பீ. ஜீ. வர்கீஸ்

பீ. ஜீ. வர்கீஸ் (பூபிலி ஜார்ஜ் வர்கீஸ், ஜூன் 21, 1927- 30 திசம்பர் 2014) என்பவர் ஒரு இதழிகையாளராகவும், தாளிகை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவரவார். ரமன் மகசசே விருது பெற்றவர்.

பூபிலி ஜார்ஜ் வர்கீஸ்
பிறப்பு(1927-06-21)21 சூன் 1927
பர்மா
இறப்பு30 திசம்பர் 2014(2014-12-30) (அகவை 87)
புது தில்லி, இந்தியா
கல்விதி டூன் பள்ளி
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
பணிஇதழிகையாளர், இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரசின் முன்னாள் ஆசிரியர்

பிறப்பும் கல்வியும்

தொகு

டேராடூன் பள்ளியில் பயின்றார். பின்னர், தில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் பொருளியல் கல்வி கற்றார். கேம்பிரிச்சில் திரினிட்டிக் கல்லூரியில் சேர்ந்து முதுநிலைப் பட்டம் பெற்றார்[1] .

இதழியல் பணி

தொகு

முதலில் டைம்சு ஆப் இந்தியாவிலும், பின்னர் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித் தாளிலும் பணியாற்றினார். இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்திலும் ஆசிரியராக இருந்தார்[2]. அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையை எதிர்த்தார்[3] . மனித உரிமைகளுக்குச் சார்பாகச் செயற்பட்டார். செய்தித்தாள்கள் ஆசிரியப்பணி எழுத்துப்பணி அல்லாது சில நூல்களையும் எழுதினார்

பிற செயல்கள்

தொகு
  • 1966-69 ஆண்டுகளில், அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியின் செய்தி ஆலோசகராகப் பணி புரிந்தார்.
  • கேரளத்தில் உள்ள மாவேலிக்கரா தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் தனி வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.
  • 2002 இல் குசராத்தில் நிகழ்ந்த வன்செயல்களை ஆராயும் பொருட்டு அமைக்கப் பட்ட குழுவில் இடம் பெற்றார்.
  • தில்லியில் கொள்கை ஆய்வு மையத்தில் பொறுப்பேற்று இருந்தார்.

நூல்கள்

தொகு
  • Waters of Hope (1990)
  • Winning the future (1994)
  • First Draft: Witness to Making of Modern India
  • Warrior of the Fourth Estate (2005)

விருதுகள்

தொகு
  • மகசேசே விருது (1975)
  • அசாம் சங்கரதேவ விருது (2005)
  • உபேந்திரநாத் பிரம சோல்டியர் விருது (2013)

மேற்கோள்

தொகு
  1. BG Verghese Writings and Commentaries
  2. "BIOGRAPHY of Boobli George Verghese". Ramon Magsaysay Award Foundation. September 1975. Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-09-25.
  3. The essential BG Verghese - Bangalore - DNA
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீ._ஜீ._வர்கீஸ்&oldid=3563835" இலிருந்து மீள்விக்கப்பட்டது