சாம் பிட்ரோடா
சத்யநாராயண் கங்காராம் பிட்ரோடா (Satyanarayan Gangaram Pitroda) (பிறப்பு; நவம்பர் 16,1942) சாம் பிட்ரோடா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய தொலைத்தொடர்பு பொறியாளரும் மற்றும் தொழில்முனைவோரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.[2] இவர் கிழக்கிந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள தித்லாகரில் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார்.[3] அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராகவும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆலோசகராகவும் இருந்தார்.[4] இந்தியாவின் பொதுத் தகவல் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்னும் துறையில் பிரதம மந்திரிக்கு ஆலோசகராக இருந்த சாம் பிட்ரோடா இந்தியாவின் தொலைத் தொடர்புப் புரட்சிக்குப் பொறுப்பானவராகவும் கருதப்படுகிறார்.[5]
சாம் பிட்ரோடா | |
---|---|
2009 இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் பிட்ரோடா | |
பிறப்பு | 16 நவம்பர் 1942[1] தித்லாகர், ஒரிசா, பிரித்தானிய இந்தியா (நவீன ஒடிசா, இந்தியா) |
குடியுரிமை | இந்தியா அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் இலினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம், சிக்காக்கொ |
பணி | தொலைத்தொடர்பு பொறியாளர், தொலைமுனைவர் |
பணியகம் | பொதுத் தகவல், உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளில் பிரதமரின் முன்னாள் ஆலோசகர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கைத் துணை | அஞ்சனா (தி. 1966) |
வலைத்தளம் | |
www |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுபிட்ரோடா இந்தியாவின் ஒடிசாவிலுள்ள தித்லாகரில் ஒரு குஜராத்தி பெற்றோருக்கு பிறந்தார்.
1966 ஆம் ஆண்டில் இவர் சிகாகோவிலுள்ள ஜி. டி. இ. தொலை தொடர்பு நிறுவனத்தில் சேர்ந்தார். [6]1975 ஆம் ஆண்டு மின்னணு நாட்குறிப்பேட்டை இவர் கண்டு பிடித்தார். இதன் காரணமாக, கையால் இயக்கப்படும் கணினிக் கணக்கிடல் தொழில் நுட்பத்தின் ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்..[7]
இந்தியாவுக்குத் திரும்புதல் மற்றும் பிற்கால தொழில் வாழ்க்கை
தொகு1981 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு திரும்பி, இந்தியாவின் தொலைத்தொடர்பு முறையை நவீனமயமாக்க உதவ முடிவு செய்தார்.[8]1984 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அழைப்பின் பேரில் இந்தியா திரும்பிய பிட்ராடோ, தகவல் தொலைத்தொடர்பு மேம்பாட்டிற்கான மையமான சி-டாட் என்ற மையத்தைத் தொடங்கினார். அமெரிக்க குடிமகனாக இருந்த இவர் இந்திய அரசாங்கத்தில் பணியாற்ற மீண்டும் இந்திய குடியுரிமையைப் பெற தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார்.[9]
1990களில் பிட்ரோடா தனது வணிக நலன்களை மீண்டும் தொடங்க சிகாகோ திரும்பினார். மே 1995 இல், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் வேர்ல்ட் டெல் முன்முயற்சியின் முதல் தலைவராக ஆனார்.[10]
1993 ஆம் ஆண்டில், பிட்ரோடா (தர்ஷன் சங்கருடன் இணைந்து ) உள்ளூர் சுகாதார பாரம்பரியத்தின் புத்துயிர் அறக்கட்டளை மற்றும் இந்தியாவின் பெங்களூருக்கு அருகே உள்ள இடைநிலை சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றை நிறுவ உதவினார். இந்த அறக்கட்டளை இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவான ஆயுர்வேதத்தை ஊக்குவிக்கிறது.[11]
அக்டோபர் 2009 இல், பிட்ரோடா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொது தகவல் உள்கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பிட்ரோடா 2010 இல் தேசிய கண்டுபிடிப்பு மன்றத்தை நிறுவினார்.[12] ஆகஸ்ட் 2010 இல், அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.[13] 1992 ஆம் ஆண்டில், இவரது சுயசரிதை வெளியிடப்பட்டது.[14]
சர்ச்சைகள்
தொகு2024 இந்தியப் பொதுத் தேர்தலின் போது,பரம்பரை வரி குறித்து பிட்ரோடா கருத்து தெரிவித்தார். அதில் அமெரிக்காவின் சொத்து செல்வ மறுவிநியோகக் கொள்கையைக் கூறி இந்தியாவிலும் அதைப் பின்பற்றவேன்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. .[15] [16][17]
2019 இந்தியப் பொதுத் தேர்தலின் போது 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் குறித்து பிட்ரோடா கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.[18] சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்ட உடனேயே, காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் இந்திய வெளிநாட்டு காங்கிரசின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Timeline".
- ↑ "Playing it again: What Sam Pitroda said & status of inheritance tax in India, abroad". The Times of India. 2024-04-25. https://timesofindia.indiatimes.com/india/playing-it-again-what-sam-pitroda-said-status-of-inheritance-tax-in-india-abroad/articleshow/109573137.cms.
- ↑ "Timeline". Sam Pitroda (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
- ↑ "The Maharaja Sayajirao University of Baroda". msubaroda.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.
- ↑ "Sam Pitroda: Lifetime Achievement Award 2002". http://dqindia.ciol.com/content/top_stories/102122703.asp.
- ↑ "Electronic Diary patent - CHM Revolution". Computerhistory.org. பார்க்கப்பட்ட நாள் 14 August 2018.
- ↑ Emily Stone (26 November 2007). "Chicago's 'Mr. India'". Crain's Chicago Business. http://www.chicagobusiness.com/article/20071124/ISSUE02/100028913/chicagos-mr-india.
- ↑ Mike Hughlett (8 July 2007). "'Telecom czar' focuses on his next big thing". Chicago Tribune. https://www.chicagotribune.com/2007/07/08/telecom-czar-focuses-on-his-next-big-thing/.
- ↑ "Interim Board of Directors Elects Mr. Sam Pitroda as Chairman". http://www.itu.int/newsarchive/press_releases/1995/ITU95-6.html.
- ↑ "About". Web site. The Institute of Trans-Disciplinary Health Sciences and Technology. பார்க்கப்பட்ட நாள் 15 July 2013.
- ↑ "National Innovaiton Council". innovationcouncilarchive.nic.in. பார்க்கப்பட்ட நாள் 14 August 2018.
- ↑ "Mr. Sam Pitroda, Chairman". Web site. National Innovation Council. Archived from the original on 20 October 2011. பார்க்கப்பட்ட நாள் 30 January 2012.
- ↑ Mayank Chhaya (June 1992). Sam Pitroda: A Biography. Konark Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8122002757.
- ↑ "About". Web site. NDTV. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
- ↑ "People in East look like Chinese, in South look like Africans". Web site. ANI. பார்க்கப்பட்ட நாள் 8 May 2024.
- ↑ Prabhu, Sunil (2024-05-08). "Sam Pitroda Quits After Landing Congress In New Mess Over Racist Comments". Web site. NDTV. பார்க்கப்பட்ட நாள் 9 May 2024.
- ↑ "About". Web site. AajTak. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
வெளி இணைப்புகள்
தொகு- சாம் பிட்ரோடா: தொலைத் தொடர்பில் தனித்த சிந்தனையாளர் பரணிடப்பட்டது 2009-01-29 at the வந்தவழி இயந்திரம்
- 2003 சிஃபி.காம் பேட்டி
- ஐஐடி வடிவமைப்பு நிறுவனத்திலிருந்து சி-சாமின் புதிய கண்டுபிடிப்புப் பொருள் ஆய்வு[தொடர்பிழந்த இணைப்பு]
- ஐடியூவின் வேர்ல்ட்டெல்
- கம்ப்யூ கார்டுகளின் மறு ஆய்வு
- அறிவுத்தள ஆணைக்குழு தலைவர் - சாம் பிட்ரோடா பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம்
- 2007ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி சிகாகோ ட்ரிப்யூனில் வெளியான கட்டுரையின் மறு பிரசுரம். பரணிடப்பட்டது 2011-04-25 at the வந்தவழி இயந்திரம்
- மிண்ட் செய்தித் தாளுடனான பேட்டி