க. பூரணச்சந்திரன்

க. பூரணச்சந்திரன் ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார். காலச்சுவடு, நிகழ், தமிழ் நேயம், மேலும் உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளை நடத்தி, நூல்களையும் தொகுத்துள்ளார். திருச்சியில் (1989) முதன்முதலில் பாதல்சர்க்காரின் பெயரால் நாடகப்பட்டறை நடத்தியவர். திருச்சியில் வாசகர் அரங்கம், திருச்சி நாடக சங்கம், சினிஃபோரம் (கலைத் திரைப்படங்களைக் காண்பதற்கான திரைப்படக் கழகம்) ஆகியவற்றில் பங்கேற்று, இத்துறைகளில் இளைஞர்களை முன்னேற்ற முயற்சி எடுத்தவர். பணிநிறைவுக்குப் பின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எமரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர்.

க. பூரணச்சந்திரன்
பிறப்புமே 14, 1949 (1949-05-14) (அகவை 74)[1]
ஆர்க்காடு, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர்
வாழ்க்கைத்
துணை
சு. செல்வநாயகி
வலைத்தளம்
www.poornachandran.com

சமுதாயத்தின்பால் தெளிந்த சிந்தனையோடு, அதன் வளர்ச்சிக்கு முற்போக்குச் சிந்தனைகளுடன் தன் முழு உழைப்பையும் ஓயாது அளித்து வருபவர். கல்லூரி வகுப்பறைகளாக இருப்பினும், கருத்தரங்குகளாக இருப்பினும் இவரது சொற்பொழிவுகள் தேர்ந்த ஞானத்தின் வெளிப்பாடு. தக்க தகவுடைய சான்றுகளுடன் ஐயமற விளக்கம் தரும் ஆற்றல் கொண்டவர். நல்ல விமரிசகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர்.

2015 ஆம் ஆண்டு இவர் பெயரில் திறனாய்வு அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் மாணவர்களுக்கு திறனாய்வு மற்றும் பல்வேறு துறைகளில் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார். இதைத் தவிர இவர் http://www.poornachandran.com என்ற இணையத்தளத்தை நடத்தி வருகிறார். இதில் மாணவர்கள் மற்றும் சமுதாய நலன்களை கருத்தில் கொண்டு பல்துறை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள தி.சு.நடராசன் அறக்கட்டளை இவருடைய இலக்கிய திறனாய்வு பங்களிப்பையும் அளப்பரிய செயல்களையும் பாராட்டி பிப்ரவரி 2018இல் "திறனாய்வுச் செம்மல்" என்ற விருதையும் பதினைந்தாயிரம் ரூபாய் பரிசையும் கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளது.

இவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியல் வருமாறு:

  1. அமைப்புமைய வாதமும், பின்னமைப்புவாதமும் ((An Introduction to Structuralism and Post-structuralism, Published by Adaiyaalam)
  2. பத்திரிகை, தலையங்கம், கருத்துரை ((How to write Editorials and Opinions in Newspapers and Journals. published by Tamil Literary Society, Tiruchirappalli)
  3. தொடர்பியல் கொள்கைகள் (Contemporary Communication Theories, his own publication)
  4. தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு (1980வரை) - (History of Tamil Literary Criticism from 1900 to 1980, published by the Tamil University, Thanjavur)
  5. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம் (An Introduction to Indian Languages and Literatures, published by Agaram Pathippagam, Thanjavur)
  6. நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் (Modern Theories of Translation, published by Agaram pathippagam, Thanjavur)
  7. இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் ((A few Encounters in Tamil Literary Journey, published by Agaram Pathippagam, Thanjavur)
  8. கவிதையியல் (Modern Tamil Poetic Theories, published by the International Institute of Tamil Studies, Chennai)
  9. கதையியல் (Theories on Fictional Writing, Published by Adaiyaalam)
  10. கவிதைமொழி தகர்ப்பும் அமைப்பும் (Construction and Deconstruction in Tamil poetry, Author's own publication)
  11. தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (Impact of Western Literary Theories in Tamil, published by Kaavya, Chennai)
  12. பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம் (Study of Tholkappiyam based on hermeneutical approach, published by the International Institute of Tamil Studies, Chennai)

முப்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தத்துவம், வரலாறு முதல் இலக்கியம், மருத்துவம் வரை பல்வேறு வகைகளிலும் இவை உள்ளன. இவை தவிர சில முக்கிய நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார்.

1) தமிழிலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் மேம்பாடும் 2006

      (The Condition of the Oppressed and their Empowerment in Tamil Literature, published by Bishop Heber College, Tiruchi) ஒடுக்கப் பட்டோர் மேம்பாட்டு அரசியலைப் பேசுவது என்ற நிலையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

2) அமுதம் 1999

      (A Memoire on the Contribution of Fr. Amudhan, Secretary of Tamil Literature Society, Tiruchi. It contains several critical articles on Tamil Literature.)

3) உரசல்கள் 1985

      (Essays on Comparative Literature in Tamil, published by the Tamil Department, Bishop Heber College)

4) நாற்றுகள் 1990

(A collection of Literary Articles in Tamil, published by the Tamil Department, Bishop Heber College)

2011இல் ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. இவ்விருது ஆந்திரக் கவிஞர் வரவர ராவ் எழுதிய 'சிறைப்பட்ட கற்பனை' என்ற நூலின் மொழிபெயர்ப்புக்காகத் தரப்பட்டது.

சல்மான் ருஷ்தீயின் 'நள்ளிரவின் குழந்தைகள்' (மிட்நைட்ஸ் சில்ட்ரன்) நூலுக்கு நாமக்கலில் உள்ள கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும் பத்தாயிரம் ரூபாய் பரிசும் அளித்துள்ளது.

'இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு' என்ற நூலுக்காக (Hindus - An Alternative History) 2016க்கான சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதையும் ஆனந்தவிகடன் வாயிலாக இவர் பெற்றார். இதற்காக 2017 மே மாதம் நாகர்கோவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இவருக்குப் பாராட்டுவிழா நடத்தி கௌரவித்தது.

இவர் மொழி பெயர்த்த நூல்களின் பட்டியல் இவரது பல்துறை அறிவைப் புலப்படுத்தும்:

  1. குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள் (The first 365 days in a baby's life)
  2. மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. அறிக்கை (Universal Declaration of Human Rights by the U.N.O)
  3. சிறார் உரிமை பற்றிய ஐ.நா. அறிக்கை (U.N.O manifesto of Children's Rights)
  4. விஷன்ஸ் கையேடு-மனித உரிமைகளும் குடியுரிமையும் (Vision Handbook on Human Rights and Citizen Rights)
  5. விஷன்ஸ் கையேடு-உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் (Vision Handbook on Local and Global Problems)
  6. உலகமயமாக்கல் (Globalization - Very Short Introduction Series published by the Oxford University Press)
  7. நீட்சே (Nietzche - Very Short Introduction Series published by the Oxford University Press)
  8. இறையியல் (Theology - Very Short Introduction Series published by the Oxford University Press)
  9. பயங்கரவாதம் (Terrorism - Very Short Introduction Series published by the Oxford University Press)
  10. சமூகவியல் (Sociology - Very Short Introduction Series published by the Oxford University Press)
  11. இசை (Music - Very Short Introduction Series published by the Oxford University Press)
  12. சிறைப்பட்ட கற்பனை (Captive Imagination by Varavara Rao, Telugu poet)
  13. பொறுப்புமிக்க மனிதர்கள் (Serious Men by Manu Joseph)
  14. நள்ளிரவின் குழந்தைகள் (Midnight's Children by Salmon Rushdie)
  15. காந்தியைக் கொன்றவர்கள் (The men who killed Gandhi by Manohar Malgaonkar)
  16. இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு (Hindus - An Alternative History by Wendy Doniger)
  17. நொறுங்கிய குடியரசு (The Broken Republic by Arundhati Roy)
  18. ஊரடங்கு இரவு (Curfewed Night by Basharat Peer)
  19. டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள் (Where there is no Doctor for Women, by Hesperian Foundation)
  20. பேற்றுச்செவிலியர் கையேடு (A Hand Book for Midwives, Hesperian Health guides)
  21. இணை மருத்துவம், மாற்றுமருத்துவம், உங்கள் உடல்நலம் (Parallel Medicine, Alternative Medicine, Your Health- Mayo Foundation)
  22. தலைமுடி இழப்பு-மருத்துவம் (Hair Loss Treatment - Mayo Foundation)
  23. மூல வியாதி (Hemorrhoids - Mayo Foundation)
  24. ஐம்பது உடல்நலக் குறிப்புகள் (Fifty Health Tips - Mayo Foundation)
  25. இயற்கை ஞானம் (Natural Wisdom)
  26. மரபணு மாற்றிய உணவுகள் (Genetically Modified Foods)
  27. இரண்டாம் சரபோஜி ஆட்சியின்கீழ் தஞ்சாவூர்
  28. கீழையியல் தத்துவம் (Eastern Philosophy)
  29. பின்நவீனத்துவம் (Post-structuralism)
  30. புவி வெப்பமயமாதல் (Global Warming)
  31. நிலத்தோற்றமும் கவிதையும் (Landscape and Poetry by Xavier S. Thaninayagam)
  32. மவுலானா அபுல்கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad)
  33. சமூகவியலின் அடிப்படைகள் (Fundamentals of Sociology by Fr. Gisbert)
  34. கடவுள் சந்தை (God Market by Meera Nanda)
  35. அரசியலுக்கோர் இலக்கணம் (A Grammar of Politics by Prof. Harold Laski)
  36. நாகரிகங்களின் மோதல் (The Clash of Civilizations by Samuel Huntington)
  37. வியத்தகு இந்தியா (The Wonder That Was India by Prof. A.L.Basham)
  38. வரலாற்றில் பார்ப்பன நீக்கம் (Debrahmanization of History, by Braj Ranjan Mani, Under Translation)

சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) விருது தொகு

மனு ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய Serious Men என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் பொறுப்புமிக்க மனிதர்கள் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார், இந்த மொழிபெயர்ப்புக்காக 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் தலைசிறந்த இலக்கிய மேம்பாட்டு அமைப்பான சாகித்திய அகாதெமியின் விருது வழங்கப்பட்டது.[2]

மற்ற விருதுகள் தொகு

  • ஆனந்தவிகடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2011)
  • கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2015)
  • ஆனந்தவிகடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2016)
  • சிறந்த பேராசிரியர்-சாதனையாளர் விருது (2017, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி)
  • திறனாய்வுச் செம்மல் விருது (தி.சு.நடராசன் அறக்கட்டளை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

மேற்கோள்கள் தொகு

  1. "பிறந்த நாள்". பார்க்கப்பட்ட நாள் மே 14, 1949. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. ஆதி (பெப்ரவரி 2017). "பேராசிரியர் பூரணச்சந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது". தி இந்து: 8. doi:26. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பூரணச்சந்திரன்&oldid=3631055" இலிருந்து மீள்விக்கப்பட்டது