அலெக்சாண்டர் கெரென்சுகி
உருசிய அரசியல்வாதி
அலெக்சாண்டர் ஃபியோதரொவிச் கெரென்சுகி (Alexander Fyodorovich Kerensky, உருசியம்: Алекса́ндр Фёдорович Ке́ренский, அலெக்சாந்தர் பியோதரவிச் கெரென்ஸ்கி, பஒஅ: [ɐlʲɪˈksandr ˈkʲerʲɪnskʲɪj]; 4 மே [யூ.நா. 22 ஏப்ரல்] 1881 – 11 சூன் 1970) 1917ஆம் ஆண்டு உருசியப் புரட்சிகளின் போதும் அதற்கு முன்னரும் முதன்மையான அரசியல்வாதியாக இயங்கியவர்.
அலெக்சாண்டர் கெரென்சுகி | |
---|---|
2வது உருசிய இடைக்கால அரசின் அமைச்சரவைத் தலைவர் | |
பதவியில் 21 சூலை 1917 – 7 நவம்பர் 1917 [8 சூலை – 26 அக்டோபர் 1917 (பழைய பாணி)] | |
முன்னையவர் | ஜார்ஜி இலோவ் |
பின்னவர் | பதவி அழிக்கப்பட்டது |
உருசியப் பிரதமர் | |
பதவியில் 21 சூலை 1917 – 7 நவம்பர் 1917 | |
முன்னையவர் | ஜார்ஜி இலோவ் |
பின்னவர் | விளாடிமிர் லெனின் ( மக்கள் அதிகாரிகள் மன்றத் தலைவராக) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அலெக்சாண்டர் ஃபிடோக் கெரென்சுகி 4 மே 1881 சிம்பிர்ஸ்க், உருசியப் பேரரசு (தற்போது உல்யானோவ்ஸ்க், உருசியக் கூட்டமைப்பு) |
இறப்பு | 11 சூன் 1970 (அகவை 89) நியூ யோர்க், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு |
இளைப்பாறுமிடம் | புட்னி வேல் கல்லறை இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | உருசியர் |
அரசியல் கட்சி | சோசலிச-புரட்சிக் கட்சி (திருடோவிக் நாடாளுமன்ற பிளவுக் குழு) |
பெற்றோர் |
|
தொழில் | அரசியல்வாதி |
கெரென்சுகி உருசிய இடைக்கால அரசில் இரண்டாவது பிரதமராக பொறுப்பு வகித்தார். அந்த ஆட்சியை அக்டோபர் புரட்சியின்போது விளாடிமிர் லெனின் தலைமையில் போல்செவிக்குகள் தோற்கடித்தனர். இதன் பின்னர் தமது மிகுதி வாழ்நாளை வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார்; 1970இல் தமது 89வது அகவையில் நியூயார்க்கு நகரத்தில் இயற்கை எய்தினார்.
வெளி இணைப்புகள்
தொகு- An account of Kerensky at Stanford in the 1950s பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அலெக்சாண்டர் கெரென்சுகி
- Alexander Kerensky Museum in London பரணிடப்பட்டது 2011-01-11 at the வந்தவழி இயந்திரம்
- The Prelude To Bolshevism: The Kornilov Rising (1919)
- The Catastrophe (1927)