லாக்கி
லாக்கி (Laki அல்லது லக்காகீகார்) என்பது தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஓர் எரிமலை ஆகும்.
லாக்கி | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 812 m (2,664 அடி) |
கிபி 934 இல் லாக்கி மலைத்தொடர் மிகப்பெரும் அளவில் தீக்கக்கியதில் 19.6 கிமீ³ (4.7 மைல்³) லாவாக்களை வீசியது.
1783-1784 காலப்பகுதியில் மீண்டும் இது தீக்கக்கியது. அப்போது கிட்டத்தட்ட 14 கிமீ³ (3.6 மைல்³) லாவாக்களையும் நச்சு புளோரீன்/கந்தக ஈரொக்சைட்டுக்களை வீசியதில் அப்பகுதியில் 50 விழுக்காடு கால்நடைகள் இறந்தன. இதனால் எழுந்த வறட்சி மற்றும் வறுமை காரணமாக சுமார் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.