காரைக்குடி மணி
மிருதங்க இசைக் கலைஞர்
காரைக்குடி மணி (11 செப்டம்பர் 1945 – 4 மே 2023) இந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார்.
காரைக்குடி மணி | |
---|---|
காரைக்குடி மணி | |
பிறப்பு | காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா | செப்டம்பர் 11, 1945
இறப்பு | மே 4, 2023 சென்னை, தமிழ்நாடு | (அகவை 77)
அறியப்படுவது | மிருதங்கக் கலைஞர் |
பெற்றோர் | டி. ராமநாத ஐயர், பட்டம்மாள் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுகாரைக்குடி ரெங்கு ஐயங்கார், டி. ஆர். ஹரி ஹர சர்மா மற்றும் கே. எம். வைத்யநாதன் இவர்களிடம் மிருதங்க இசையைக் கற்றார். தனது எட்டாவது வயதில், காரைக்குடியில் தனது முதல் மேடைக் கச்சேரியை வழங்கினார். தனது 18ஆவது வயதில் 'தேசிய விருதினை' அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடமிருந்து பெற்றார்.
தொழில் வாழ்க்கை
தொகுஇவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:
சிறப்புகள்
தொகு- 1989ஆம் ஆண்டில் 'சுருதி லய கேந்திரா' எனும் இசைப் பள்ளியை சென்னை, ரங்கராஜபுரத்தில் துவக்கினார். இப்பள்ளியின் கிளைகள் தற்போது ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் உள்ளன. 1000'க்கு மேற்பட்ட மாணவர்கள், நேரடியாகவோ மறைமுகமாகவோ இப்பள்ளிகளின் மூலம் மிருதங்க இசையைக் கற்றுள்ளனர்.
- 'Seasun Gurukulam' எனும் பெயரில் இசைப் பயிற்றுவிப்பு மையம் ஒன்றினை சென்னையில் அமைத்துள்ளார். கிழக்குக் கடற்கரைச் சாலையில், பனையூர் எனுமிடத்தில் கடற்கரையையொட்டி இந்த மையம் உள்ளது. இந்த மையத்தில் வகுப்பறை, பொதுவான சமையலறை மற்றும் இசை நூலகமும் உள்ளன.
விருதுகள்
தொகுசங்கீத நாடக அகாதமி விருது, 1999
மறைவு
தொகுகாரைக்குடி மணி 2023 மே 4 அன்று தனது 77-ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mridangam artiste, Karaikudi Mani, no more, தி இந்து, மே 4, 2023
உசாத்துணை
தொகுவெளி இணைப்புகள்
தொகு- காரைக்குடி மணி இணையதளம் பரணிடப்பட்டது 2013-01-20 at the வந்தவழி இயந்திரம்