உருசிய இடைக்கால அரசு

உருசிய இடைக்கால அரசு (Russian Provisional Government, உருசியம்: Временное правительство России, translit. Vremennoye pravitel'stvo Rossii) சார் மன்னர் நிக்கலாசு II (மார்ச்சு 15, 1917) தமது முடியாட்சியைத் துறந்த பின்னர் உருவான குடியரசின் இடைக்கால அரசு ஆகும். [1][2] இந்த அரசு உருசியப் பேரரசின் அமைச்சரவைக்கு மாற்றாக இயங்கியது. உருசிய அரசமைப்பு மன்றத்திற்கான தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதும் தேர்தல் முறைமைகளை சீரமைப்பதும் இதன் நோக்கங்களாக இருந்தன. அரசு இரண்டு அங்கமுடையதாக இருந்தது. முதலாவது அங்கமாக இளவரசர் ஜார்ஜி இலோவ் தலைமையேற்ற அரசக் கூட்டணியும் மற்றொரு அங்கமாக அலெக்சாண்டர் கெரென்சுகி தலைமையேற்ற சோசலிச கூட்டணியும் இருந்தன. உலகப்போர் நடந்துகொண்டிருந்ததாலும் பல பிரிவினை இயக்கங்களும் பிற அரசியல் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இந்த அரசின் நோக்கமான அரசமைப்பு தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருந்தது.

உருசிய இடைக்கால அரசு
(இலோவ் அரசு)
முதல் அமைச்சரவை - உருசியக் குடியரசு (1917 முதல்)
உருவான நாள்மார்ச்சு 15, 1917
கலைக்கப்பட்ட நாள்சூலை 1917 (காண்க சூலை நாட்கள்)
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்ஜார்ஜி இலோவ்
நாட்டுத் தலைவர்கிராண்ட் டியூக் மைக்கேல் (நிபந்தனைகளுடன்)
உறுப்புமை கட்சிஉருசிய முன்னேற்ற அணி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி
எதிர்கட்சி அமைச்சரவைபெட்ரோகிராடு சோவியத்தின் செயற்குழு
எதிர் கட்சிசோசலிசக் கூட்டணி
எதிர்க்கட்சித் தலைவர்நிக்கொலாய் செக்கெட்சே
வரலாறு
உருவாக்கல் அமைப்புதேசிய டூமாவின் இடைக்காலக் குழு
கலைத்தல் அமைப்புகெரன்சுகி அரசு
முந்தையமிக்கைல் ரோட்சியன்கோ
அடுத்தஅலெக்சாண்டர் கெரென்சுகி

செப்டம்பர் 14 அன்று நாட்டின் சட்டவாக்க மன்றமான தேசிய டூமா அலுவல்முறையாக கலைக்கப்பட்டது. இதற்கு மாற்றாக உருசிய இயக்குநரகம் ஏற்படுத்தப்பட்டது. சார் மன்னராட்சி கவிழ்ந்த நிலையிலேயே இந்தத் தகுதி பெற்றாலும் நாடும் முறைப்படியாக உருசியக் குடியரசு (உருசியம்: Российская республика, translit. Rossiyskaya respublika) அறிவிக்கப்பட்டது. இடைக்கால அரசு எட்டு மாதங்களே இயங்கியது. அக்டோபர் புரட்சி (அல்லது நவம்பர் 1917)க்குப் பின்னர், போல்செவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இடைக்கால அரசும் முடிவிற்கு வந்தது.

மேற்சான்றுகள்

தொகு
  1. Manifest of abdication (உருசிய மொழியில்)
  2. "Announcement of the First Provisional Government, 13 March 1917". FirstWorldWar.com. 2002-12-29. பார்க்கப்பட்ட நாள் 2007-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_இடைக்கால_அரசு&oldid=2210350" இலிருந்து மீள்விக்கப்பட்டது