தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம்
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (National Translation Mission) இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம் ஆகும். இது எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இந்திய மொழிகளில் கல்வி அறிவு பெற துவங்கப்பட்டது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு இத்திட்டத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆங்கிலம் இந்தியாவின் அனைத்து கல்விசார்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதால், இந்திய ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெற முடிவதில்லை. இதன் காரணமாக, இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தளம் 23 இந்திய ஆட்சி மொழிகளிலும் கிடைக்கிறது.
இதுவரை ஆங்கிலம் - இந்திய மொழி என்ற வகையில் சில அகராதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பொறிவழி மொழியாக்கத்தினை மேம்படுத்தல் இதன் கொள்கைகளுள் ஒன்று.
வெளியீடுகள்
தொகுஇதுவரை ஆறு அகராதிகளும் 40 அறிவுசார் பனுவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட மூன்றும் இத்திட்டத்தின்மூலம் வெளிவந்துள்ள தமிழ் பதிப்புகளாவன.
- அரசியலின் இலக்கணம்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789387333390
ஹெரால்டு ஜே லாஸ்கி எழுதிய “A Grammar of Politics” என்ற நூலின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர்: க. பூரணச்சந்திரன், வெளியீட்டாளர்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு மற்றும் எதிர் வெளியீடு, பொள்ளாச்சி
- சமூகவியலின் அடிப்படைகள்; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173431692
பா கிஸ்பெர்ட் எழுதிய “Fundamental of Sociology” என்ற நூலின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர்: க. பூரணச்சந்திரன், வெளியீட்டாளர்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு
- லாங்மன்-என்டிஎம்-சிஐஐஎல் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி
Longman-NTM-CIIL English-English-Tamil Dictionary; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-3130-7(Hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-3129-1(paperback) வெளியீட்டாளர்: பியர்சன் எஜுகேஷன், இந்தியா
மேற்கோள்கள்
தொகுஇணைப்புகள்
தொகு- தளம் பரணிடப்பட்டது 2010-09-17 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்)
- www.ntm.org.in முதற்பக்கம் (ஆங்கிலத்தில்)