உலக இசை நாள்
உலக இசை நாள் (World Music Day,[1] Fête de la Musique, Music Day,[2] Make Music Day[3][4] என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள்.
உலக இசை நாள் | |
---|---|
![]() | |
வகை | உலக இசை |
நாள் | 21 சூன், ஆண்டுதோறும் |
அமைவிடம்(கள்) | பிரான்சு (ஆரம்பத்தில்) உலகளாவியது (தற்போது) |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 1981–இன்று |
Founded by | சாக் லாங், மோரிசு புளூரெட் |
வலைத்தளம் | |
அதிகாரபூர்வத் தளம் |
முதலாவது கோடைகால இசை நாள் கொண்டாட்டம் பிரான்சின் கலாச்சார அமைச்சர் சாக் லாங், மற்றும் பிரெஞ்சு இசையமைப்பாளர் மோரிசு புளூரெட் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது 1982 இல் பாரிசு நகரில் கொண்டாடப்பட்டது. பின்னர் இசை நாள் உலகெங்கிலும் 120 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.[5]
நோக்கம் தொகு
இரண்டு வழிகளில் இசையை மேம்படுத்துவது உலக இசை நாளின் நோக்கம் ஆகும்:
- "இசையை உருவாக்கு" என்ற முழக்கத்தின் கீழ், அமெச்சூர் மற்றும் தொழில்முறை இசைக்கலைஞர்கள் தெருக்களில் நிகழ்த்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
- பல இலவச இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் அனைத்து வகை இசைகளையும் பொதுமக்களை சென்றடைகின்றது.[6]
மேற்கோள்கள் தொகு
- ↑ "The World Music Day: How it came into being". India Today. 21 June 2013. http://indiatoday.intoday.in/story/the-world-music-day-how-it-came-into-being/1/284637.html. பார்த்த நாள்: 26 April 2015.
- ↑ "Music Day" இம் மூலத்தில் இருந்து 27 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170227062251/https://musicday.org.uk/. பார்த்த நாள்: 19 January 2017.
- ↑ "Free 'Make Music Day' festival coming in June". Associated Press. 23 April 2015 இம் மூலத்தில் இருந்து 25 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150425235219/http://www.myfoxny.com/story/28881547/free-make-music-day-festival-coming-in-june. பார்த்த நாள்: 26 April 2015.
- ↑ "Make Music Day". http://makemusicday.org/. பார்த்த நாள்: 26 April 2015.
- ↑ "La Fête De La Musique : Une Fête Nationale Devenue Un Grand Événement Musical Mondial" (in French) இம் மூலத்தில் இருந்து 26 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150426011737/http://fetedelamusique.culturecommunication.gouv.fr/Presentation-de-la-Fete. பார்த்த நாள்: 26 April 2015.
- ↑ "Marais: les gays privés de Fête de la Musique?". 15 January 2009 இம் மூலத்தில் இருந்து 15 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090115212919/http://www.tetu.com/rubrique/infos/infos_detail.php?id_news=13140.
வெளி இணைப்புகள் தொகு
- The French Culture Ministry's website on the Fête de la Musique (in French, international section also available in English)
- The Make Music Alliance's website on Make Music Day
- Hungama Artist Aloud World Music Day – Season 4 on BookMyShow.