இந்தியாவில் சாதி அமைப்பு

இந்தியாவில் சாதி அமைப்பு (caste system in India) என்பது சாதியின் முன்னுதாரண இனவியல் எடுத்துக்காட்டாகும். இது பண்டைய இந்தியாவில் தோன்றியது. மேலும் இடைக்கால, ஆரம்பகால நவீன மற்றும் நவீன இந்தியாவில், குறிப்பாக முகலாயப் பேரரசு மற்றும் பிரிட்டிசு இராச்சியத்தில் பல்வேறு ஆளும் உயரடுக்கினரால் மாற்றத்துக்கு உள்ளானது. [1][2][3][4] இது இன்று இந்தியாவில் இட ஒதுக்கீடுக்கு அடிப்படையாக உள்ளது.[5] சாதி அமைப்பு இரு வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளது. வர்ணம் மற்றும் சாதி, இந்த அமைப்பின் வெவ்வேறு நிலை பகுப்பாய்வுகளாகக் கருதப்படலாம்.

காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது 1933 ல் தலித்துகளுக்காக (அவர் ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்தினார்) சென்னை வந்தார். இத்தகைய சுற்றுப்பயணங்கள் மற்றும் எழுத்துக்களின் போது அவர் ஆற்றிய உரைகள் இந்தியாவின் பாகுபாடுகளுக்கு எதிரானவையாக இருந்தது.

இன்று நிலவும் சாதி அமைப்பு முகலாய சகாப்தத்தின் சரிவு மற்றும் இந்தியாவில் பிரிட்டிசு காலனித்துவ ஆட்சியின் எழுச்சி ஆகியவற்றின் வளர்ச்சியின் விளைவாக மாற்றத்துக்கு உள்ளனது என்று கருதப்படுகிறது. [1] [2] முகலாய சகாப்தத்தின் சரிவு, மன்னர்கள், பூசாரிகள் மற்றும் சந்நியாசிகளுடன் தங்களை இணைத்துக் கொண்ட சக்திவாய்ந்த மனிதர்கள் எழுச்சி கண்டனர். சாதியானது ஆட்சி இலட்சியம் மற்றும் தற்காப்பு வடிவத்தை உறுதிப்படுத்தியது. மேலும் இது பல சாதியற்ற சமூகக் குழுக்களை வேறுபட்ட சாதி சமூகங்களாக மாற்றியமைத்தது. [2] பிரிட்டிசு இராச்சியம் இந்த வளர்ச்சியை வளர்த்தது, கடுமையான சாதி அமைப்பை நிர்வாகத்தின் மைய பொறிமுறையாக மாற்றியது. [2] 1860 மற்றும் 1920 க்கு இடையில், பிரிட்டிசு அரசு நிர்வாக வேலைகள் மற்றும் மன்னணி பணி நியமனங்களை கிறிஸ்தவர்களுக்கும் சில சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கும், குறிப்பாக பிராமணர்கள் மற்றும் பிற உயர் சாதியினருக்கு மட்டுமே வழங்கியது.[6] 1920 களில் ஏற்பட்ட சமூக அமைதியின்மை மும்பை மாகாணம் மற்றும் சென்னை மாகாணம் போன்ற இடங்களில் இந்தக் கொள்கையில் மாற்றத்திற்கு வழிவகுத்தது. [7] அப்போதிருந்து, காலனித்துவ நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட சதவீத அரசாங்க வேலைகளை கீழ் சாதியினருக்கு ஒதுக்குவதன் மூலம் நேர்மறையான பாகுபாட்டுக் கொள்கையைத் தொடங்கியது. 1948 ஆம் ஆண்டில், சாதியின் அடிப்படையில் எதிர்மறையான பாகுபாடு சட்டத்தால் தடைசெய்யப்பட்டு இந்திய அரசியலமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அமைப்பு சமூக விளைவுகளை உண்டாக்கியபடி இந்தியாவில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

இந்திய துணைக் கண்டத்தில் நேபாள பௌத்தம்,[8] கிறிஸ்தவம், இசுலாம், யூத மதம் மற்றும் சீக்கியம் போன்ற பிற பிராந்தியங்களிலும் மதங்களிலும் சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் நடைமுறையில் உள்ளன. [9] பல சீர்திருத்தவாத இந்து இயக்கங்கள், [10] இசுலாம், சீக்கியம், கிறிஸ்தவம், [9] மற்றும் இன்றைய இந்திய பௌத்தம், குறிப்பாக நவயானம் ஆகியவற்றின் எதிர்ப்பை இது சந்திக்கிறது.[11]

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் புதிய முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. சாதி அடிப்படையிலான வேலைகளை இட ஒதுக்கீட்டால் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் என்ற பட்டியல்களுடன் முறைப்படுத்தப்பட்டது. 1950 ஆம் ஆண்டு முதல், நாடு அதன் குறைந்த சாதி மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பல சட்டங்களையும் சமூக முயற்சிகளையும் இயற்றியுள்ளது.

வரையறைகளும் கருத்துக்களும்

தொகு

வர்ணம், சாதி, பிறப்பு

தொகு

வர்ணம்

தொகு

வர்ணம் என்றால் வகை, ஒழுங்கு, நிறம் அல்லது வர்க்கம் என்று பொருள்.[12][13] இது மக்களை வகுப்புகளாக வகைப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பாக இருந்தது. இது முதலில் வேத இந்திய சமுதாயத்தில் பயன்படுத்தப்பட்டது. இது பண்டைய இந்திய நூல்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. [14] பிராமணர்கள் (சமயப் பணி மக்கள்), சத்திரியர் (ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வீரர்களாக இருந்தவர்கள்), வைசியர் (கைவினைஞர்கள், வணிகர்கள், விவசாயிகள்), சூத்திரர் (அன்றாட கூலிகள்) என்ற நான்கு வகுப்புகள் இருந்தன. [15] வர்ணம் வகைப்படுத்தலில் மறைமுகமாக ஐந்தாவது உறுப்பு இருந்தது. அந்த மக்கள் பழங்குடி மக்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் போன்ற அதன் எல்லைக்கு முற்றிலும் வெளியே இருந்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள். [2]

சாதி

தொகு

சாதி என்பதற்கு பிறப்பு என்று பொருள். [15] இதைப்பற்றி பண்டைய நூல்களில் மிகவும் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு இது வர்ணத்திலிருந்து தெளிவாக வேறுபடுகிறது. வர்ணங்கள் நான்கு பேதங்களை கொண்டது. ஆனால் சாதிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. [14] இது சிக்கலான சமூகக் குழுக்களாகும். அவை உலகளவில் பொருந்தக்கூடிய வரையறை அல்லது சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கவில்லை. மேலும் முன்னர் கருதப்பட்டதை விட மிகவும் நெகிழ்வான மற்றும் மாறுபட்டவை. [2]

சாதி என்ற சொல் முதலில் ஒரு இந்திய சொல் அல்ல. இது இப்போது ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியின்படி, இது போர்த்துகீசிய காஸ்டாவிலிருந்து பெறப்பட்டது. அதாவது "இனம், பரம்பரை " மற்றும், முதலில், "தூய்மையான அல்லது கலக்காதது". [16] இதற்கு இந்திய மொழிகளில் சரியான மொழிபெயர்ப்பு எதுவும் இல்லை. ஆனால் வர்ணமும் சாதியும் இரண்டு தோராயமான சொற்களாகும். [17]

இந்துகள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சில பழங்குடி மக்கள் மத்தியில் இந்தியாவில் ஜாதிகள் இருந்துள்ளது. அவர்களிடையே தெளிவான நேரியல் ஒழுங்கு இல்லை.[18]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 de Zwart (2000).
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Bayly (2001).
  3. St. John (2012).
  4. Sathaye (2015).
  5. "What is India's caste system?" (in en-GB). BBC News. 25 February 2016. https://www.bbc.com/news/world-asia-india-35650616. ""சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சாதி அடிப்படையில் பாகுபாடு காண்பதைத் தடைசெய்தது. மேலும் வரலாற்று அநீதிகளை சரிசெய்து பாரம்பரியமாக பின்தங்கியவர்களுக்கு ஒரு நிலையை வழங்கும் முயற்சியாக, அதிகாரிகள் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்ட சாதியினருக்கான ஒதுக்கீட்டை அறிவித்தனர். மேலும், பழங்குடியினர், 1950ஆம் ஆண்டில் சாதி வரிசையில் மிகவும் பின்தங்கியிருந்தனர்." 
  6. Nehru, Jawaharlal, 1889-1964. (2004). The discovery of India. New Delhi: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0670058017. இணையக் கணினி நூலக மைய எண் 57764885.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  7. Dirks (2001b).
  8. LeVine, Sarah. Rebuilding Buddhism: The Theravada Movement in Twentieth-Century Nepal.
  9. 9.0 9.1 Cohen (2001).
  10. Dirks (2001a).
  11. Omvedt, Gail. Buddhism in India: Challenging Brahmanism and Caste.
  12. Doniger, Wendy (1999). Merriam-Webster's encyclopedia of world religions. Springfield, MA: Merriam-Webster. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87779-044-0.
  13. Stanton, Andrea (2012). An Encyclopedia of Cultural Sociology of the Middle East, Asia, and Africa. US: Sage Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4129-8176-7.
  14. 14.0 14.1 Basham, Wonder that was India (1954).
  15. 15.0 15.1 Fowler, Hinduism (1997).
  16. "Caste, n." Oxford English Dictionary. 1989.
  17. Corbridge, Harriss & Jeffrey (2013).
  18. Ingold, Tim (1994). Companion encyclopedia of anthropology. Routledge. pp. 1026–1027. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-28604-6.

வெளி இணைப்புகள்

தொகு