ஆம்பர்கு (/ˈhæஎம்பிɜːrɡ//ˈhæmbɜːrɡ/; டாய்ச்சு ஒலிப்பு: [ˈhambʊɐk]  ( கேட்க), உள்ளூர் உச்சரிப்பு IPA: [ˈhambʊɪ̯ç] (கேட்க); நேதர்துவித்து மொழி Hamborg [ˈhambɔːç] (கேட்க)), ஆம்பர்கு, செர்மனியின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதன் மக்கள் தொகை 1.7 மில்லியன்.

தொடர் வெள்ளம், ஆம்பர்கின் பெருந்தீ, இராணுவ மோதல்கள் மற்றும் இரண்டாம் உலகப்போரின் குண்டுத் தாக்குதல்களால் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டு வந்த இந்நகரம் , ஒவ்வொரு பேரழிவுக்கு பிறகும் மீண்டு வந்தது.

செக் குடியரசில் உருவாகி ஜெர்மனி வழியாகப் பாயும் எல்பி ஆற்றில் ஆம்பர்கு ஒரு முக்கிய துறைமுகமாகும்.[1] ஏர்பஸ், யுனிலிவர் போன்ற நிறுவனங்களின்  ஊடகங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்துறை மையமாகவும் விளங்குகிறது. ஆம்பர்கு, பல நூற்றாண்டுகளாக முக்கிய நிதி மையமாகவும்,செர்மனியின் பழமையான பங்குச்சந்தையாகவும்,  உலகின் இரண்டாவது பழமையான வங்கியான பெரென்பெர்க் வங்கியுள்ள நகரமாகவும் உள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. "World Port Ranking 2011" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பர்கு&oldid=2638600" இலிருந்து மீள்விக்கப்பட்டது