இரசினி கோத்தாரி

இரசினி கோத்தாரி (Rajni Kothari, 16 ஆகத்து 1928 – 19 சனவரி 2015) என்பவர் அரசியல் ஆய்வறிஞர், கல்வியாளர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவராவார்[1]. மேலும் சாதியத்தை எதிர்த்தவராகவும், மனித உரிமைகளுக்குப் போராடியவராகவும் இருந்தார்.

பணிகள்

தொகு
  • பரோடாவில் உள்ள மகாராசா சயாசிராவ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிசெய்தார்.
  • 1968 இல் சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தைத் (CSDS) தொடங்கினார்[2].
  • 1980இல் லோகாயம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.[3] ர் அறிஞர்கள், செயல் வீரர்கள் ஆகிய இருவரிடையே ஊடாடவும் செயல் புரியவும் இவ்வமைப்பு துணையாக இருந்தது.
  • 1982 முதல் 1984 வரை பி யூ சி எல் என்னும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவராக இருந்தார்[4].
  • சமூக அறிவியல் ஆய்வு இந்தியக் கவுன்சில் (CSSR) என்னும் அமைப்பில் தலைவர் பொறுப்பை ஏற்று அரசியல் சமுக ஆய்வாளர்களுக்கு வழிகாட்டினார்.
  • சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது அதன் நெறிமுறைகளை வகுக்க உதவி புரிந்தார்.

எழுத்துப்பணி

தொகு

பொருளியல் அரசியல் வார இதழ் என்னும் பத்திரிகையில் கட்டுரைகள் பல தொடர்ந்து எழுதி வந்தார். 'இந்தியாவின் அரசியல்', 'இந்திய அரசியலில் சாதி' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

படைத்த நூல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Articles by Rajni Kothari". Economic and Political Weekly portal.
  2. "Honorary Fellows: Rajni Kothari". Centre for the Study of Developing Societies (CSDS) portal.
  3. "Right Livelihood Award Laureates: 1985 - Lokayan". Right Livelihood Award Foundation. Archived from the original on 2013-12-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-13.
  4. "PUCL National Council office bearers: Former Presidents". People's Union for Civil Liberties (PUCL). பார்க்கப்பட்ட நாள் 2014-01-13.

உசாத் துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசினி_கோத்தாரி&oldid=3543941" இலிருந்து மீள்விக்கப்பட்டது