சுகர்ணோ (Sukarno, சூன் 6, 1901 – சூன் 21, 1970),[3] இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பாற்றியவராவார்.

டா. பொ.
சுகர்ணோ
1949இல் சுகர்ணோ
முதல் இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்
பதவியில்
18 ஆகத்து 1945 – 12 மார்ச்சு 1967
பிரதமர்சுதான் இசுசாகிரீர்
அமீர் சாரிபுதீன்
முகமது அத்தா
அப்துல் அலீம்
முகமது நட்சிர்
சுக்கிமான் வீர்யோசன்டொயோ
விலோபோ
அலி சாசுட்ரோமிட்யோயோ
புர்கானுதின் அரகாப்
டியுன்டா கர்தவித்யாயா
Vice Presidentமொகமது அத்தா
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்சுகார்த்தோ
12வது இந்தோனேசியப் பிரதமர்- வாழ்நாளுக்கும் இந்தோனேசியா குடியரசுத்தலைவராக
பதவியில்
9 சூலை 1959 – 25 சூலை 1966
குடியரசுத் தலைவர்சுகர்ணோ
முன்னையவர்டியுயான்டா கர்தவித்யாயா
பின்னவர்பதவி கலைக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1901-06-06)6 சூன் 1901
சுரபயா, டச்சு கிழக்கிந்தியா[1][2]
இறப்பு21 சூன் 1970(1970-06-21) (அகவை 69)
ஜகார்த்தா, இந்தோனேசியா
அரசியல் கட்சிஇந்தோனேசிய தேசியக் கட்சி
துணைவர்(கள்)ஓடேரி
இங்கிட் கார்னசி
ஃபட்மாவதி (தி. 1943-1960)
அர்தினி
கர்டினி மனோப்போ
தேவி சுகர்னோ (தி. 1960-1970, மரணம் வரை)
அர்யாதி
யுரிகே சாங்கர்
எல்டி டிஜபார்
பிள்ளைகள்9
முன்னாள் கல்லூரிபாண்டுங் தொழினுட்பக் கழகம்
கையெழுத்து

நெதர்லாந்திடமிருந்து தமது நாடு விடுதலை பெற நடைபெற்ற போராட்டத்தின் தலைவராக சுகர்ணோ விளங்கினார். 1945 முதல் 1967 வரை இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பிலிருந்தார். டச்சு குடியேற்றவாதக் காலத்தில் தேசிய இயக்கத்தில் முதன்மைத் தலைவராக விளங்கினார். நெதர்லாந்தின் ஆட்சியில் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்; சப்பானியப் படைகளின் ஆக்கிரமிப்பின்போதுதான் விடுதலையானார். சப்பானியப் போருக்கு மக்களின் ஆதரவைப் பெற சுகர்ணோவும் அவரது கூட்டாளிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். சப்பானின் தோல்விக்குப் பிறகு சுகர்ணோவும் மொகமது அத்தாவும் ஆகத்து 17, 1945இல் இந்தோனேசியா விடுதலை பெற்றதாக அறிவித்தனர்; சுகர்ணோ முதல் அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார். நெதர்லாந்து மீண்டும் குடிமைப்படுத்த வெளியுறவுகள் மூலமும் படைத்துறை மூலமும் எடுத்த முயற்சிகளை முறியடிப்பதில் சுகர்ணோ முன்னணி வகித்தார். 1949இல் டச்சு அரசு இந்தோனேசியாவின் விடுதலையை ஏற்றுக்கொண்டது.

குழப்பமான நாடாளுமன்ற முறைக் காலத்திற்குப் பிறகு 1957இல் சுகர்ணோ "வழிகாட்டுதல்படியான மக்களாட்சி" என்ற தன்னிச்சையான ஆட்சியை நிறுவினார். இதனால் பல்வகைமை மிக்க நாட்டைப் பிரிக்கவும் கவிழ்க்கவும் முயன்ற எதிர்ப்புகளை அடக்கினார். 1960களில் இந்தோனேசியாவை இடதுசாரிக் கொள்கைகளுக்கு முன் நடத்தினார்; படைத்துறை, இசுலாமியவாதிகளுக்கு எதிராக இந்தோனேசிய பொதுவுடமைக் கட்சிக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளித்தார். மிகவும் ஆதிக்கவாதத்திற்கு எதிராக முற்போக்கான வெளியுறவுக் கொள்கைகளை அமலாக்கினார்; சோவியத் ஒன்றியத்திடமிருந்தும் சீன மக்கள் குடியரசிடமிருந்தும் நிதி உதவி பெற்றார். 1965இல் நடந்த செப்டம்பர் 30 இயக்கத்தின் பின்னணியில் இந்தோனேசிய பொதுவுடமைக் கட்சி கலைக்கப்பட்டது; சுகர்ணோ விலக்கப்பட்டு அவரது படைத்துறை தளபதியான சுகார்த்தோ பதவி ஏற்றார். தமது மரணம் வரை சுகர்ணோ வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

மேற்சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகர்ணோ&oldid=3357263" இலிருந்து மீள்விக்கப்பட்டது