பிரெட் அஸ்ரயர்

அமெரிக்க நடனக் கலைஞர், நடிகர் மற்றும் பாடகர் (1899-1987)

பிரெட் அஸ்ரயர் (மே 10, 1899யூன் 22, 1987) ஓர் அமெரிக்க நடிகர், நடனக் கலைஞர், நடன இயக்குனர், பாடகர். அக்கடமி விருது பெற்ற இவரது நடிப்புக் காலம் 76 ஆண்டுகளாகும். 31 இசைத் திரைப்படங்களை உருவாக்கியவர். நடனக் கலைஞராகவும் இவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.இவர் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தினால், அனைத்து காலங்களிலும் போற்றப்படும் ஆண் நட்சத்திர மனிதர்களில், ஐந்தாவது நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் ஜின்சர் ரோஜர்ஸின் நடன கூட்டாளியாக பெரிதும் அரியப்பட்டவர் ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ச்சியாக பத்து இசை நடனங்கள் வெளியிட்டுள்ளனர்.

பிரெட் அஸ்ரயர்

1951 இல்
இயற் பெயர் பிரடெரிக் அஸ்ரர்லிற்ஸ்
பிறப்பு (1899-05-10)மே 10, 1899
நெப்ரஸ்கா, ஐக்கிய அமெரிக்கா
இறப்பு சூன் 22, 1987(1987-06-22) (அகவை 88)
லொஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
தொழில் நடிகர், நடனக் கலைஞர்
நடிப்புக் காலம் 1917-1981

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

பிரெட் அஸ்ரயர் நெப்ராஸ்காவில் ஒமாஹா எனும் இடத்தில் பிறந்தார்[1][2]. ஜோஹன்னா ஆன், ஃபிரடெரிக் பிரிட்ஸ் ஆகியோர் இவரின் தாய் மற்றும் தந்தை ஆவர்.இவரின் தாய் செருமனியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த தம்பதியின் மகளாவார்.இவரின் தந்தை யூத குடும்பத்தில் பிறந்து கத்தோலிக்கராக மாறிய தம்பதியின் மகனாக ஆஸ்திரியாவில் பிறந்தவராவார். அஸ்ரயரின் தந்தைக்கு இருபத்து நான்கு வயதாகும் போது அவர் நெப்ராஸ்காவில் ஒமாஹாவுக்கு குடி பெயர்ந்தார்.1890-களில் குழந்தகளின் பல்துறை திறமைகள் வெளிப்படத்தொடங்கிய காலத்தில்,அஸ்டரின் சகோதரியாகிய அடீல் அஸ்டர் தன்னை ஒரு பாடகியாகவும், நடன மங்கையாகவும் இனம் கண்டுகொண்டார்.ஆரம்பத்தில் அவர் நடனத்தை கற்க மறுத்தாலும் , பின் அவற்றை பின்பற்றத் தொடங்கினார்.சகோதரி,சகோதரன் ஆகிய இருவரும் தங்கள் திறமைகளை மேம்படுத்தினர்.பியானோ,கிளாரினெட் ஆகியவற்றையும் கற்றுத்தேர்ந்தனர்.திடீரென இவர்களின் தந்தை வேலை இழக்கவே இக்குடும்பம் 1905-இல் நியூயார்க் நகரத்திற்கு குடிப்பெயர்ந்தது. பின் இவர்கள் கலாச்சார கலைகளை மேம்படுத்தும் பள்ளியில் சேர்ந்தனர்.அங்கு அவர்கள் தங்கள் தனித் திறமைகளை நிருபித்தனர்.அதன் பின் அவர்களின் தாயார் , அவர்களின் பெயருடன் ’’அஸ்டயர்’’ என்பதை இணைக்கக் கூறினார். அதன் பின்னே அவர்களின் பெயர் பிரெட் அஸ்ரயர், அடீல் அஸ்டர் என்றும் மாறியது.ஆஸ்திரியப் போரின் நினைவாக இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அரசியல் ரீதியாக அஸ்ரயர் வாழ்நாள் முழுவதும் பழமைவாத மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளராக இருந்துள்ளார்[3][4]. அவர் பகிரங்கமாக தனது அரசியல் கருத்துக்களை முன் நிறுத்தவில்லை என்றாலும். பிங் கிராஸ்பி, ஜார்ஜ் மர்பி, ஜின்ஜர் ரோஜர்ஸ், மற்றும் பலருடன் சேர்ந்து அவர் ஹாலிவுட் குடியரசுக் குழுவின் உறுப்பினராக சேர்ந்தார். அவர் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் , 1970 களில் அதிகப்படியான கவர்ச்சித்திரைப்படங்கள் வெளிவருவதற்கு தடைவிதிக்கக்கோரியும் போராட்டங்களை முன் நிறுத்தியுள்ளார் அஸ்ரயர்.

திருமணம்

தொகு

பிரெட் அஸ்டர் 1933-இல் இருபத்துநான்கு வயது பெண்ணான பிலிஸ் பாட்டருடன் (1908- செப்டம்பர்-13,1954) தனது முதல் திருமணத்தை செய்து கொண்டார்[5]. இவர்களுக்கு ஃபிரெட் என்றும் அவா அஸ்டர் என்றும் இரு குழந்தகள் பிறந்தனர். இவ்விரு குழந்தைகள் அல்லாது பிலிஸ் பாட்டரின் மகனான பீட்டர் என்று அறியப்படும் எலிப்லெட் நான்கு இவரின் வளர்ப்பு மகனாவார். பிலிஸ் பாட்டர் 1954-இல் மறைந்துவிட , இவர்களின் இருபத்து ஓர் வருட திருமண வாழ்க்கை முடிந்தது. பிலிஸ் பாட்டர் இறக்கும் போது அஸ்ரயர் டாடி லாங் லெக்ஸ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். மனைவி இறந்ததால் அதிலிருந்து பின்வாங்க முனைந்த போது முந்தொகை வாங்கிவிட்ட காரணத்தினால் பேச்சு வார்த்தைக்குப் பிறகு அத்திரைப்படத்தினில் நடிக்க ஒப்புக்கொண்டார். இத்திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது[6]. ஜூன் 24, 1980-இல் ராபின் ஸ்மித் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பிரெட் அஸ்ரயரின் இறப்பு வாயிலாக இவர்களின் திருமணம் முடிவுக்கு வந்தது.

பங்களிப்புகள்

தொகு

அஸ்ரயர் 33 க்கு மேற்பட்ட திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். மேலும் அஸ்ரயர் தனது ’’தி கே டைவர்ஸ்’’ , டாப் ஹேட் ’'ஃபாலோ தி பிளீட், ஸ்விங் டைம் போன்ற பத்துத் திரைப்படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.[7]

கௌரவங்கள் மற்றும் விருதுகள்

தொகு
 • 1938 இல் கிராமேன் சீன திரையரங்கு சிமெண்டில் அவரது கை மற்றும் கால் தடங்களை வைத்து சிறப்பிக்கச் செய்தது.[8]
 • இவர் இரு முறை ’’கோல்டன் குலோப்’’ விருதை வென்றுள்ளார் ,
 • கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது, மற்றும் சிறப்பு கிராமி விருதையும் வென்றுள்ளார்,
 • இரு முறை எம்மி விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை அதற்காக பரிந்துறை செய்யப்பட்டுள்ளார்.
 • ’’டவரின் இன்ஃபெர்னோ’’ திரைப்படத்திற்காக ஒரு முறை அக்காடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
 • இவருக்கு அமெரிக்க திரைப்பட கல்லூரியினால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
 • ஜார்ஜ் ஈஸ்ட் மேன் விருது சிறந்த இயங்குபட நடிகருக்காக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[9]

இறப்பு

தொகு

பிரெட் அஸ்ரயர் சூன் 22,1987-இல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏன்ஜல் மாகாணத்தில் தனது எண்பத்து எட்டாம் அகவையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடந்தார். அவரின் உடல் கலிபோர்னியாவின் சேட்ஸ்வொர்த்தில் உள்ள ஓக்வுட் நினைவு பூங்காவின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அஸ்ரயரின் இசைப்படங்கள்

தொகு
 • டான்ஸிங் லேடி (1933)
 • பிளையிங் டவுன் டு ரியோ (1933)*
 • தி கே டைவர்ஸ் (1934)*
 • ரொபெர்டா (1935)*
 • டாப் ஹேட் (1935)*
 • ’'ஃபாலோ தி பிளீட் (1936)*
 • ஸ்விங் டைம் (1936)*
 • சல் வி டான்ஸ் (1937)*
 • எ டேம்சல் இன் டிஸ்டரஸ் (1937)
 • கேர் ஃப்ரீ (1938)*
 • தி ஸ்டோரி ஆப் வெர்னான் அண்ட் ஐரின் கேஸ்ட்ல் (1939)*
 • பிராட்வே மெலடி ஆப் 1940 (1940)
 • செகண்ட் கோரஸ் (1940)
 • யூ வில் நெவர் கெட் ரிச் (1941)
 • ஹாலிடே இன் (1942)
 • யூ வேர் நெவர் லவ்லியர் (1942)
 • தி ஸ்கைஸ் லிமிட் (1943)
 • யோலேண்டா அண்ட் த தீப் (1945)
 • ஜிக்ஃபீல்ட் ஃபோலிய்ஸ் (1946)
 • ஃபுளூ ஸ்கைஸ் (1946)
 • ஈஸ்டர் பரேட் (1948)
 • தி பார்க்லேஸ் ஆப் பிராட்வே (1949)*
 • திரீ லிட்டில் வேர்ட்ஸ் (1950)
 • '’லெட்ஸ் டான்ஸ் (1950)
 • ராயல் வெட்டிங் (1951)
 • தி பெல்லி ஆப் நியூயார்க் (1952)
 • '’தி பாண்ட் வாகன் (1953)
 • டாடி லாங் லெக்ஸ் (1955)
 • ஃப்ன்னி பேஸ் (1957)
 • சில்க் ஸ்டாகிங் (1957)
 • பைன்ன்’ஸ் ரெயின்போ (1968)
 • '’தட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (1974)
 • '’தட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் 2 (1976)

* ஜின்ஜர் ரோஜருடன் நடித்த படங்கள்

மேற்கோள்கள்

தொகு
 1. "Fred Astaire (1899-1987) aka Frederick Austerlitz". Hyde Flippo. Archived from the original on 2009-01-02. பார்க்கப்பட்ட நாள் 2008-08-24.
 2. "The Religious Affiliation of Adele Astaire". Adherents. 2005-09-20. Archived from the original on 2006-02-28. பார்க்கப்பட்ட நாள் 2008-08-24.
 3. Satchell, p.156
 4. Fred Astaire (Icons of America), Joseph Epstein, Yale University Press, 2008, pg. 75
 5. Niven, David: Bring on the Empty Horses, G. Putnam 1975, p. 248, 255: "The combination of Fred and Phyllis was a joy to behold ... Theirs was the prototype of a gloriously happy marriage."
 6. Billman, p. 22: "Astaire's intense professionalism—and the memory that Phyllis had wanted him to make the film—made him report back for work. The first few weeks were difficult, with most of the time being spent on Leslie's ballets and requiring as little as possible from the grieving man. Caron remembered, "Fred used to sit down during a rehearsal and put his face in his towel and just cry."
 7. e.g. Satchell, p. 144
 8. Billman, pgs. 287-90
 9. George Eastman Award

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்_அஸ்ரயர்&oldid=3931635" இலிருந்து மீள்விக்கப்பட்டது