சூர் பேரரசு

சூர் பேரரசு (Sur Empire) (பஷ்தூ: د سوریانو ټولواکمني) (ஆட்சிக் காலம்: 1540 - 1556) இந்தியத் துணைக்கண்டத்தின், மேற்கில் தற்கால ஆப்கானித்தான் முதல், கிழக்கில் வங்காள தேசம் வரை ஆண்ட பஷ்தூ மொழி பேசிய சன்னி இசுலாமிய பஷ்தூன்களின் அரசாகும்.[5] சூர் வம்சப் பேரரசர்கள் 1540 முதல் 1556 முடிய 16 ஆண்டுகள் சதாரா மற்றும் தில்லியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர்[6]முகலாயப் பேரரசர் உமாயூன் ஆட்சிக் காலத்தில் சூர் வம்ச ஆட்சி சில ஆண்டுகள் தடைப்பட்டு நின்றாலும், உமாயூனுக்குப் பிறகு மீண்டும் சூர் வம்ச ஆட்சி நிலைபெற்றது. சூர் வம்சத்தின் புகழ் பெற்ற பேரரசர் சேர் சா சூரி, சூர் வம்சப் பேரரசை நிறுவியவர் ஆவார். [5]இடையில் ஹெமு என்ற இந்துப் போர்ப்படைத்தலைவர் சூர் வம்ச மன்னரை வீழ்த்தி ஒரு மாதம் தில்லியைக் கைப்பற்றி ஆண்டார்.

சூர் பேரரசு
امپراطوری سور (பாரசீக மொழி)
د سرو امپراتورۍ (Pashto)
1538/1540–1556[a]
சேர் சா சூரியின் (1538/1540-1545) கீழ் இதன் உச்சபட்ச பரப்பளவின் போது சூர் பேரரசின் வரைபடம்
சேர் சா சூரியின் (1538/1540-1545) கீழ் இதன் உச்சபட்ச பரப்பளவின் போது சூர் பேரரசின் வரைபடம்
நிலைபேரரசு
தலைநகரம்சசாராம்
பேசப்படும் மொழிகள்வங்காள மொழி, போச்புரி, இந்தவி, பாரசீக மொழி,[1]
பஷ்தூ மொழி (இராணுவம்)[2]
சமயம்
சன்னி இசுலாம்
அரசாங்கம்முற்றிலுமான முடியாட்சி
பாடிஷா 
• 1538/1540-1545
சேர் சா சூரி (முதல்)
• 1555-1556
அடில் ஷா சூரி (கடைசி)
வரலாறு 
• தொடக்கம்
6 ஏப்ரல் 1538/1540
• சிரிகிந்த் யுத்தம்
1556[a]
முந்தையது
பின்னையது
முகலாயப் பேரரசு
வங்காள சுல்தானகம்
முகலாயப் பேரரசு
வங்காள சுல்தானகம்
1540–1545 இல் சேர் சா சூரியால் வெளியிடப்பட்ட 178 கிராம் எடை கொண்ட முதல் வெள்ளி ரூபாய்[3][4]

வரலாறு தொகு

சூர் வம்ச நிறுவனரான சேர் சா சூரி 26 சூன் 1539இல் சௌசா போரிலும், 17 மே 1540இல் பில்கிராம் போரிலும் உமாயூனை வென்று,[7]ஆப்கானித்தான் மற்றும் பஞ்சாப் முதல், கிழக்கில் பிகார், வங்காளம் வரை ஆண்டார்.

17 ஆண்டு கால சூர் வம்ச ஆட்சியில், குறிப்பக சேர் சா சூரி ஆட்சியில், இந்தியத் துணை கண்டத்தில் வங்காளம் முதல் பஞ்சாப் முடிய நெடுஞ்சாலைகள் அமைத்தன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கப்பட்ட்து. வெள்ளி நாணயங்கள் வெளியிட்டனர். வேளாண் நிலங்களை அளந்து ஆவணப்படுத்தப்பட்டது, நீர் பாசான வசதிகள், நிலவரி வசூலித்தல், கிராம நிர்வாகம் போன்றவைகளில் நிர்வாகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. குடிமக்களுக்கும், அரசிற்கிடையே நல்லுறவுக்கு வழிவகுக்கப்பட்டது.

ஹெமு என்ற இராஜபுத்திர போர்ப்படைத்தலைவர், சூர் வம்ச ஆட்சியைக் கைப்பற்றி ஒரு மாத காலம் ஆண்டார்.

பின்னர் முகலாய வம்ச அக்பர் காலத்தில், பைரம் கான் லோடியால் 1556இல் சூரி வம்சம் வீழ்ச்சி கண்டது.

சூர் வம்ச ஆட்சியாளர்கள் தொகு

சூர் வம்சத்தின் ஆட்சியாளர்கள்;

பெயர் படம் ஆட்சி துவக்கம் ஆட்சி முடிவு
சேர் சா சூரி
சுல்தான்
  மே 17, 1540[8] மே 22, 1545[8]
இசுலாம் ஷா சூரி
சுல்தான்
மே 26, 1545[9] நவம்பர் 22, 1554[9]
பிரௌஸ் ஷா சூரி
சுல்தான்
1554[10]
முகமது அடில் ஷா
சுல்தான்
1554[10] 1555[11]
இப்ராகிம் ஷா சூரி
சுல்தான்
1555[11]
சிக்கந்தர் ஷா சூரி
சுல்தான்
1555[11] சூன் 22, 1555[11]
அடில் ஷா சூரி
சுல்தான்
சூன் 22, 1555[11] 1556[11]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. Alam, Muzaffar (1998). "The pursuit of Persian: Language in Mughal Politics". Modern Asian Studies (Cambridge University Press) 32 (2): 317–349. doi:10.1017/s0026749x98002947. https://archive.org/details/sim_modern-asian-studies_1998-05_32_2/page/317. "Hindavi was recognized as a semi-official language by the Sor Sultans (1540-55) and their chancellery rescripts bore transcriptions in the Devanagari script of the Persian contents. The practice is said to have been introduced by the Lodis (1451–1526).". 
 2. Tarikh-i-Sher Shahi (1580). "Táríkh-i Sher Sháhí; or, Tuhfat-i Akbar Sháhí, of 'Abbás Khán Sarwání. CHAPTER I. Account of the reign of Sher Sháh Súr.". Sir H. M. Elliot (London: Packard Humanities Institute): p. 78. https://books.google.ca/books/about/Tarikh_i_Sher_Shahi_or_Tuhfat_i_Akbar_Sh.html?id=AFGTzQEACAAJ&redir_esc=y. 
 3. Mughal Coinage பரணிடப்பட்டது 2002-10-05 at the வந்தவழி இயந்திரம் Reserve Bank of India RBI Monetary Museum,
 4. [[s:1911 Encyclopædia Britannica/rupee (Rupee)   இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
 5. 5.0 5.1 Kissling, H. J.; N. Barbour; Bertold Spuler; J. S. Trimingham; F. R. C. Bagley; H. Braun; H. Hartel (1997). The Last Great Muslim Empires. BRILL. பக். 262–263. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-02104-3. https://books.google.com/books?id=-AznJs58wtkC&lpg=PP1&pg=PA262#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2011-07-20. 
 6. "Sūr dynasty". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் Online. http://www.britannica.com/EBchecked/topic/574921/Sur-dynasty. பார்த்த நாள்: 2010-08-25. 
 7. "Sher Khan". The Columbia Electronic Encyclopedia, 6th edition (Columbia Encyclopedia). 2007. http://www.infoplease.com/ce6/people/A0844870.html. பார்த்த நாள்: 2010-08-25. 
 8. 8.0 8.1 Majumdar, R.C. (ed.) (2007). The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, வார்ப்புரு:Listed Invalid ISBN, p.83
 9. 9.0 9.1 Majumdar, R.C. (ed.) (2007). The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, வார்ப்புரு:Listed Invalid ISBN, pp.90–93
 10. 10.0 10.1 Majumdar, R.C. (ed.) (2007). The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, வார்ப்புரு:Listed Invalid ISBN, p.94
 11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 Majumdar, R.C. (ed.) (2007). The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, வார்ப்புரு:Listed Invalid ISBN, pp.94–96

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Suri Empire
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்_பேரரசு&oldid=3796730" இருந்து மீள்விக்கப்பட்டது