • காரிக்கோள் வலயப் பிரிவுகளை முதலில் கண்டுபிடித்தல்.
  • காசினி வலயப்பிரிவு
 • காசினி விதிகள்
 • காசினி முட்டைவடிவம்

வானியல் தொகு

இவர் 1648 முதல் 1669 வரை பாஞ்சானோ வான்காணக வானியலாளராக இருந்தார். இவர் 1650 இல் பொலோகுனா பல்கலைக்கழக வானியல் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். பிறகு, 1671 இல் பாரீசு வான்காணக இயக்குரானார். இவர் தன்னைப் புதிய நாட்டுக்கேற்ப தகவமைத்துக் கொண்டார். எனவே, இவர் ழீன்-தொமினிக் காசினி என அழைக்கப்படுவதுமுண்டு; இவரது கொள்ளுப் பேரனின் பெயரும் தொமினிக் காம்ப்தே தெ காசினி ஆகும்.

காசினி செவ்வாய் மேற்பரப்பின் குறிப்புகளை நோக்கீடு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டார். ஏற்கெனவே அய்கென்சு இவற்றைக் கண்ணுற்றும் வெளியிடவில்லை; செவ்வாய், வியாழன் கோள்களின் சுழற்சி நேரங்களைத் தீர்மானித்தார். காரிக்கோளின் இலாப்பெட்டசு நிலவை1671 இலும் இரியா நிலவை 1672 இலும் கண்டுபிடித்தார். மேலும், இவர் டெத்திசு நிலவையும் தயோன் நிலவையும் 1684 இல் கண்டுபிடித்தார்.[6] இந்த நான்கு காரிக்கோளின் நிலவுகளையும் காசினி தான் முதலில் கண்டறிந்து அவற்றுக்கு சிடெரல் லொடொயிசியா ( உலூயிசு விண்மீன்கள்) எனப் பெயரிட்டார். இதில் இலாப்பெட்டசு விண்மீனும் உள்ளடங்கும். மேலும், இதன் பிறழ்நிலையான மிகப் பேரளவு பொலிவு மாற்றம் அதன் ஒரு அரைக்கோளத்தில் இருக்கும் கருப்புப் பொருளாலே ஏற்படுவதாக விளக்கவும் செய்தார். இப்பகுதி இப்போது காசினிப் பகுதி என இவரது நினைவாக வழங்கப்படுகிறது. மேலும் இவர்1675 இல் காரிக்கோளின் வலயங்களின் காசினிப் பிரிவையும் கண்டறிதார்.[5] இவரும் இராபெர்ட் ஊக்கும் இணைந்து வியாழனின் பெருஞ்செம்பொட்டைக் கண்டுபிடித்தனர்1665 இல். காசினி 1690 வாக்கில் வியாழனின் வளிமண்லத்தின் வேறுபடும் சுழற்சியை முதன்முதலாக நோக்கினார்.

இவர் பாரீசிலேயே இருந்தபடி, 1672 இல் பிரெஞ்சு கயானா, சியென்னேவுக்கு ழீன் இரிச்சர் எனும் உடன்பணியாளரை அனுப்பினார். இவர்கள் இருவரும் சேவ்வாயின் நோக்கீடுகளைச் செய்து இடமாறு தோற்றப்பிழையைக் கண்டறிந்து புவியில் இருந்து செவ்வாயின் தொலைவைக் கண்டறிந்தனர். இது சூரியக் கோள்களின் தொலைவுகளைக் கண்டறிய வழிவகுத்தது: ஏற்கெனவே சூரியக் கோள்களின் சார்புத் தொலைவுகள் வடிவியல் முறையில் அறியப்பட்டிருந்ததால், ஒரேயொரு சூரிய்ன் - கோளிடைத் தொலைவு இவற்றைக் கணக்கிட தேவைபட்டது.

காசினி முதலில் சூரியக் குடும்பம் புவிமையமுடையது எனக் கருதியிருந்தார். ஆனால், பிந்தைய நோக்கீடுகள் அவரை டைக்கொ பிராகியின் அதன்வழி நிக்கோலாசு கோப்பர்நிக்கசின் சூரியக் குடும்பப் படிமத்தை ஏற்கவைத்தது. " இவர் 1659 இல் டைக்கோ கருதுகோளின்படியான சூரியக் குடும்பக் கோள் படிமத்தை முன்வைத்தார். இவர் 1661 இல் கெப்ளரின் முறையைச் சார்ந்து, ஒளிமறைப்பின் அடுத்தடுத்த கட்டங்களைப் படம்பிடிக்கும் ஒரு முறையை உருவாக்கினார். மேலும், இவர் 1662 இல்சான் பெத்ரோனியாவில் எடுத்த நோக்கீடுகளப் பயன்படுத்திச் சூரியனுக்கான புதிய அட்டவணைகளை வெளியிட்டார்." [5]/> காசினி தன் புவி அளவீடுகளின்படி அதன் வட, தென் முனைகள் மேலும் நீட்டமாக அமையவேண்டி இருத்தலைக் கருதி நியூட்டனின் ஈர்ப்பு விதிகளைப் பிழைபட்டதாக அவற்றின் ஏற்புடைமையைப் புறந்தள்ளினார். இந்தக் கருப்பொருளின் விவாதம் நியூட்டனுக்குச் சார்பாக, 1736 இலிருந்து 1744 வரை நடத்தப்பட்ட புவியளவையியல் திட்டத்துக்கும் பியேர் உலூயிசு மொரியா மவுப்பெர்ட்டுயிசு நடத்திய இலாப்போனிய தேட்டத்துக்கும் பிறகே முடிவுக்கு வந்தது.

கலீலிய நிலவுகளின் ஒளிமறைப்பு நேரங்களைக் கலீலியோ கூறிய முறைப்படி, பயன்படுத்திக் காசினி முதன்முதலாக புவி நெட்டாங்குகளை வெற்றிகரமாக அளந்தார்.

ஜியோவன்னி தொமினிக்கோ காசினி 1683 இல் புவியின் வட, தென்முனைகளின் கனல்களுக்கான(காலொளிகளுக்கான) சரியான விளக்கத்தை முன்வைத்தார். சூரியனில் இருந்து வான நீள்வட்டத் தளத்தில் விரிவுறும் மங்கலான இக்கனல்கள் கோளிடைவெளியில் நிலவும் அண்டத் தூசுத்துகள்களால் உருவாகின்றன. இந்த அண்டத் தூசுகள் சிறுகோள்களின் மொத்தலாலும் வால்வெள்ளிகளின் மீது பதங்கமாகிக் கவிந்த பனித்துகள்களாலும் ஆனவை என விளக்கினார்."[7]

கணியவியல் (சோதிடம்) தொகு

வானின் மீதேற்பட்ட ஈர்ப்பால், இவரது கவனம் முதலில் கணியவியலைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. எனவே, இவர் இளமையில் கணியவியல் நூல்களை அகன்றாழ்ந்து படித்துள்ளார். இந்த விரிவான கணியவியல் அறிவே இவருக்கு வானியலாளர் பதவியை ஈட்டித் தந்துள்ளது. பின்னர், இவர் தன் வாழ்வில் வானியலிலேயே பெரிதும் தன் கவனத்தைக் குவித்துள்ளார். இவர் தொடர்ந்து அறிவியல் புரட்சிக்கு ஆட்பட்டநிலையில், கணியவியல் ஆர்வத்தில் இருந்து விடுபட்டுள்ளார்.

கணியவியலில் தனியாத பேராவம் கொண்ட, பொலோகுனவின் சட்டமன்ற உறுப்பினரான மார்க்குவிசு கார்னெலியோ மல்வாசியா 1645 இல் காசினியை பொலோகுனாவுக்கு வரவழைத்து, அப்போது கட்டுமானத்தில் இருந்த பாஞ்சானோ வான்காணகத்தில் ஒரு பதவியில் அமர்த்தினார். அங்கே இவர்கள் இருவரும் வேகமாக வளர்ந்துவரும் வானியல் முறைகளையும் கருவிகளையும் பயன்படுத்தி, புதிய, சிறந்த, மேலும் துல்லியமான கோளிருப்பு முன்கணிப்புப் பட்டியல்களைக் கணியவியலுக்காக கணக்கிடுவதில் தம் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டுள்ளனர்.

பொறியியல் தொகு

காசினி நடைமுறைப் பணிகளில் நெட்டாங்கு அளவீட்டைப் பயன்ப்படுத்த விரும்பி, 1653 இல் ஒரு பெரிய நெட்டாங்குக்கான உருவரையைத் திட்டமிட்டார். இப்பணி அரியதென த் தெளிவாகினாலும், அதைக் கட்டியமைக்க துல்லியமான கணக்கீடுகளைச் செய்து, கட்டுமானத்தில் முற்றிலும் வெற்றி பெற முயன்றார். இந்த வெற்றி இவருக்குப் பரவலான பெரும்புகழை ஈட்டியது. மேலும், பொறியியல், கட்டகப் பணிகளில் இவர் ஈடுபட உதவியது.[5]

ஒன்பதாம் போப்பு கிளெமென்ட்டு இவரைக் கோட்டைகள் கட்டல், ஆற்றுநீர் மேலாண்மை, போ ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஆய்வு போன்றவற்றில் பணிக்கமர்த்தியுள்ளார். " காசினி போ ஆற்றின் வெள்ளப்பெருக்கு குறித்தும் அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல நினைவு நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்; மேலும், இவர் பயன்முறை நீரியக்கவியலிலும் செய்முறைகளை மேற்கொண்டுள்ளார்."[5] இவர்1663 இல் கோட்டைகளின் கண்காணிப்பாளராகவும் 1665 இல் பெருகியாவின் ஆய்வாளராகவும் பதவி உயர்வளித்து,[5] போப்பு காசினியைத் தொடர்ந்து தன்னோடு பணிபுரியுமாறு புனித ஆணைகள் வழங்கினார். ஆனால், காசினி இந்த ஆணையை வானியலில் முழுநேரமாக ஈடுபட, மறுத்துவிட்டுள்ளார்.

காசினி 1670 களில், கெம்மா பிரிசியூவின் முக்கோண அளவியல் முறையைக் கையாண்டு பிரெஞ்சு நாட்டின் நிலக்கிடப்பியல் படத்தை உருவாக்கும் திட்டம் ஒன்றில் பணியாற்றத் தொடங்கினார். இத் திட்டம் யாக்குவசு காசினி எனும் இவரது மகனாலும் தொடரப்பட்டது. இறுதியாக, இந்தத் திட்டம் கானினியின் பேரனாகிய சீசர் பிராங்குவுய் காசினி தெ தூரியால் முடிக்கப்பட்டது. இது 1789 இல் கார்த்தே தெ காசினி (காசினி நிலப்படங்கள்) எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது[8] or 1793.[9] இது தான் ஒரு முழுநாட்டுக்குரிய முதல் நிலக்கிடப்பியல் படமாகும்.

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 "Giovanni Domenico Cassini (June 8, 1625 - September 14, 1712)". Messier Seds.org. பார்க்கப்பட்ட நாள் 31 October 2012.
 2. "Giovanni Domenico Cassini: The rings and moons of Saturn". Surveyor in Berlin.de. Archived from the original on 24 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 31 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 3. Augusto De Ferrari (1978), "Cassini, Giovan Domenico" Dizionario Biografico degli Italiani 21 (Rome: Istituto dell'Enciclopedia Italiana).
 4. Gandolfo, Andrea. La provincia di Imperia: storia, arti, tradizioni. Blue Edizioni, 2005. 
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 Cassini, Gian Domenico (Jean-Dominique) (Cassini I). Complete Dictionary of Scientific Biography. Detroit: Charles Scribner's Sons, 2008. பக். 100–104. retrieved 30 May 2013. 
 6. Van Helden, Albert. "The beginnings, from Lipperhey to Huygens and Cassini". பார்க்கப்பட்ட நாள் 4 June 2013.
 7. Osawa, Takahito. "Noble gas compositions of Antarctic micrometeorites collected at the Dome Fuji Station in 1996 and 1997". பார்க்கப்பட்ட நாள் 4 June 2013.
 8. "Cesar-Francois Cassini de Thury (French surveyor) - Encyclopedia Britannica". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.
 9. "How topographic map is made - making, history, used, History, Map Scales, Symbols, and Colors, The Manufacturing Process of topographic map, Quality Control, The Future". Madehow.com. 2013-09-02. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.

மேலும் படிக்க தொகு

 • Barkin, Iu. V. (1978). "On Cassini's laws". Astronomicheskii Zhurnal 55: 113–122. Bibcode: 1978SvA....22...64B. 
 • Connor, Elizabeth (1947). "The Cassini Family and the Paris Observatory". Astronomical Society of the Pacific Leaflets 5: 146–153. Bibcode: 1947ASPL....5..146C. 
 • Cassini, Anna, Gio. Domenico Cassini. Uno scienziato del Seicento, Comune di Perinaldo, 1994. (Italian)
 • Giordano Berti (a cura di), G.D. Cassini e le origini dell’astronomia moderna, catalogo della mostra svoltasi a Perinaldo -Im-, Palazzo Comunale, 31 agosto – 2 novembre 1997. (Italian)
 • Giordano Berti e Giovanni Paltrinieri (a cura di), Gian Domenico Cassini. La Meridiana del Tempio di S. Petronio in Bologna, Arnaldo Forni Editore, S. Giovanni in Persiceto, 2000. (Italian)
 • De Ferrari, Augusto (1978). "Cassini, Giovan Domenico". Dizionario Biografico degli Italiani (in Italian). Enciclopedia Italiana. பார்க்கப்பட்ட நாள் 2 December 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

External links தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Giovanni Domenico Cassini
என்பதில் ஊடகங்கள் உள்ளன.