மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், பரோடா, இந்தியாவின் குசராத் மாநிலத்தில் பரோடா நகரில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகம் ஆகும். பரோடாவை ஆண்ட முன்னாள் மன்னர் மகாராசா சாயாசிராவ் கெயிக்வார்ட் நினைவாக 1949ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் நிறுவப்பட்டது. அதன் முன்னர் பரோடா அறிவியற் கல்லூரி என அறியப்பட்டிருந்தது. 1881ஆம் ஆண்டிலிருந்து இயங்கிய அக்கல்லூரியில் அரவிந்தர் மற்றும் முனைவர் சாம் பித்ரோடா முதலானோர் படித்துள்ளனர். 2009இல் வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 1971ஆம் ஆண்டு இங்கு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்,பரோடா
Baroda MSUE.gif

குறிக்கோள்:"சத்யம் சிவம் சுந்தரம்"
நிறுவல்:1949
வகை:பொது
வேந்தர்:முனைவர்.மிருணாளினி தேவி புயர்
துணைவேந்தர்:முனைவர். ரமேஷ் கோயல்
இளநிலை மாணவர்:28000 (2005)
முதுநிலை மாணவர்:2000
அமைவிடம்:பரோடா, குசராத், இந்தியா
வளாகம்:ஊரகம்
இணையத்தளம்:www.msubaroda.ac.in

வெளியிணைப்புகள்தொகு