உருசியக் குடியரசு

1917ஆம் ஆண்டில் மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்த குடியரசு

உருசியக் குடியரசு (Russian Republic, உருசியம்: Российская республика, ஒ.பெ Rossiyskaya respublika, பஒஅ[rɐˈsʲijskəjə rʲɪsˈpublʲɪkə]) பேரரசர் திக்கோலசு II 15 மார்ச்சு [யூ.நா. 2 மார்ச்சு] 1917 அன்று தமது முடியாட்சியை துறந்தபிறகு முன்னாள் உருசியப் பேரரசின் பகுதிகளை குறைந்த காலத்திற்கு சட்டப்படி, ஆட்சி செய்த அரசியல் அமைப்பாகும். ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தக் குடியரசு அக்டோபர் புரட்சியால் 7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917 அன்று உருசிய சோவியத் கூட்டு சோசலிச குடியரசால் அகற்றப்பட்டது. அலுவல்முறைப்படி, குடியரசின் அரசாக உருசிய இடைக்கால அரசு இருந்தபோதிலும் நடைமுறைப்படி அரசுக் கட்டுப்பாடு இடைக்கால அரசிற்கும் பெட்ரோகிராடு சோவியத்திற்கும் இடையே பகிரப்பட்டது.

உருசியக் குடியரசு
Российская республика
Rossiyskaya respublika
இடைக்கால அரசு
(15 மார்ச்சு – 14 செப்டம்பர் 1917)
குடியரசு (அரசு)
(14 செப்டம்பர் – 7 நவம்பர் 1917)

1917
கொடி சின்னம்
நாட்டுப்பண்
Rabochaya Marselyeza
தொழிலாளிகளின் தேசியகீதம்
1917இல் உருசிய இடைக்கால அரசின் ஆட்சிப் பகுதி. செருமானியப் பேரரசிடம் இழந்த சில மேற்குப் பகுதிகளைத் தவிர பெரும்பான்மையும் உருசியப் பேரரசின் ஆட்சிப் பகுதியாகும்; 1867இல் அலாஸ்கா அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு விற்கப்பட்டது.
தலைநகரம் பெட்ரோகிராடு (தற்போது சென் பீட்டர்ஸ்பேர்க்)
மொழி(கள்) உருசிய மொழி
அரசாங்கம் உருசிய இடைக்கால அரசு
உருசிய இடைக்கால அரசின் அமைச்சரவைத் தலைவர்
 -  15 மார்ச்சு – 21 சூலை 1917 ஜார்ஜி இலோவ்
 -  21 சூலை – 7 நவம்பர் 1917 அலெக்சாண்டர் கெரென்சுகி
வரலாற்றுக் காலம் முதலாம் உலகப் போர்
 -  பெப்ரவரிப் புரட்சி 15 மார்ச்சு 1917
 -  குடியரசாக அறிவிக்கப்பட்டது 14 செப்டம்பர்
 -  அக்டோபர் புரட்சி 7 நவம்பர் 1917
நாணயம் ரூபிள்
முந்தையது
உருசியப் பேரரசு
தற்போதைய பகுதிகள்
Warning: Value specified for "continent" does not comply
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசியக்_குடியரசு&oldid=2225384" இருந்து மீள்விக்கப்பட்டது