எம். என். சீனிவாஸ்
மைசூர் நரசிம்மச்சார் சீனிவாஸ் (Mysore Narasimhachar Srinivas) (1916-1999) [1] ஒரு இந்திய சமூகவியலாளரும், சமூக மானிடவியலளரும் ஆவார். [2] சாதி மற்றும் சாதி அமைப்புகள், சமூக அடுக்குப்படுத்தல், சமசுகிருதமயமாக்கல் மற்றும் தென்னிந்தியாவில் மேற்கத்தியமாக்கல், ‘ஆதிக்க சாதி’ என்ற கருத்து எதிர்ப்பு ஆகியவற்றில் இவர் பெரும்பாலும் அறியப்பட்டவர்.
எம். என். சீனிவாஸ் | |
---|---|
பிறப்பு | மைசூர், இந்தியா | 16 நவம்பர் 1916
இறப்பு | 30 நவம்பர் 1999 பெங்களூர், இந்தியா | (அகவை 83)
தேசியம் | இந்தியர் |
வாழ்க்கைத் துணை | இருக்மனி சீனிவாஸ் |
விருதுகள் | பத்ம பூசண் (1977) |
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் |
கல்விப் பணி | |
துறை | சமூகவியல், சமூக மானிடவியல் |
Main interests | இந்தியச் சமூகம், இந்தியாவில் சாதி அமைப்பு |
Notable ideas | சமசுகிருதமயமாக்கம், சமூக அடுக்குப்படுத்தல் |
சுயசரிதை
தொகுசீனிவாஸ், 1916 நவம்பர் 16இல் மைசூர்அருகே அரக்கரேகிராம் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை நரசிம்மச்சார்யா.[3] சீனிவாஸ் பம்பாய் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார் (பின்னர் மும்பை பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது). குடும்பம் மற்றும் திருமணம் குறித்து ஒரு ஆராய்ச்சியை முடித்து தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். பின்னர், 1940களில் மேலதிகப் படிப்புகளுக்காக ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு இவரது பயிற்சி இவரது யோசனைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது . தில்லி பல்கலைக்கழகம், மகாராஜா சயாஜிராவ் பரோடா பல்கலைக்கழகம், பெங்களூரு, சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம், பெங்களூரின் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் போன்ற பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் சீனிவாஸ் கற்பித்தார். [4]
இறப்பு
தொகுஇவர் 1999 நவம்பர் 30 அன்று பெங்களூரில் காலமானார். பிரண்ட்லைன் இதழின் செய்தியாளர் பார்வதி மேனன் இவரது இரங்கல் செய்தியில், இவரை இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சமூகவியலாளர் என்றும் சமூக மானுடவியலாளர் என்றும் வர்ணித்தார்.[4]
இந்திய சமூகவியலிலும் சமூக மானுடவியலிலும் பங்களிப்பு
தொகுசமூகவியல் மற்றும் சமூக மானுடவியல் துறைகளிலும், இந்தியாவில் பொது வாழ்விலும் இவர் ஆற்றிய பங்களிப்பு தனித்துவமானது. ஒருபுறம் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் (பெரும்பாலும் வட அமெரிக்க பல்கலைக்கழக நோக்குடைய) பகுதி ஆய்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்த வலுவான அச்சுப்பொறியில் இருந்து வெளியேறுவதும், சமூக மானுடவியல் மற்றும் ஒழுக்க அடிப்படைகளை பரிசோதிப்பதும் இவரது திறமையாக இருந்தது.
அங்கீகாரம்
தொகுமும்பை பல்கலைக்கழகம், பேரரசின் மானுடவியல் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். 1977 ஆம் ஆண்டில், இவர் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூசண் [5] விருதினைப் பெற்றார். மதிப்புமிக்க கல்விக்கூடங்களான பிரித்தானிய அகாதமியிலும், அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதாமியிலும் கௌரவ வெளிநாட்டு உறுப்பினராக இருந்தார். இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சின் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் சார்பில், இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக "நவீன இந்தியாவில் சமூக மாற்றம்" என்ற நூலையும், "நவீன இந்தியாவில் சாதி" என்ற இவரது படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. பிந்தையது ஏற்கனவே மைதிலி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
புத்தகங்கள்
தொகு- Marriage and Family in Mysore (1942)
- Religion and Society Among the Coorgs (1952)
- Caste in Modern India and other essays (1962), Asia Publishing House
- The Remembered Village (1976, reissued by OUP in 2013)
- Indian Society through Personal Writings (1998)
- Village, Caste, Gender and Method (1998)
- Social Change in Modern India(1966)
- The Dominant Caste and Other Essays (ed.)(1986)
- Dimensions of Social Change in India(1977)
மேற்கோள்கள்
தொகு- ↑ Barry Bearak, M. N. Srinivas Is Dead at 83; Studied India's Caste System, த நியூயார்க் டைம்ஸ், 3 December 1999.
- ↑ M.N. Srinivas: Obituary in the Hindu Frontline பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Joshi, P. C. (March 2000). "Remembering M. N. Srinivas (16.11.1916 — 30.11.1999)". Sociological Bulletin (Indian Sociological Society) 49 (1): 117–135.
- ↑ 4.0 4.1 Menon, Parvathi. "A scholar remembered". Frontline. The Hindu. Archived from the original on 17 August 2012. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013.
- ↑ "National Portal of India". www.india.gov.in.
வெளி இணைப்புகள்
தொகு- In memoriam by Veena Das
- An interview with M. N. Srinivas by Chris Fuller, இலண்டன் பொருளியல் பள்ளி, 1999
- Discussion led by Jack Goody and Stephen Levinson 24th May 1982, Cambridge (video)
- Basu, Napur (23 December 1999). "Obituary: MN Srinivas - Scholar of Indian village life and the caste system". The Guardian. https://www.theguardian.com/news/1999/dec/23/guardianobituaries3.