திவாலா நிலை

திவாலா நிலை என்பதானது ஒரு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம், பற்றாளர் எனப்படும் கடன் கொடுத்தவர்களுக்கு அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாதிருத்தல் அல்லது அதற்கான ஆற்றல் குறைவைச் சட்ட பூர்வமாக அறிவிக்கும் ஒரு முறைமையாகும். தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தின் ஒரு பகுதியைப் பெறுவதற்காகவோ அல்லது ஒரு மறு சீரமைப்பு ஒன்றினைத் துவக்குவதற்காகவோ பற்றாளர்கள் கடனாளிக்கு எதிராக திவாலா நிலை ("தன்னிச்சை அல்லாத திவால் நிலை") கோரி மனு தாக்கல் செய்யலாம். இருப்பினும், பெரும்பான்மையான நிகழ்வுகளில், திவாலா நிலைக்கான செயற்பாட்டினை கடனாளிகளே துவக்குகின்றனர் (அதாவது கடனைத் தீர்க்க வழியற்ற நொடித்த தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம் தாக்கல் செய்யும் "தன்னிச்சையான திவாலா நிலை").

ஐக்கிய இராச்சியத்தில், தாய் நிறுவனம் ஒன்று திவாலா ஆகிவிட்டதாக அறிவித்ததற்கு அடுத்த தினம், கணினிக் கடை ஒன்றின் கதவில் ஒட்டப்பட்டுள்ள கடை மூடுதலுக்கான அறிவிப்பு (கண்டிப்பாக, நிர்வாகத்தால் அமலாக்கப்பட்டுள்ளது - உரையைக் காண்க).

வரலாறு

தொகு

திவாலா நிலைமையின் வரலாறும் உருவாக்கமும்

தொகு

ஐக்கிய மாநிலங்களில் தற்போது அறியப்படும் திவாலா நிலைச் சட்டம் என்பதன் கருத்தாக்கமும் தோற்றுவாயும் இங்கிலாந்து நாட்டில் உருவானதாகும். முதன் முதலான இங்கிலாந்து திவாலா நிலைச் சட்டம் என்பது 1542ஆம் வருடம் இயற்றப்பட்டதாகப் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. (34 மற்றும் 35, ஹென்ரி VIII, சி.4 (1542) இங்கிலாந்து).

உண்மையில், திவாலா நிலைச் சட்டம் என்பதானது கடனாளிக்காக அல்லாமல்- பற்றாளருக்கான ஒரு நிவாரணமாகவே ஆரம்ப காலங்களில் திட்டமிடப்பட்டது. அரசர் ஹென்ரி VIII-இன் ஆட்சிக் காலத்தின்போது, தனக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வணிகர் ஒருவரின் அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றுவதற்கான உரிமையை பற்றாளருக்கு திவாலா நிலைச் சட்டம் அனுமதித்தது. மேலும், தன் சொத்து முழுவதையும் இழப்பதற்கும் கூடுதலாக, கடனாளி, தாம் கடனைத் திரும்பச் செலுத்தத் தவறியதற்காக, தன் சுதந்திரத்தையும் இழந்து சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதன் விளைவாக, கடனாளியின் குடும்பத்தார் அவரைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக அவர் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இருப்பினும், காலம் முன்னேற, கடனாளிகளின் உரிமை நிலைமைகளும் முன்னேறத் துவங்கின.

உதாரணமாக, 1700களில் அடிக்கடி கடனாளிகள் சிறையிலிருந்து விடுதலையாயினர். அவர்களில் பலர் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குத் தப்பி ஓடினர். பலர் ஜார்ஜியா மற்றும் டெக்சாஸ் ஆகிய இடங்களுக்கு குடி மாறிச் சென்றனர். இவை கடனாளிகளின் குடியிருப்பு என்று அறியப்படலாயின. இறுதியாக, இங்கிலாந்தில் 1800களின் துவக்கத்தில் கடனாளிகள் பலர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது கடன் தீர்க்கப்பட்டது. இருப்பினும், பல வருடங்களுக்கு திவாலா நிலை என்பதானது பற்றாளருக்கான நிவாரணமாகவே தொடர்ந்து, தன்னிச்சை அற்ற இயல்பு கொண்டும் மற்றும் தண்டனைக்குரியதாகவும் தொடர்ந்து இருந்து வரலானது. பொதுவாக, அது வணிகர்களுக்கு எதிராகவே பயன்பட்டது.

ஆங்கிலேய முறை, (பற்றாளர் மற்றும் கடனாளி இருவரும்) இணைந்து அறிவிக்கும் திவாலா நிலை 1825வது ஆண்டு ஆங்கிலேயச் சட்டம் ஒன்றில் வரையறுக்கிறது. வணிகர் ஒருவர், திவாலாப் பிரிவின் தலைமைச் செயலதிகாரியின் அலுவலகத்தில் தாம் நொடித்து போனதாக ஒரு வாக்குமூலம் சமர்ப்பித்து அதை விளம்பரப் படுத்தும்போதும் இவ்வாறு நிகழலானது. இவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்ட வாக்கு மூலத்தை அடுத்து ஒரு திவாலா விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதன் பிறகு, இந்தச் சட்டத்தின் அடிப்படையிலான திவாலா விசாரணக்குழு, "அத்தகைய வாக்குமூலம் திவாலா ஆனவர் மற்றும் பற்றாளர் அல்லது வேறொரு நபர் ஆகியோர் கலந்தாலோசித்தோ அல்லது பரஸ்பரம் ஒப்புக் கொண்ட முறைமையினாலோ செல்லுபடியாகாது என்று கருதக் கூடாது" என அறிவித்து ஒரு சட்டம் இயற்றியது. (6.ஜியோ. IV, சி.16 பிரிவுகள் VI, VII (ஆங்கிலம்). 1849வது ஆண்டு வரை தன்னிச்சையான திவாலா நிலையானது அங்கீகரிக்கப்படவில்லை (12 மற்றும் 13, விக்ட்., சி.106, பிரிவு 93 (1849) (ஆங்கிலம்).

1789ஆம் ஆண்டு ஐக்கிய மாநிலங்கள் அரசியல் சட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டபோது திவாலா நிலை என்னும் கருத்தாக்கமானது குறிப்பான அங்கீகாரம் பெற்றது. ஐக்கிய மாநிலங்களின் அரசியல் சட்டம், ஐக்கிய மாநிலங்கள் முழுவதிலும் "திவாலா நிலை குறித்து ஒரே மாதிரியான சட்டங்கள்" இயற்றப்படுவதற்கான அதிகாரத்தைக் காங்கிரஸ் கொண்டிருக்கும் என்று கூறுகிறது. யூ.எஸ். கான்ஸ்ட்.I, பிரிவு 8, சிl.4. இவ்வாறாக, காங்கிரசால் இயற்றப்படும் திவாலா நிலைச் சட்டம் கூட்டரசின் சட்டம் என்பதாகிறது. முதல் திவாலா நிலைச் சட்டம் 1800வது ஆண்டு காங்கிரசால் இயற்றப்பட்டது. 1800வது வருடத்திய திவாலா நிலைச் சட்டம், அத்தியாயம் 6, 2 ஸ்டேட். 19 இது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்துவதாகவும் மற்றும் தன்னிச்சையற்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிப்பதாகவும் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் தன்னிச்சையான திவாலா நிலை என்பது அறியப்படாத ஒன்று.

ஐக்கிய மாநிலங்களில் தன்னிச்சையான திவாலா நிலை என்பதானது 1841ஆம் வருடத்திய சட்டங்களால் (1841ஆம் வருடம் ஆகஸ்ட் 19 சட்டம், பிரிவு 1, 5, ஸ்டேட்.440) மற்றும் 1867 (1867ஆம் வருடத்திய மார்ச் 2 சட்டம், பிரிவு 11, 14, ஸ்டேட்.521) ஆகியவற்றால் ஒரு நிறுவனமாக நிலை நாட்டப்பட்டது. நவீன கருத்தாக்கமான கடனாளி-பற்றாளர் உறவுகளை நிலை நிறுத்திய 1898ஆம் வருடத்திய திவாலா சட்டம் என்னும் ஆரம்ப கால சட்டங்கள் தொடங்கி, சாண்ட்லர் சட்டம் என்று பரவலாக அறியப்படும் 1938ஆம் வருடத்திய திவாலா சட்டம் வரையிலும், மற்றும் அதனைத் தொடர்ந்த பிற சட்டங்களிலும், தன்னிச்சையான திவாலாவின் நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டு, தன்னிச்சையான மனுத் தாக்கல் செய்வது என்பதனைக் கடனாளிகளுக்கு மிகவும் விருப்பமான ஒரு தெரிவாகச் செய்துள்ளது.

திவாலா நிலைக் கோட்பாடுகள் என்று பொதுவாக அறியப்படும் 1978ஆம் ஆண்டின் திவாலா சீரமைப்புச் சட்டம் திவாலா அமைப்பில் ஒரு மிகப் பெரும் சீரமைப்பை உருவாக்கியது. எல்லாவற்றிற்கும் முதன்மையாக, 1979வது வருடம் அக்டோபர் முதல் தேதி துவங்கி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்திற்கும் இது பொருந்துவதானது. இரண்டாவதாக, 1978வது வருடத்திய சட்டத்தில் நான்கு தலைப்புகள் இருந்தன. தலைப்பு I என்பதானது ஐக்கிய மாநிலங்கள் கோட்பாட்டின் தலைப்பு 11 என்பதன் திருத்தமாகும். தலைப்பு II என்பதானது ஐக்கிய மாநிலங்கள் கோட்பாட்டின் திருத்தப்பட்ட தலைப்பு 28 மற்றும் சாட்சி பற்றிய கூட்டரசு சட்டங்களைக் கொண்டிருந்தது. தலைப்பு III, திவாலா நிலைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட இதர கூட்டரசுச் சட்டங்களில் தேவையான மாற்றங்களைச் செய்வதாக இருந்தது, மற்றும், தலைப்பு IV, திவாலா நிலைக் கோட்பாடுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டிருந்த சட்டங்களை ரத்து செய்வது, புதிய சட்டத்தின் பிரிவுகளுக்கான அமலாக்கத் தேதிகள், சேமிப்பிற்குத் தேவையான வசதிகள், இடைக்காலத்தில் குடும்பச் செலவுகளுக்கான விபரங்கள் மற்றும் ஐக்கிய மாநில அறங்காவலரின் முன்னோட்ட நிரல் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

1978ஆம் வருடத்திய சட்டத்தின் கீழ் நிகழ்ந்த மாற்றங்களில் மிகவும் முக்கியமானது என்பது நீதி மன்றங்களைப் பொருத்ததாகவே இருக்கலாம். 1978வது வருடத்திய சட்டம் நீதி மன்றங்களின் கட்டமைப்பைத் தலைகீழாக மாற்றியமைத்து, நீதி மன்றங்களின் நீதி அதிகாரிகளுக்கு எங்கும் செல்லுமை கொண்டதான அதிகார வரம்பு எல்லைகளை அளித்தது. இந்தச் சட்டம், "தலைப்பு 11 என்பதன் கீழ் உள்ள அனைத்துக் குடிமக்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் தலைப்பு 11 என்பதன் கீழ் அல்லது அதற்குத் தொடர்பான வழக்குகள்" அனைத்தின் மீதாகவும் புதிய நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பு எல்லைகளை அளித்தது. 28 யு.எஸ்.சி §1471 (பி)(1976 பதிப்பு. சப்.)

மாவட்ட நீதிமன்றம் என்பதன் இணையாக இந்தப் புதிய நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டு, அவை தன்னுரிமை கொண்ட நீதி மன்றங்களாகச் செயல்பட வழி வகுக்கப்பட்டது. இவ்வாறு விரிக்கப்பட்ட அதிகார வரம்பு எல்லை என்பதானது முதன்மையாக திவாலா நீதிபதிகளாலேயே கையாளப்பட்டது. திவாலா நீதிபதியானவர் ஷரத்து I என்பதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்படும் நீதிபதியாவார்.

1978ஆம் வருடத்திய சட்டத்தின் விதிகள் நார்த்தர்ன் பைப்லைன் கம்பெனி அதற்கெதிரான மராத்தன் பைப்லைன் கம்பெனி, 458 யு.எஸ் 50 102 எஸ். சிடி என்ற வழக்கில் நுண்ணாய்வுக்கு உட்சென்றன. 2858, 73 எல். 2டி 598 [6 சி.பி.சி.2டி 785] (1982). பொதுவாக, மராத்தன் வழக்கு என்று குறிப்பிடப்படும் இந்த உச்ச நீதிமன்ற வழக்கில், நீதி மன்றம், திவாலா நீதிபதிகளுக்கு விரிவான அதிகார வரம்பு எல்லை வழங்குவதை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று நிலை நிறுத்தியது. ஏனெனில், இந்த நீதிபதிகள் அரசியல் சட்டமைப்பின் ஷரத்து III என்பதன் கீழ் நியமனம் செய்யப்படுவதோ அல்லது பாதுகாக்கப்படுவதோ இல்லை. ஐக்கிய மாநிலங்களின் அரசியல் சட்டமைப்பின் ஷரத்து III என்பதன்படி, நீதிபதிகள் தங்களது நன்னடைத்தைக் காலத்தில் (வாழ்வு முழுவதற்குமான ஒரு நியமனமாக) பதவியில் வீற்றிருப்பார்கள் மற்றும் அவர்களது பதவிக்காலத்தின்போது அவர்களது ஊதியம் வெட்டப்பட முடியாதது. ஷரத்து I என்பதன் கீழாக வரும் நீதிபதிகளுக்கு அத்தகைய பாதுகாப்புக் கிடையாது.

கடனாளர் எதிர் நடவடிக்கை கோரி திவாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, அதிகார வரம்பு எல்லை தொடர்பான கேள்விகள் உருவாகத் தொடங்கின. இவற்றால், ஒப்பந்த மீறல், உத்திரவாதச் சான்று மற்றும் தவறான முறையில் வெளிப்படுத்துதல் ஆகிய விஷயங்களும் பார்வைக்கு உள்ளாயின. மாவட்ட நீதிமன்றத்தில் பிரதிவாதி தாக்கல் செய்திருந்த தள்ளுபடி கோரும் மனுவை திவாலா நீதி மன்றம் மறுத்து விட்டது. 28 யு.எஸ்.சி.§1471 என்பதானது, திவாலா நீதிமன்றங்களுக்கு விரிக்கப்பட்ட அதிகார வரம்பு எல்லைகளை வழங்கியதன் மூலமாக, ஷரத்து III என்பதன் கீழ் வரும் நீதிபதிகளுக்கு உரிய அதிகாரங்களை இது ஷரத்து III அல்லாத நீதிபதிகளுக்கு அளித்தது ஐக்கிய மாநிலங்கள் அரசியல் சட்ட அமைப்பின் ஷரத்து III என்பதன் மீறலாக உள்ளது என்று மாவட்ட நீதி மன்றம் தீர்ப்பளித்தது. பன்மைக் கருத்துக்கள் பெறப்பட்ட ஒரு தீர்ப்பில், உச்ச நீதி மன்றமானது 28 யு.எஸ்.சி '1471 சட்டம், திவாலா நீதிமன்றங்களுக்கு வழங்கிய விரிந்த அதிகார வரம்பு எல்லை என்பதானது ஷரத்து III என்பதன் கீழ் வரும் அதிகாரங்களை ஷரத்து III என்பதன் கீழ் வராத நீதி மன்றங்களுக்கு அளித்த செயற்பாடு ஒரு சட்ட முரணான அதிகார வழங்கீடு என்று கூறியது. இதைப் போன்றே, அதிகார வரம்பு எல்லை ஷரத்துக்களை முன் வைத்த 28 யு.எஸ்.சி '1471 என்னும் 1978வது வருடத்திய திவாலா சீரமைப்பு சட்டத்தின் 241 (ஏ) என்னும் பிரிவும் சட்ட முரணானது. "திவாலா சட்டங்களின் இடைக்கால நிர்வாகத்தைப் பாதிக்காத வண்ணம், திவாலா நீதிமன்றங்களைத் திருத்தியமைக்க அல்லது வேறு வகையான செல்லுமை கொண்ட சட்டங்களை இயற்ற காங்கிரசிற்கு ஒரு வாய்ப்பு" அளிப்பதற்காக, நீதி மன்றமானது தனது தீர்ப்பை 1982ஆம் வருடம் அக்டோபர் 4 வரை ஒத்தி வைத்தது. ஐடி 458 யு.எஸ்.89இல்.

இந்தத் தடை உத்தரவு காலாவதியான பிறகும், காங்கிரஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கத் தவறி விட்டது. உருமாதிரியான ஒரு "அவசர நிலை விதி" என்பது மாவட்ட நீதிமன்றங்களால், பகுதி சார்ந்த விதியாக கடைப்பிடிக்கப்படலானது. இந்த விதியின் நோக்கமானது திவாலா நிலை அமைப்பு சிதைந்து விடாமல் காப்பதும் மற்றும் மராத்தன் வழக்கு தீர்ப்பிற்குப் பிறகு, திவாலா வழக்குகள் முறையாக நிர்வகிக்கப்படுவதற்கு ஒரு தாற்காலிகமான செயல்பாடாகவும் விளங்குவதாக இருந்தது. 1984ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று 1984வது வருடத்திய சட்டம் இயற்றப்படும் வரை இந்த விதி அமலில் இருந்தது. இத்தகைய "அவசர நிலை விதி" என்பதன் சட்டபூர்வமான செல்லுமை எப்போதும் தாக்குதல்களுக்கு உட்பட்டிருந்தாலும், உச்சநீதி மன்றம், ஆவணங்களை முன்னிலைப்படுத்தும் உத்திரவை கீழ் நீதிமன்றங்களுக்கு இடுவதற்கு மறுத்தே வந்துள்ளது.

1984ஆம் ஆண்டு, சட்டசபை திவாலா கோட்பாடுகள் என்பதைத் திருத்தியமைத்து, 1984வது வருடத்திய திவாலா நிலை திருத்தங்கள் மற்றும் கூட்டரசு நீதிபதியமைப்புச் சட்டம் என்பதனை அமல்படுத்தியது. மராத்தன் வழக்கில் நீதியரசர் ப்ரென்னான் அளித்திருந்த கருத்துக்களின் அடிப்படையிலேயே இவற்றில் பெரும்பாலான திருத்தங்கள் அமைந்துள்ளதாக காணப்பட்டுள்ளது. திவாலா நீதி மன்ற அதிகார வரம்பு எல்லை மீதான அதிகாரம் செலுத்தும் தலைப்பு 28 யு.எஸ்.சி. ' 157 (அ) மற்றும் (ஆ) (1) ஆகியவற்றின் பகுதி:

(அ) தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் வழக்குகள் மற்றும் தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் ஏதாவது அல்லது அனைத்து நடவடிக்கைகளும் அல்லது தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் ஒரு வழக்கு தொடர்பானவையும், அந்த மாவட்டத்திற்கு உரிய திவாலா நீதிபதிகளுக்கு குறித்தொதுக்கப்பட வேண்டும்.

(ஆ) (1) தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் அனைத்து வழக்குகள் மற்றும் தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் மைய நடவடிக்கைகள் அல்லது, இந்தப் பிரிவின் துணைப் பிரிவு (அ) தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் ஒரு வழக்கு தொடர்பாக உருவாகுபவை ஆகிய அனைத்தையும் திவாலா நீதிபதிகள் கேட்டு அவற்றைத் தீர்மானித்து, உகந்த ஆணைகள், தீர்ப்புகள் ஆகியவற்றை, இந்தத் தலைப்பின் கீழ் வரும் பிரிவு 158 என்பதன் கீழ் மறு ஆய்வுக்கு உட்பட்டு, அளிக்கலாம். [அழுத்தம் கூட்டப்பட்டுள்ளது]

28 யு.எஸ்.சி. §157 என்பதனால் விவரிக்கப்பட்டுள்ள மைய நடவடிக்கைகள் என்பவை இவற்றை உள்ளடக்கியுள்ளன, ஆனால் அவை இவை மட்டுமேயாகாது:

(அ) பண்ணை அல்லது சொத்து ஆகியவற்றின் நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் (ஆ) பண்ணை அல்லது பண்ணைச் சொத்து ஆகியவற்றிற்குத் தொடர்பான சலுகைகள் அல்லது அவற்றிற்கு எதிரானவை அல்லது பண்ணைச் சொத்துக்கு விலக்குகள் மற்றும் கோரிக்கைகளின் கணக்கீடு அல்லது தலைப்பு 11 என்பதன் கீழான அத்தியாயங்கள் 11, 12, அல்லது 13 ஆகியவற்றின்படி வட்டியைக் கணக்கிடல். ஆனால், இதில், பண்ணைச் சொத்துக்கு எதிராக நிறுவனக் கலைப்புக் கணக்கீடு அல்லது வரக்கூடிய அல்லது கலைவுறாத தனிப்பட்ட காய பொல்லாப்பு அல்லது தவறாக விளைக்கப்பட்ட மரணம் ஆகியவற்றின் காரணமாக, தலைப்பு 11 என்பதன் கீழ் விநியோக நோக்கங்கள் குறித்த கோரிக்கைகள் இடம்பெறா; (இ) பண்ணைச் சொத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு எதிராக பண்ணைச் சொத்தின் பதில் மனுக்கள்; (ஈ) கடன் பெறுவது தொடர்பான ஆணைகள்; (உ) பண்ணைச் சொத்தை மேலாண்மை செய்வதற்கான ஆணைகள்; (ஊ) முன்னுரிமைகளைத் தீர்மானிக்க, தவிர்க்க அல்லது மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள்; (எ) தானியங்கித் தடையை நிறுத்த, ரத்து செய்ய அல்லது மாற்றியமைக்கத் தேவையான நடவடிக்கைகள்; (ஏ) மோசடியான போக்குவரத்துக்களைத் தீர்மானிக்க, தவிர்க்க மற்றும் மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகள்; (ஐ) குறிப்பிட்ட கடன்களிலிருந்து விடுதலை அளிப்பது குறித்தான தீர்மானங்கள்; (ஒ) விடுதலைக்கான ஆட்சேபங்கள்; (ஓ) பாத்தியதைகளின் செல்லுமை, வரம்பு அல்லது முன்னுரிமை ஆகியவற்றின் மீதான தீர்மானங்கள்; (ஔ) திட்டங்களை உறுதிப்படுத்துதல் (ஃ) இணையுறுதியை அங்கீகரிக்கும் ஆணைகள்; (அஅ) பண்ணைச் சொத்திற்கு எதிராகக் கோரி மனுத் தாக்கல் செய்யாத நபர்களுக்கு எதிராக, பண்ணைச் சொத்தானது கொணரும் கோரிக்கைகளைத் தவிர்த்த, இதர சொத்துக்களை விற்பதற்கான அங்கீகாரம் அளிக்கும் ஆணைகள்; மற்றும் (அஆ) தனிப்பட்ட காயம், பொல்லாப்பு அல்லது தவறாக விளைக்கப்பட்ட மரணம் ஆகியவற்றைத் தவிர்த்த, கடனாளி- பற்றாளர் அல்லது பங்குறுதி பெற்றவர் உறவுகள் ஆகியவற்றின் ஒப்பந்த முறைப்படி பண்ணைச் சொத்துக்களைக் கலைத்து விற்பதைப் பாதிப்பதான பிற நடவடிக்கைகள்.

இவ்வாறாக, மாவட்ட நீதி மன்றம் எனப்படும் ஷரத்து III நீதி மன்றத்திற்கான அதிகார வரம்பு எல்லையை காங்கிரஸ் அளித்தது. மற்றும் (28 யு.எஸ்.சி §157 என்பதனால்) இந்த அதிகார வரம்பு எல்லையானது திவாலா நீதி மன்றத்திற்கு ஒதுக்கப்படுவதற்கு அங்கீகாரம் பெற்றது. தனது கட்டளை முறைமை அல்லது எந்த சார்பினராலும் முறையான கால கட்டத்திற்குள் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையில், காட்டப்பட்ட காரணங்களுக்காக, 157வது பிரிவின் கீழான எந்த ஒரு வழக்கு அல்லது நடவடிக்கைகளையும் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ விலக்கிக் கொள்வதற்கும் மாவட்ட நீதி மன்றங்கள் அங்கீகாரம் அளிக்கப் பெற்றன.

தனிப்பட்ட காயம் மற்றும் தவறான மரண விளைவு ஆகியவற்றைப் பொருத்ததான கோரிக்கைகள் மற்றும் தலைப்பு 11 மற்றும் நிறுவனங்கள் அல்லது நடவடிக்கைள் ஆகியவற்றின் மாநிலங்களுக்கு இடையிலான வணிகம் பாதிக்கப்படும் நிலைகள் ஆகிய ஒரு சில விதி விலக்குகளைத் தவிர்த்து, இந்தச் சட்டத்தால், புதிய திவாலா நீதி மன்றங்கள், மாவட்ட நீதி மன்றங்களின் அதிகார வரம்பு எல்லையில் இருந்த அனைத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் பெற்றன. இவ்வாறாக, மராத்தன் வழக்கு போன்ற வழக்குகளைக் கேட்கும் உரிமையை திவாலா நீதி மன்றங்கள் பெற்றன.

1984வது வருடத்திய திவாலா திருத்தங்கள் மற்றும் கூட்டரசு நீதியமைப்பு சட்டம் என்பதானது, 1898வது வருடத்திய திவாலா நிலைச் சட்டம் என்பதைப் பல வகைகளிலும் ஒத்ததாக இருந்தது. இன்ன பிறவற்றில், இந்த சட்டமானது மாவட்ட நீதிமன்ற அமைப்பின் கீழாக, திவாலா நீதிபதிகள் தனிப்பட்ட அலகுகளாக மாற்றி நியமிக்கப்பட உதவியது. 1984ஆம் வருடம் ஜுலை பத்தாம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள திவாலா வழக்குகள் திவாலா அதிகார வரம்பு தொடர்பான திருத்தங்கள் பலவற்றிற்கும் உட்படுவதாகும்.

1986வது வருடத்திய திவாலா நிலை நீதிபதிகள், ஐக்கிய மாநில அறங்காவலர்கள் மற்றும் குடும்ப விவசாய திவாலா நிலைச் சட்டம் என்பதில் இதைத் தொடர்ந்து குடும்ப விவசாயிகள் என்பதன் மீதான பெருமளவிலான மாற்றங்கள் உருவாக்கப்பட்டு, ஐக்கிய மாநில அறங்காவலர் என்னும் ஒரு நிரந்தர அமைப்பு உருவானது. 1986ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு 1986வது வருடத்திய சட்டம் பொருந்தும்.

1994ஆம் வருடம் டிசம்பர் 22ஆம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு திவாலா நிலை சீரமைப்புச் சட்டம் 1994 என்பது பொருந்தும். சீரமைப்புச் சட்டம் மற்றும் அதற்கு மேல் விளக்கம் அளிக்கும் வழக்குச் சட்டம் ஆகியவை அடமான வங்கித் தொழில் மற்றும் அடமானக் கடன் வசதிகளை அளிப்பவர்கள் ஆகியவற்றின் மீது பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சட்டத்தால் விளைவிக்கப்பட்ட மாற்றங்கள் பின் வரும் அத்தியாயங்களில் விவாதிக்கப்படுகின்றன.

மேற்கத்திய பகுதிகள்

தொகு

பண்டைக்கால கிரேக்க நாட்டில் திவாலா என்னும் நிலை இருக்கவில்லை. ஒரு மனிதன் (உள்ளூர்ப் பகுதியில் பிறந்த ஆண்களே குடிமகன்களாகக் கருதப்பட்டனர் மற்றும் சொத்துக்களின் சட்ட பூர்வமான உரிமைகள் அனைத்தையும் ஆண்களே கொண்டிருந்தனர்) கடன் பெற்ற பின்பு அதைத் திரும்பக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தால், அவனும் அவன் குடும்பமும், அதாவது அவன் மனைவி, மக்கள், பணியாட்கள் உட்பட அனைவரும், தங்களது உடலுழைப்பு மூலம் கடனைத் தீர்க்கும் வரையிலும் கொத்தடிமை முறைமைக்கு ஆளாயினர். பண்டைய கிரேக்க நாட்டின் பல மாநிலங்கள் இவ்வாறான கொத்தடிமை முறைமைக்கு அதிக பட்ச கால கட்டமாக ஐந்து ஆண்டுகளை நிர்ணயித்திருந்தன மற்றும் கொத்தடிமைகள் தங்களது உயிர் மற்றும் உடற்பாகங்களுக்கான உத்திரவாதம் பெற்றிருந்தனர். இது, வழக்கமான அடிமைகளுக்குக் கிடைக்கப் பெறாத ஒன்று. இருப்பினும், பற்றாளர், இந்தக் காலக் கெடுவிற்குப் பின்னாலும், கடனாளியின் வேலையாட்களை நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மையான நிகழ்வுகளில், இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், கடினமான சூழ்நிலைகளில் தங்களது புதிய ஆண்டைக்கு ஊழியம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

திவாலா என்னும் பொருள்படும் பாங்கிரப்சி என்னும் சொல்லானது பாங்கஸ் (ஒரு பலகை அல்லது மேசை) மற்றும் ரப்டஸ் (உடைதல்) ஆகிய பண்டைய இலத்தீன் சொற்களிலிருந்து உருவானது. "பாங்க்" என்னும் சொல், அதன் மூலப் பொருளில், ஒரு பலகையைக் குறிப்பதாக இருந்தது. அதாவது, முதல் வங்கியாளர்கள் பொது இடங்களிலும், சந்தைகளிலும் அமர்ந்து தங்கள் பணத்தை அளவிட்டு பரிவர்த்தனைச் சீட்டுக்கள் போன்றவற்றை எழுதினர். இதன் காரணமாக, ஒரு வங்கியாளர் பணம் இழந்தபோது, அவர் தனது வங்கியைக் கலைத்து விட்டு, பொது மக்களிடையே அவர் மேற்கொண்டு தமது வியாபாரத்தைத் தொடரும் நிலையில் இல்லை என்று விளம்பரப்படுத்துவதாக இருந்தது. இத்தாலியில் இந்தப் பழக்கம் மிகவும் அடிக்கடி நிகழ்வதாக இருந்தமையால், பாங்கிரப்ட் என்னும் சொல் இத்தாலியச் சொல்லான பாங்கோ ரோட்டோ , உடைந்த வங்கி என்பதிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காணவும்: எ.கா: போண்டே வெச்சியோ . ஃபிரெஞ்சுச் சொல்லான பாங்க்யு , "மேசை", மற்றும் ரூட் , "வெஸ்டிஜியம், டிரேஸ்" என்பனவற்றிலிருந்து, தரையில் விடுத்த குறியீடு என்னும் பொருள் கொண்டதாக இந்த வார்த்தை வந்ததாகக் கூறுபவர்களும் உண்டு இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், தங்களது டேபர்னே அல்லது மென்சாரை ஆகியவற்றைச் சில பொது இடங்களில் கொண்டிருந்த பண்டைய உரோம மென்சாரை அல்லது அர்ஜெண்டரை ஆகியவற்றிலும் இதன் தோற்றுவாய் தடமறியப்படுகிறது; இவர்கள் தங்கள் பொறுப்பில் அளிக்கப்பட்ட பணத்துடன் ஓடிவிடும்போது, தங்களது பழைய இடத்தின் ஒரு குறியீடு அல்லது நிழல் என்பதையே விடுத்துச் சென்றனர்.

1557, 1560, 1575 மற்றும் 1596 ஆகிய வருடங்களில் ஸ்பெயின் அரசரான ஃபிலிப் II, நான்கு முறைகள் அரசுத் திவாலாவை அறிவிக்க நேர்ந்தது. வரலாற்றில், திவாலா அறிவித்த முதலாவது இறையாண்மை கொண்ட நாடு என்னும் பெயரை ஸ்பெயின் பெற்றது.

1705வது வருடம், ஆங்கில-அமெரிக்க திவாலா சட்டம் 4 ஆன் அத். 17 என்பதன் கீழ் கடன் என்பதிலிருந்து விடுதலை பெறுவதற்கான பண்பமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன; இதில் இயன்ற அளவு கடன்களை அடைப்பதற்காக சொத்துக்களைத் திரட்டிய கடனாளிகளுக்கு, அடைக்க இயலாத கடன்களிலிருந்து விடுதலை என்பதானது ஒரு பரிசாக அளிக்கப்பட்டது.

கிழக்கத்திய பகுதிகள்

தொகு

திவாலா நிலை என்பது கிழக்காசியாவிலும் ஆவணப்படுத்தப்படுகிறது. அல்-மக்ரிஜியின்படி, செங்கிஸ்கான் இயற்றிய என்னும் யாசா சட்டம், மூன்று முறை திவாலா ஆனவருக்கு மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கும் ஒரு ஷரத்தைக் கொண்டிருந்தது.

மதம் சார்ந்த கண்ணோட்டம்

தொகு

தோரா அல்லது பழைய ஆகமத்தில் மொசைக் சட்டம் என்பது ஒவ்வொரு ஏழாவது வருடத்தினையும் சபாத் வருடம் என்பதாக ஆணையிடுகிறது. இதில், ஒரு சமூகம் கொண்டிருக்கும் எல்லாக் கடன்களிலிருந்தும் அது விடுதலை பெறுவது ஒரு தீர்ப்பாகக் கொள்ளப்படுகிறது; ஆனால், இது "வெளி நாட்டாருக்கு"க் கிட்டுவதல்ல.[1] ஏழாவது சபாத் வருடம் அல்லது நாற்பத்தி ஒன்பதாவது வருடத்தைத் தொடர்ந்து கொண்டாட்ட வருடம் என்னும் மற்றொரு சபாத் வருடத்தில் வருகிறது. இதில், சமூகத்தில் உடனிருக்கும் அனைவருக்கும் மற்றும் வெளி நாட்டினருக்கும் ஒரே மாதிரியாக அனைத்துக் கடன்களிலிருந்தும் விடுதலை அளிக்கப்பட்டு, கொத்தடிமைகள் விடுதலையாவதற்கு தீர்ப்பாகிறது.[2] பரிகார நாள் என்னும் நாளன்று அல்லது நாற்பத்தொன்பதாவது வருடத்தின் வேதாகம மாதத்தின் பத்தாவது நாளன்று, கொண்டாட்ட வருடம் என்பது இஸ்ரேல் மண் முழுவதும் துந்துபிகள் ஊதி முன்னாதாகவே அறிவிக்கப்படுகிறது.

இஸ்லாமியக் கற்பித்தலின்படி நொடித்துப் போன நபர் ஒருவருக்கு அவர் தமது கடனை அடைப்பதற்கு காலத் தவணை அளிக்கப்பட வேண்டும் என்பது குரான் கூற்று. குரானின் இரண்டாவது அத்தியாயமான சுரா, அல்-பகராவின் 280வது செய்யுளில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: "யாராவது சிரம நிலையில் இருந்தால், பிறகு, இயலமைதி பெறப்படுவரையிலும் [ஒரு காலத்தவணை] [இருக்கக் கடவது]. ஆனால் நீ [உன் உரிமையிலிருந்து] தானமாகக் கொடுத்தால், பிறகு அது உனக்கு நல்லது என்பதை நீயே அறிவாய்."

நவீன காலத்திய நொடித்துப் போதல் தொடர்பான சட்டங்களும் கடன் மறு சீரமைப்பு முறைமைகளும்

தொகு

நவீன காலத்தில், நொடித்துப் போதல் தொடர்பான சட்டங்களும் வணிகங்கள் மற்றும் கடன் மறு சீரமைப்பு முறைமைகள் ஆகியவையும், நொடித்துப் போன நிறுவனங்களை அகற்றுவதான கண்ணோட்டம் கொள்ளாது, நிதி நெருக்கடியை அனுபவிக்கும் கடனாளியான நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாகம் சார்ந்த கட்டமைப்புகளை மறு சீரமைத்து, அவை மறு வாழ்வு பெறுவதையும் மற்றும் தம் வணிகத்தைத் தொடர்ந்து நடத்துவதையுமே குவிமையப்படுத்துகின்றன.

மோசடி

தொகு

திவாலா மோசடி என்பது ஒரு குற்றம். அதிகார வரம்புகளுக்கு இடையில் பொதுவாக்குதல் கடினம் எனினும், திவாலா நிலை தொடர்பாகப் பொதுவாக இழைக்கப்படும் குற்றங்கள் என்பன சொத்துக்களை மறைத்தல், ஆவணங்களை மறைத்தல் அல்லது அழித்தல், பலன்களின் முரண்பாடு, மோசடியான கோரிக்கைகள், பொய்யான வாக்குமூலங்கள் மற்றும் அறிக்கைகள் மற்றும் ஏற்பாடு செய்யப்பட்ட கட்டணம் அல்லது நிதி மறு விநியோக ஏற்பாடுகள் ஆகியவையாகும். திவாலா நிலை பற்றித் தவறான தகவல்கள் அளிப்பது பொய் வாக்குமூலம் என்பதற்கு ஒப்பானதாகப் பலமுறை கருதுவதுண்டு. பல்வேறு மனுக்களைத் தாக்கல் செய்வது என்பது அவற்றைப் பொறுத்த அளவினில் குற்றம் ஆகாது எனினும் அவை திவாலா நிலைச் சட்டத்தின் கோட்பாடுகளை மீறுவதாக இருக்கலாம். ஐக்கிய மாநிலங்களில் திவாலா மோசடிச் சட்டங்கள், குறிப்பாக குறிப்பிட்ட செயல்களின் மன நிலையைக் குவிமையப்படுத்துகின்றன.[3][4]

திவாலா மோசடி என்பது தளத்தகை திவாலா என்பதிலிருந்து வேறுபடுத்த வேண்டும். தளத்தகை திவாலா என்பது ஒரு குற்றம் சார்ந்த செயற்பாடு அல்ல எனினும் அது மனுத் தாக்கல் செய்தவருக்கு எதிராகச் செயல்படக் கூடும்.

கடனாளி தனது சொத்துக்கு நிகர மதிப்பு உள்ளது என்று நம்பினாலும் அல்லது அவ்வாறு நம்பாவிட்டாலும், எல்லாச் சொத்துக்களையும் திவாலா மனுவின் அட்டவணைகளில் வெளியிட வேண்டும். ஏனெனில், ஒரு முறை திவாலா மனு தாக்கல் செய்து விட்டால், பிறகு ஒரு குறிப்பிட்ட சொத்து மதிப்புள்ளதா அல்லவா என்று முடிவு செய்வது பற்றாளர்கள்தாமே தவிர கடனாளி அல்ல. அட்டவணைகளில் சொத்து விபரங்களை வெளியிடாது நீக்குவது என்பதானது அவ்வாறு குற்றமிழைக்கும் கடனாளிக்கு எதிர்காலத்தில் மிகவும் சிக்கலான விளைவுகளைத் தோற்றுவிக்கும். திவாலா நிலை மூலமாக எல்லாக் கடன்களிலிருந்தும் விடுதலை பெற்ற பிறகு, ஒரு கடனாளி அவ்வாறு "பட்டியலிடப்படாத சொத்து" ஒன்றிற்கு உரிமை கோர முயன்றால், பற்றாளர் அல்லது ஐக்கிய மாநிலங்கள் அறங்காவலர் ஆகியோரின் மனுவின் பேரில், முடிந்து விட்ட ஒரு திவாலா வழக்கினை மீண்டும் துவக்கலாம். அறங்காவலர் அந்த சொத்தைக் கைப்பற்றி, (முன்னர் விடுதலை அளித்துவிட்ட) முன்னாள் பற்றாளர்களின் நன்மைக்காக விற்கலாம். இத்தகைய சொத்து மறைப்பினை ஒரு மோசடியாக மற்றும் / அல்லது பொய் வாக்குமூலம் என்று கருத வேண்டுமா என்பது நீதிபதி மற்றும் / அல்லது யூ.எஸ்.அறங்காவலரின் தீர்மானத்தின் மேலானது.

தனிப்பட்ட நாடுகளில்

தொகு

ஆஸ்திரேலியா

தொகு

ஆஸ்திரேலியாவின் திவாலா நிலை தொடர்பான சட்டம் திவாலா சட்டம் 1996 (காமன்வெல்த்) என்பதாகும். தனிப்பட்ட நபர்கள் மட்டுமே திவாலா நிலை அறிவிக்க முடியும். நொடித்துப் போன நிறுவனங்களைக் கலைத்து விற்கலாம் அல்லது அவை நிர்வாகத்திற்கு உட்படலாம் (காண்க: நிர்வாகம் (நொடித்துப் போதல்)). "திவாலா நிலை நடவடிக்கை"களில் பெரும்பாலானவை, மூன்று "பகுதி"களில் அடங்குகின்றன: பகுதி IV (முழுமையான திவாலா நிலை), பகுதி IX கடன் ஒப்பந்தங்கள் மற்றும் பகுதி X தனிப்பட்ட திவாலா ஒப்பந்தங்கள்.' ஒப்பந்தங்கள் என்பன பற்றாளர்களுக்கும் கடனாளிகளுக்கும் இடையிலான ஏற்பாடுகளை முக்கியமாகக் குறிப்பனவையாக இருக்கையில், பகுதி IV என்பது முழுமையான திவாலா நிலை என்பதைக் குறிக்கிறது மற்றும் "திவாலா நிலை" என்பதுடன் ஒத்ததாகக் காணப்படுகிறது.

அதிகாரபூர்வமான பெறுநர் எனப்படும் நொடித்துப் போனவற்றிற்கான அறங்காவலர் சேவை ஆஸ்திரேலியா (இன்சால்வென்சி அண்ட் ட்ரஸ்டி சர்வீஸ் ஆஸ்திரேலியா -ஐடிஎஸ்ஏ) என்னும் மையத்தில் கடனாளிக்கான மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம், ஒரு நபர் அல்லது கடனாளி தன்னை திவாலா ஆனவர் என்று அறிவித்துக் கொள்ளலாம். கூட்டரசு நீதிபதியின் நீதிமன்றத்தில் கையகப்படுத்தும் ஆணை பிறப்பிப்பதற்குக் கொண்டு செல்லக் கூடிய பற்றாளர் மனுத்தாக்குதலின் மூலமும் ஒரு நபரைத் திவாலா ஆனவர் என்று அறிவிக்க இயலும். திவாலா நிலை அறிவிப்பதற்கோ அல்லது பற்றாளர் மனு தாக்கல் செய்வதற்கோ, கடன் தொகையானது குறைந்த பட்சம் $2,000 என்ற அளவில் இருத்தல் வேண்டும்.

அனைத்துத் திவாலா நபர்களும் ஐடிஎஸ்ஏவில், தங்களது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்தான முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ள, நிலைசார் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆவணத்தை தாக்கல் செய்யாத வரையிலும் திவாலா நிலையை மேற்கொள்ள இயலாது.

சாதாரணமாக, பகுதி IV என்பதன் கீழான திவாலா நிலையானது நிலை சார் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மூன்று வருடங்கள் வரையிலும் நிலுவையில் இருக்கும். கடனாளி மனுத் தாக்கல் செய்திருப்பின், நிலை சார் அறிக்கையானது, மனுவுடன் இணைந்து தாக்கல் செய்யப்பட்டு மூன்று வருட கால கட்டம் அதனுடன் உடனடியாகத் துவங்குவதாக அமையும். இருப்பினும், பற்றாளர் மனுத் தாக்கல் செய்திருப்பின், நிலை சார் அறிக்கையானது, நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட அதே நாளில் தாக்கல் செய்வது என்பது அரிதானது. திவாலாவான நபர், ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் அந்த ஆவணத்தைத் தாக்கல் செய்யத் தவறி விட்டால், அவர் மீது வழக்கு தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கலாம்.

திவாலா ஆகிவிட்ட சொத்து தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு ஒரு ஒரு திவாலா நிலை அறங்காவலர் (பெரும்பான்மையான வழக்குகளில் அதிகாரபூர்வமான பெறுநர்) நியமிக்கப்படுவார். இந்த அறங்காவலரின் பணியில், சொத்தின் பற்றாளர்களுக்கு அறிவிப்பு அளிப்பது, பற்றாளர்களின் கேள்விகளுக்குப் பதிலிறுப்பது, திவாலாவாகிப் போன நபர் திவாலா நிலை சட்ட த்தின் கீழ் தனது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுகிறாரா என்று கண்காணிப்பது, திவாலா நபரின் நிதிசார் நடவடிக்கைகளைப் புலனாய்வது, திவாலா நிலை சட்ட த்தின் கீழ் வரும் சொத்துக்கள் விற்ற பணத்தை அடைந்து அது போதுமான அளவில் சேரும் நிலையில் அதை பற்றாளர்களுக்கு விநியோகிப்பது ஆகிய அனைத்தும் அடங்கும்.

தமது திவாலா நிலை கால அளவைப் பொறுத்த வரை, திவாலா நபர்கள் அனைவருக்கும் சட்டத்தின் கீழ் சில கட்டுப்பாடுகள் உள்ளன. உதாரணமாக, ஒரு திவாலா நபர் கடல் கடந்து பிரயாணம் மேற்கொள்வதற்கு, தமது அறங்காவலரின் அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால், அந்த திவாலா நபர் ஆஸ்திரேலிய கூட்டரசுக் காவல் துறையினரால் விமான நிலையத்தில் மறிக்கப்படலாம். மேலும், ஒரு திவாலா நபர் தனது வருமானம் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றைப் பற்றிய விபரங்களை அறங்காவலரிடம் அளிப்பது தேவைப்படும். தனது வருமானம் பற்றிய தகவல்களைத் தருமாறு அறங்காவலரின் வேண்டுகோளைப் பூர்த்தி செய்ய திவாலா நபர் தவறி விட்டார் எனில், அவருக்கு கடன்களிலிருந்து விடுதலை வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்து அறங்காவலர் மனுத் தாக்கல் செய்யலாம்; இது திவாலா நிலைக் காலம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதில் விளையலாம்.

நிதியை அடைவது என்பது வழக்கமாக இரண்டு வழிகளிலிருந்தே பெறப்படுவாதாகும்: திவாலா நபரின் சொத்துக்கள் மற்றும் திவாலா நபரின் வருமானங்கள். சில வகையான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, "பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள்" என்றழைக்கப்படுகின்றன. இவற்றில், வீட்டுப் பொருட்கள் மற்றும் கருவிகள், வியாபாரக் கருவிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட மதிப்பு வரையிலான வாகனங்கள் ஆகியவை அடங்கும். மதிப்புடைய பிற சொத்துக்கள் அனைத்தும் விற்கப்படும். வீடு அல்லது வாகனமானது ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு மேற்பட்டிருந்தால், திவாலா நபர் அந்தச் சொத்தைத் தம்மிடமே வைத்துக் கொள்ள சொத்தின் மீதான வட்டியைக் கட்டத் தெரிவு செய்யலாம். திவாலா நபர் அவ்வாறு செய்யாவிட்டால், வட்டியை சொத்தின் மீதாகக் கணக்கிட்டு, அறங்காவலர் அந்தச் சொத்தைக் கையகப்படுத்தி விற்கலாம்.

ஒரு திவாலா நபரின் வருமானம் குறிப்பிட்ட அளவிற்கு மேற்பட்டு இருந்தால், அவர் தமது வருமானத்திலிருந்து ஒரு பகுதியை வருமான வழங்கீடு என்பதாக வழங்க வேண்டும். இந்த மதிப்பு நிலை என்பதானது வருடத்திற்கு இரண்டு முறையாக, மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில், அகவரிசைப்படுத்தப்பட்டு, திவாலா நபரை அண்டியுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, மாறுபடுவதாக அமையும். வருமான வழங்கீடு தொடர்பான கடப்பாடு, அது மதிப்பு நிலையை மேற்பட்டு இருக்கும் அளவைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது. ஒரு திவாலா நபர் தனது வழங்கீடுகளை அளிக்கத் தவறி விட்டால், அறங்காவலர் திவாலா நபரின் வருமானங்களைக் கையகப்படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பினை விடுக்கலாம். அது சாத்தியம் அல்லவெனில், கடன்களிலிருந்து விடுதலை அளிப்பதற்கான ஆட்சேபத்தை அறங்காவலர் தாக்கல் செய்து, திவாலா நிலை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்கப்பட வழி வகுக்கலாம்.

அனைத்துக் கடன்களும் முழுவதுமாகத் தீர்க்கப்பட்டு விட்டால், திவாலா நிலையானது, அதன் காலக் கெடுவான மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே முடித்து வைக்கப்படலாம். சில நேரங்களில், ஒரு திவாலா நபர் தன் பற்றாளர்களுக்கு சமரசம் வேண்டும் ஒரு அழைப்பு விடுக்கும் அளவு நிதி திரட்ட முடிந்தால், பற்றாளர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்கும் நிலையை அடையலாம். இந்த அழைப்பைப் பற்றாளர்கள் ஏற்றுக் கொண்டால், நிதி பெறப்பட்ட பிறகு, திவாலா நிலை இரத்து செய்யப்படும்.

திவாலா நிலை இரத்து செய்யப்பட்ட பிறகு அல்லது திவாலா நபர் தானாகவே விடுதலை பெற்ற பிறகு, திவாலா நபரின் கடன் அறிக்கை நிலை "விடுதலை பெற்ற திவாலா நபர்" என்று சில வருட காலத்திற்கு அறிவிக்கப்படுவதாக அமைந்திருக்கும். இந்த அறிக்கை எத்தனை வருடங்களுக்கானது என்பது அதனை வெளியிடும் நிறுவனத்தைப் பொறுத்தது. ஆயினும், நாளடைவில், அறிக்கை இந்தச் செய்தியைக் கொண்டிருப்பது நின்று விடும்.

ஆஸ்திரேலியாவில் திவாலா நிலை சட்டம் பற்றிய வரம்புக்கு உட்படுத்தப்பட்ட சில தகவல்களை ஐடிஎஸ்ஏ வலைத் தளத்தில் பெறலாம்.[5]

பிரேசில்

தொகு

பிரேசில் நாட்டில், திவாலா நிலைச் சட்டம் (11,101/05)என்பதானது சட்டத்திற்கு உட்பட்டும் அதற்கு வெளியிலுமான மீள்மை மற்றும் திவாலா நிலை என்பதன் கீழும் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்துவது. நிதி நிறுவனங்கள், கடன் கூட்டுறவு அமைப்புகள், கூட்டிணைப்புகள், துணை நிலைத் திட்டங்கள், ஆரோக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தும் சமூக அமைப்புகள், முலதனமாக்கல் கழகம் மற்றும் சட்டரீதியான பருப்பொருள் கொண்டவை என அறியப்படுபவை விதி விலக்குகளாகும். இது பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

இந்தச் சட்டம் மூன்று விதமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. முதலாவது திவாலா நிலை ("ஃபாலென்ஷியா") என்பதாகும். திவாலா நிலை என்பது நொடித்துப் போன ஒரு வணிகருக்கு அவரது பற்றாளரின் நடவடிக்கைகளை நீக்கி, அவரது நிறுவனத்தின் தொட்டறிய இயலாத சொத்துக்களையும் உள்ளிட்ட சொத்துக்களின் உகந்த மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட பயன்பாடுகளைப் பாதுகாத்து அவற்றின் உற்பத்தி மற்றும் வளத்தை மேம்படுத்துதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திவாலா நிலை என்பதன் இறுதி நோக்கமானது, நிறுவனத்தின் சொத்துக்களைக் கலைத்து விற்று, பற்றாளர்களுக்குப் பண வழங்கீடு செய்வதாகும்.

இரண்டாவது, சட்டம் சார்ந்த மீள்மை நடவடிக்கை ("ரெகுபெரேகௌ ஜுடீஷியல்"). இதன் நோக்கம், கடனாளி தமது பொருளாதார- நிதி நெருக்கடி நிலையைத் தாண்டுவதற்கு உதவி புரிவது. இதன் மூலம், பற்றாளர் தொடர்ச்சி, பணியாளர்களின் வேலைக் காப்பு மற்றும் பற்றாளர்களின் நலன்கள் ஆகியவற்றை உறுதி செய்து நிறுவனம் அதன் சமுதாயப் பணியில் தொடர்ந்து இயங்கும் வண்ணம் பாதுகாக்கப்பட்டு அதன் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கம் பெறுகின்றன. இது, தமது நடவடிக்கைகளை இரண்டு வருடங்களுக்கும் மேலாகக் கொள்ளும் ஒரு கடனாளிக்கு தேவைப்படுவதான ஒரு நீதி சார் நடவடிக்கையாகும் மற்றும் இதற்கு நீதிபதியின் அங்கீகாரம் பெறுதலும் தேவைப்படும்.

சட்டத்திற்கு வெளியிலான மீள்மை நடவடிக்கை ("ரெகுபரேகௌ எக்ஸ்ட்ராஜுடீஷியல்") என்பதானது பற்றாளர்கள் மற்றும் கடனாளிகள் ஆகியோருக்கு இடையில் தனிப்பட முறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும். சட்ட ரீதியான மீள்மை நடவடிக்கையைப் போன்று இதுவும் சட்ட ரீதியான அதிகாரத்தால் அங்கீகரிக்கப்படலாம்.[6]

கனடா

தொகு

கனடா நாட்டில் திவாலா நிலை, கூட்டரசு சட்ட அமைப்பின் திவாலா நிலை மற்றும் நொடித்துப் போதல் சட்டம் என்பதன்பாற்படுகிறது. இது வர்த்தகங்கள் மற்றும் தனி நபர்களுக்குப் பொருந்தும். திவாலா நிலை மேற்பார்வையாளர் என்பவரின் அலுவலகம், ஒரு கூட்டரசு முகைமையாக, திவாலா நிலைகள் நியாயமான மற்றும் ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டதாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்கிறது. திவாலா நிலையின் அறங்காவலர்கள் திவாலா நிலையின் கீழுள்ள மொத்தச் சொத்துக்களையும் நிர்வகிக்கின்றனர்.

ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ நொடித்துப் போய், தங்களது கடனை, அவற்றைச் செலுத்த வேண்டிய தவணைகளில் செலுத்த இயலாதபோது திவாலா நிலைக்கான மனு தாக்கல் செய்யப்படுகிறது.

அறங்காவலர்களின் கடமைகள்

தொகு

திவாலா நிலை தொடர்பான அறங்காவலர்களின் பணிகளில் சில:

 • மோசடியான முன்னுரிமைகள் அல்லது மறு ஆய்வு தேவைப்படும்படியான பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்காக கோப்புக்களை மறு ஆய்வு செய்வது.
 • பற்றாளர்களின் சந்திப்புகளுக்குத் தலைமை தாங்குவது
 • விலக்கு அளிக்கப்படாத சொத்துக்களை விற்பது.
 • திவாலா நிலையடைந்தவரை விடுவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது.
 • பற்றாளருக்குப் பணத்தைப் பட்டுவாடா செய்வது

பற்றாளர்களின் சந்திப்புகள்

தொகு

பற்றாளர் தங்களுக்குள்ளாக சந்திப்புக்களை நிகழ்த்தி அவற்றில் பங்கு கொள்வதன் மூலமாக, செயற்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் ஆகிறார்கள். அறங்காவலர் பின் வரும் நோக்கங்களுக்காகப் பற்றாளர்களின் முதல் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கிறார்:

 • திவாலாவான நபரின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்வது
 • அறங்காவலர் அல்லது அவரது இடத்தில் மற்றொருவரை நியமிப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்துவது.
 • மேற்பார்வையாளர்களை நியமிப்பது
 • உடமைளை நிர்வாகம் செய்வது தொடர்பாக, பற்றாளர் முறையான செயற்பாடு என்று கருதும் வகையில், அறங்காவலருக்கு ஆணைகள் அளிப்பது.

கனடாவில் நுகர்வோர் சார்ந்த திட்ட வரைவுகள்

தொகு

கனடாவில், திவாலா நிலை என்பதற்கு மாற்றாக ஒருவர் நுகர்வோர் முன் மொழிதல் ஒன்றைத் தாக்கல் செய்யலாம். நுகர்வோர் திட்ட வரைவு என்பதானது கடனாளி மற்றும் பற்றாளர் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கையின் மூலமாக கடன் தீர்வு காணப்படும் ஒரு நடவடிக்கை.

இதன் மாதிரித் திட்ட வரைவு என்பதில், கடனாளி அதிக பட்சமாக ஐந்து வருடங்களுக்கு மாதத் தவணைகளாகப் பணம் செலுத்துவார். அது பற்றாளர்களுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படும். செலுத்த வேண்டிய கடனை விடக் குறைந்த தொகையைச் செலுத்துவதையே பல திட்ட வரைவுகளும் கொண்டிருந்தாலும், பல நேரங்களில் பற்றாளர்கள் இந்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்கிறார்கள். காரணம், அவ்வாறு ஒப்புக் கொள்ளாவிட்டால், இதற்கு அடுத்த மாற்றாக, தனி நபர் திவாலா நிலை உருவாகி பற்றாளர்கள் மேலும் குறைந்த தொகையையே பெற முடியும் என்பதுதான். நுகர்வோர் முன்மொழிதலை ஏற்கவோ அல்லது மறுக்கவோ பற்றாளர்களுக்கு 45 நாட்கள் அவகாசம் உண்டு. திட்ட வரைவு ஏற்கப்பட்டதும், கடனாளி, திட்ட வரைவின் நிர்வாகியிடம் ஒவ்வொரு மாதமும் தவணைகளைச் செலுத்துகிறார்; இதன் மூலமாக மேற்கொண்டு சட்ட ரீதியான அல்லது வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து பற்றாளர்கள் தடுக்கப்படுகிறார்கள். திட்ட வரைவு நிராகரிக்கப்பட்டு விட்டால், தனி நபர் திவாலா நிலையை அறிவிப்பதைத் தவிர கடனாளிக்கு வேறு வழி இருக்காது.

$5,000 என்ற அளவிற்கு மேற்பட்டதாக மற்றும் அதிக பட்சமாக $75,000 (பிரதானக் குடியிருப்பின் அடமானத்தைத் தவிர்த்து) என்ற அளவிலான கடன்களுக்கு மட்டுமே ஒரு கடனாளி நுகர்வோர் திட்ட வரைவைத் தாக்கல் செய்ய இயலும். $75,000 என்பதற்கும் அதிகமான அளவில் கடன்கள் இருந்தால், பிறகு, திவாலா நிலை மற்றும் நொடித்துப் போதல் சட்டம் என்பதன் பிரிவு 1 பகுதி III என்பதன் கீழாக திட்ட வரைவு தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்குத் திட்ட வரைவு நிர்வாகி ஒருவரின் உதவி அவசியமாகும். திவாலா நிலை மேற்பார்வையாளர் வேறு நபர்களையும் நிர்வாகிகளாக நியமிக்க இயலும் எனினும், திட்ட வரைவு நிர்வாகி எனப்படுபவர் பொதுவாக, உரிமம் பெற்ற ஒரு திவாலா நிலை அறங்காவலர் ஆவார்.

2006வது ஆண்டு வரை, கனடாவில் தனி நபர் நொடித்துப் போனதாக 98,450 மனுக்கள் தாக்கல்கள் செய்யப்பட்டிருந்தன: இவற்றில், 79,218 திவாலா நிலை கோரிய மனுத் தாக்கல்களும் மற்றும் 19,232 நுகர்வோர் திட்ட வரைவுகளும் இருந்தன.[7]

சீனா

தொகு

விரிவாக்கம் தேவைப்படுகின்ற அனைத்து கட்டுரைகள்}}

நெதர்லாந்து

தொகு

டச்சு திவாலா நிலைச் சட்டத்தினை டச்சு திவாலாக் கோட்பாடு ("ஃபைல்லிஸெஸ்மெண்ட்வெண்ட்") நிர்வகிக்கிறது. இந்தக் கோட்பாடானது வெவ்வேறான மூன்று சட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. முதலாவது திவாலா நிலை ("ஃபைல்லிஸெஸ்மெண்ட்வெண்ட்"). இத்தகைய திவாலா நிலையின் நோக்கம் நிறுவனத்தின் சொத்துக்களைக் கலைத்து விற்பதாகும். திவாலா நிலை என்பதானது தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பொருந்தும். "ஃபைல்லிஸெஸ்மெண்ட்வெண்ட்" என்பதன் கீழான இரண்டாவது சட்ட நடவடிக்கை "சர்செனான்ஸ்" என்பதாகும். இத்தகைய சர்செனான்ஸ் என்பது நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன் நோக்கம், நிறுவனத்தின் பற்றாளர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதாகும். மூன்றாவது நடவடிக்கை "ஸ்கல்டர்ஸேனரிங்" எனப்படும். இது தனிப்பட்ட நபர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து

தொகு

சுவிஸ் நாட்டுச் சட்டப்படி, நொடித்துப் போகும் நிலையின் விளைவாக திவாலா நிலை உருவாகலாம். இது பொதுவாக, நீதி மன்ற உத்தரவின் மூலமான கடன் அமலாக்க நடவடிக்கைகளாக வணிக நிறுவனங்களுக்குப் பொருந்தும். ஐக்கிய மாநிலங்கள் திவாலா கோட்பாடுகளின் அத்தியாயம் 11 என்பதன் கீழான கடன் மறு சீரமைப்பினை ஒத்த ஏற்பாட்டை சட்டம் அளித்தாலும், பொதுவாக, ஒரு திவாலா நிலையில், பற்றாளர்களின் நிர்வாகத்தின் கீழ், கடனாளியின் அனைத்து சொத்துக்களும் கலைத்து விற்கப்படுகின்றன.

சுவீடன்

தொகு

சுவீடன் நாட்டில் திவாலா நிலை (ஸ்வீடிஷ் மொழியில்:கொங்குர்ஸ்) என்பது நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்காக மேற்கொள்ளப்படக் கூடிய ஒரு நடைமுறை. ஒரு நிறுவனத்தின் பற்றாளரோ அல்லது நிறுவனமோ திவாலா நிலை கோரி மனுச் செய்யலாம். சில விதி விலக்குகளைத் தவிர, திவாலா நிலையில் உள்ள தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு நிறுவனமோ சொத்துக்களுக்கான அணுகலைக் கொள்ள முடியாது. ஸ்வீடனில் திவாலா நடைமுறையின் வழியாக நிறுவனங்கள் தங்களது கடன் சுமையைக் குறைத்துக் கொள்வது என்பது பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ அல்லது அதன் ஒரு புதிய உரிமையாளரோ, கடன் சுமைகளுடன் கை விடப்பட்டு விட்ட பழைய நிறுவனத்திலிருந்து அதன் பெயர் உட்பட முக்கியமான சொத்துக்களை வாங்கிப் புதிய நிறுவனம் ஒன்றைத் துவக்குகிறார்.

தனிப்பட்ட நபர்களுக்காக திவாலா நடைமுறை மேற்கொள்ளப்படுவது என்பது அரிதானது.[8] எவ்வாறு இருப்பினும், பற்றாளர்கள் அமலாக்க நிர்வாகம் மூலமாக தங்களது பணத்தைக் கோரலாம்; பொதுவாக தனிப்பட்ட நபர்கள் இதன் மூலம் பலன் பெறுவதில்லை, ஏனெனில், கடன்கள் அப்படியே தங்கி விடுவது மட்டும் அல்லாது, கூடுதலான செலவுகளும் உருவாகி விடுவதுதான். உண்மையிலேயே நொடித்துப் போனவர்கள் கடன் துப்புரவு (ஸ்வீடிஷ்: ஸ்கல்டஸானெரிங்) என்னும் ஒரு நடைமுறையின் வழி, தங்களது கடன்களுக்குத் தீர்வு காணலாம். இதற்கான ஒரு மனுவைத் தாக்கல் செய்த பிறகு பண வழங்கீட்டுத் திட்டம் ஒன்று அவர்களுக்குக் கிடைக்கப் பெறும். இதன் மூலம் ஐந்து வருட காலத்தில் அவர்கள் தங்களால் எவ்வளவு இயலுமோ அந்த அளவுக் கடனை அடைக்கலாம். எஞ்சியிருக்கும் கடன்கள் தள்ளுபடியாகிவிடும். 2006ஆம் ஆண்டு, இந்த நடைமுறை அறிமுகமானது. அதற்கு முன்னர், அனைத்துக் கடன்களும் குறிப்பிட்ட நபரின் ஆயுட்காலம் முழுவதும் இருந்தே வந்தன.

ஐக்கிய இராச்சியம்

தொகு

ஐக்கிய இராச்சியத்தில், (நெறி வழுவாத சட்ட முறைமையின்படி) திவாலா நிலை என்பதானது தனி நபர்கள் மற்றும் கூட்டுத் தொழில்கள் ஆகியவற்றிற்கே பொருந்துவதானது. நிறுவனங்கள் மற்றும் தொழிற் குழுமங்கள், இன்சால்வென்சி எனப்படும் நொடித்துப் போன நிறுவனங்களுக்கான நடைமுறைகள் என்பதன் கீழ் வேறு பெயர்கள் கொண்ட சட்ட நடைமுறைகளின் கீழ் வருவதாக அமைகின்றன. அவை, நிறுவனக் கலைப்பு மற்றும் நிர்வாகம், நிர்வாக ஒழுங்கமைப்பு மற்றும் நிர்வாக பெறுநர்நிலை எனப் பல்வேறு வகைப்படும். இருப்பினும், ஊடகங்கள் மற்றும் பொதுவான உரையாடல்களில் 'திவாலா நிலை' என்னும் சொற்றொடரே பெரும்பாலும் பயன்படுகிறது. ஸ்காட்லாந்தில் திவாலா நிலை என்பது சீக்வெஸ்ட்ரேஷன் அதாவது சட்ட மன்றம் அல்லது மூன்றாவது நபரிடம் ஒப்படைப்பது என்பதாகப் பொருள்படுகிறது.

ஒரு திவாலா அறங்காவலர் என்பவர் ஒன்று அதிகாரபூர்வமான பெறுநர் என்ற நிலையில் (ஒரு பொதுச் சேவகர்) அல்லது உரிமம் பெற்ற திவாலா வழக்கறிஞர் என்ற நிலையில் இருக்க வேண்டும்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்சமயம் நிலவி வரும் சட்டத்தின் பெரும்பகுதி திவாலா நிலைச் சட்டம் 1986 என்பதன் இயற்பாட்டிலிருந்து பெறப்பட்டவை. நிறுவனச் சட்டம் 2002 என்பது அறிமுகமான பிறகு, யுனைட்டட் கிங்டம் நாட்டில் திவாலா நிலை என்பதானது தற்போது, அதிகாரபூர்வமான பெறுநர் தனது புலனாய்வை நிறைவு செய்து விட்டதாக நீதி மன்றத்தில் ஒரு சான்றிதழைச் சமர்ப்பித்தபிறகு, 12 மாதங்களுக்கு மேல் நீடிக்காத ஒன்றாகவும், சில நேரங்களில் அதை விடக் குறைந்த காலகட்டத்திற்கானதாகவும் உள்ளது.

யுனைட்டட் கிங்டம் அரசு திவாலா நிலை சட்ட முறைமைகளை தளர்த்திய பிறகு, இத்தகைய திவாலா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். நொடித்துப் போன நிறுவனங்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் இவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன.

யூகேயில் திவாலா நிலை தொடர்பான புள்ளி விபரங்கள்
ஆண்டு

திவாலாக்கள்

ஐவிஏக்கள் மொத்தம்
2004 35,989 10,752 46,741
2005 47,291 20,293 67,584
2006 62,956 44,332 107,288
2007 64,480 42,165 106,645
(2008). 67,428 39,116 106,544

2005 மற்றும் 2006 ஆகிய வருடங்களில் உருவான அதிகரிப்பிற்குப் பிறகு, இது தொடர்பான புள்ளி விபரங்கள் நிலையாகவே இருந்து வருகின்றன.

ஐக்கிய இராச்சியத்தில் திவாலாவும் ஓய்வூதியங்களும்

தொகு

2000 ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி முதல் அமலில் வருவதாக, 2000 ஆம் வருடம் மே மாதம் யுனைட்டட் கிங்டம் திவாலா சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அரிதான சில நிகழ்வுகளைத் தவிர, திவாலா நிலையில் இருப்பினும், கடனாளிகள் தற்போது தங்களது தொழில் ஓய்வூதியங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

ஐக்கிய மாநிலங்கள்

தொகு

ஐக்கிய மாநிலங்களில் திவாலா நிலை என்பதானது, ஐக்கிய மாநிலங்களின் அரசியல் சட்டத்தின்படி (அதிகாரம் 1, பகுதி 8, விதிக் கூறு 4) கூட்டரசு அதிகார வரம்பு என்பதற்கு உட்பட்டுள்ளது. "திவாலா நிலையைப் பொறுத்து ஐக்கிய மாநிலங்கள் அனைத்திலும் ஒரே மாதிரியான சட்டங்களை இயற்றுவதற்கு" இதன் மூலம் காங்கிரஸ் அனுமதி பெறுகிறது. திவாலா நிலைக் கோட்பாடு எனும் முதன்மையான வடிவு கொண்ட ஒன்றை சட்ட மன்றத்தில் நிறைவேறிய சட்டம் என்பதாகக் காங்கிரஸ் அமல்படுத்தியது. இது ஐக்கிய மாநிலங்கள் கோட்பாடுகள் என்னும் ஆரசியல் சட்டத்தின் தலைப்பு 11 என்னும் பிரிவின் கீழ் முதன்மையாக அமைந்துள்ளது. கூட்டரசுச் சட்டம் செயல்பட முடியாத அல்லது மாநில சட்டத்திற்கு ஒத்தி வைப்பாக உள்ள சில இடங்களில் இந்தக் கூட்டரசுச் சட்டமானது மாநிலச் சட்டத்தால் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

திவாலா தொடர்பான வழக்குகள் அனைத்தும் ஐக்கிய மாநில திவாலா நீதி மன்றத்தில்தான் (இது யூ.எஸ்.மாவட்ட நீதி மன்றங்களுக்கு உடன் இணைப்பான நீதி மன்றமாகும்) தாக்கல் செய்யப்படும் என்றாலும், கோரிக்கைகள் மற்றும் விலக்குகள் ஆகியவற்றுடன் குறிப்பாகத் தொடர்புற்றிருக்கும் திவாலா வழக்குகள் பல நேரங்களில் மாநிலச் சட்டங்களைச் சார்ந்தே உள்ளன.

இதனால், பல திவாலா வழக்குகளிலும் மாநிலச் சட்டமானது பெரும் பங்கு வகிக்கிறது. இதனால், திவாலா தொடர்பான சட்டத்தை மாநிலங்கள் பலவற்றிற்குமாகப் பொதுப்படுத்துவது சாத்தியம் அற்றதாகிறது.

பொதுவாக, ஒரு கடனாளி தான் பெற்ற கடனிலிருந்து நிவாரணம் வேண்டியே திவாலா மனுவைத் தாக்கல் செய்கிறார். இது அவர் கடனிலிருந்து விடுதலை பெறுவதன் மூலமோ அல்லது கடனை மறு சீரமைப்பு செய்வதன் மூலமோ நிறைவேறுகிறது. பொதுவாக, ஒரு கடனாளி தன்னிச்சையாக மனு ஒன்றைத் தாக்கல் செய்யும்போது அவரது திவாலா வழக்கு துவங்குகிறது.

அத்தியாயங்கள்

தொகு

திவாலா கோட்பாடு என்பதன் கீழ் ஆறு அத்தியாயங்கள் உள்ளன; இவை ஐக்கிய மாநிலக் கோட்பாடுகள் என்பதன் பதினோராவது அதிகாரத்தின் கீழ் வருவதாக உள்ளன:

 • அத்தியாயம் 7: தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்குமான அடிப்படையிலான கலைப்பு விதிமுறைகள்: இது நேரடி திவாலா என்றும் அழைக்கப்படும். தற்போது கிடைக்கப் பெறும் திவாலா முறைமைகளில் இதுவே எளிமையானதும், மிகவும் விரைவானதுமாகும்.
 • அத்தியாயம் 9: நகராட்சி திவாலா: இது ஒரு நகராட்சியின் கடன்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு கூட்டு இயக்க முறைமையாகும்
 • அத்தியாயம் 11: இது, மறு சீரமைப்பு அல்லது புத்தொழுங்கமைப்பு ஆகியவற்றிற்காக, வணிகப் பற்றாளர்களால் முதன்மையாகப் பயன்படும் முறைமையாகும். இருப்பினும், சில நேரங்களில் பெரும் கடன் மற்றும் சொத்துக்கள் கொண்ட சில தனி நபர்களாலும் இது பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத் திவாலா எனப்படும் இது, ஒரு நிறுவனத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்கமைப்பதில் முதன்மையாக ஈடுபடுகிறது. இதன் விளைவாக, நிறுவனங்கள் மாற்றப்பட்ட அல்லது சீரமைக்கப்பட்ட கடன் தவணைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தங்களது வணிக நடவடிக்கைகளைத் தொடர அனுமதி பெறுகின்றன.
 • அத்தியாயம் 12: குடும்ப விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மறுவாழ்வு.
 • அத்தியாயம் 13: ஒரு நிலையான வருமானத் தோற்றுவாய் கொண்ட தனி நபர்களுக்கான, தவணைத் திட்டம் கொண்ட கடன் மறு சீரமைப்பு. நிலையான வருமானம் கொண்ட தனி நபர்கள் தங்கள் கடன்கள் முழுவதையுமோ அல்லது அதில் ஒரு பகுதியையோ திருப்பிச் செலுத்த இது உதவுகிறது. இது ஊதியம் பெறுவோருக்கான திவாலா என்றும் அறியப்படுகிறது.
 • அத்தியாயம் 15: இதர துணை மற்றும் சர்வதேச வழக்குகள்: இது திவாலாகிப் போன கடனாளிகளுக்கான ஒரு செயல் முறைமையை அளித்து, அந்நிய நாட்டுக் கடனாளிகள் தமது கடன்களுக்குத் தீர்வு காண்பதற்கு உதவுகிறது.

அத்தியாயங்கள் 7 மற்றும் 13 ஆகியவை, தனி நபர்களுக்கான தனிப்பட்ட திவாலா என்பதன் பொதுவான வகைகளாகும். ஐக்கிய மாநிலங்களில் 65 சத விகித அளவிலான நுகர்வோர் திவாலா மனுக்கள் அத்தியாயம் ஏழு என்பதன் கீழ்தான் பதிவு செய்யப்படுகின்றன. நிறுவனங்கள் மற்றும் பிற வணிக முறைமைகள் ஆகியவை தொடர்பான திவாலா படிவங்கள் ஏழு அல்லது 11ஆம் அத்தியாயத்தின் கீழ் பதிவாகின்றன.

அத்தியாயம் 7 என்பதன் கீழ், ஒரு கடனாளி தனது விலக்கம்-அல்லாத சொத்துக்கள் அனைத்தையும் ஒரு திவாலா அறங்காவலர் வசம் ஒப்படைக்கிறார். அந்த அறங்காவலர் அந்தச் சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி கொண்டு கடனாளியின் காப்புறுதி பெற்ற பற்றாளரின் பணத்தைத் திரும்பத் தருகிறார். இதற்குப் பதிலாக, சில வகையான கடன்களிலிருந்து விடுதலை பெறும் உரிமையை கடனாளி பெறுகிறார். இருப்பினும், பொதுவாகத் தனது கடன்களிலிருந்து ஒரு கடனாளி விடுபட்டாலும், முறையற்ற சில வகைகளிலான வணிக நடத்தையை மேற்கொண்டிருந்தால், (எ.கா: ஒரு குறிப்பிட்ட நிதி நிலை சார்ந்த பதிவுகளை மறைத்து வைத்தல்) மற்றும் சில கடன்களைப் பொறுத்து (எ.கா: துணைவர்/துணைவி மற்றும் குழந்தையைப் பாதுகாத்தல், மாணவர்களுக்கான கடன், சில வரிகள்), அந்தக் கடனாளி அவ்வாறான விடுதலை பெறுவதற்கு அனுமதி பெறமாட்டார். நிதி நெருக்கடியில் சிக்கும் பல தனிப்பட்ட நபர்கள் விலக்கு பெற்ற சொத்துக்கள் (எ.கா: உடைகள், வீட்டுப் பொருட்கள், பழைய வாகனம் போன்றவை) மீது மட்டுமே உரிமை கொண்டிருப்பார்கள் மற்றும் அறங்காவலர்களிடம் சொத்து எதையும் ஒப்புவிக்க தேவையிருக்காது. பற்றாளருக்கு விலக்களிக்கப்படும் சொத்தின் அளவானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. அத்தியாயம் ஏழு என்பதன் கீழான நிவாரணம் எட்டு வருட காலத்தில் ஒரே ஒரு முறை கிடைக்கப்பெறுவதானது. பொதுவாக, கடன் தீர்வையான பிறகும், காப்புறுதி கொண்ட பற்றாளருக்கு உடன் இணைவுகளின் மீது உள்ள உரிமையானது தொடர்வதாக இருக்கும். உதாரணமாக, ஒரு கடனாளி தன்னுடைய வாகனத்தை ஒப்புவித்து அதன் மூலம் தனது கடனை "மறுவுறுதி" செய்யாத நிலையில், கடனாளியின் வாகனத்தின் மீதான காப்புறுதி கொண்டுள்ள ஒரு பற்றாளர், கடனாளியின் கடன் தீர்வு செய்யப்பட்டிருந்தாலும், அந்த வாகனத்தை மீண்டும் கைப்பற்ற இயலும்.

2005ஆம் ஆண்டு அமலான திவாலா கோட்பாடுகளுக்கான திருத்தங்கள், அத்தியாயம் ஏழு என்பதன் கீழான தகுதியை நிர்ணயிக்கும் "வருவாய்வகை சோதனை"களை அறிமுகப்படுத்தின. இத்தகைய வருவாய்வகை சோதனையில் தேர்ச்சியுறாத ஒரு தனி நபரது வழக்கானது அத்தியாயம் ஏழு என்பதன் கீழ் தள்ளுபடி செய்யப்பட்டு, அவரது வழக்கு அத்தியாயம் 13 என்பதன் கீழ் மாற்றப்படும்.

பொதுவாக, ஒரு அறங்காவலர், கடனாளியின் கடன்களுக்குத் தீர்வு காண கடனாளியின் சொத்துக்கள் முழுவதையுமே அநேகமாக விற்று விடுவார். இருப்பினும், கடனாளியின் சில சொத்துக்கள் ஓரளவு பாதுகாக்கப்படுகின்றன. உதாரணமாக, சமூகக் காப்பிற்கான பண வழங்கீடுகள், வேலையின்மைக்கான நஷ்ட ஈட்டுத்தொகை மற்றும் வீடு, சொந்த வாகனம் அல்லது வண்டி, வீட்டுப் பொருட்கள் மற்றும் சாதனங்கள், வணிகக் கருவிகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றிலான பங்குகள் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய விலக்கங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. ஆகவே, அனுபவம் வாய்ந்த திவாலா வழக்கறிஞர் ஒருவரைக் கலந்தாலோசிப்பது அறிவுடமையாகும்.

அத்தியாயம் 13 என்பதன் கீழ், கடனாளி தனது சொத்துக்கள் அனைத்தின் மீதிலுமான தனது உரிமையைத் தக்க வைத்துக் கொள்வார். ஆனால், அவர் தனது எதிர்கால வருமானத்தில் ஒரு பகுதியை பற்றாளர்களுக்குத் திரும்பத் தருவதற்காகப் பயன்படுத்த வேண்டும். இது, பொதுவாக, மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கான தவணைக் காலமாக இருக்கும். கடன் தவணைகளின் பண அளவும் அவற்றின் கால அளவும் பல காரணிகளைப் பொறுத்தவையாக இருக்கும். இவற்றில் கடனாளியின் சொத்து மதிப்பு மற்றும் கடனாளியின் வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றின் அளவு போன்றவையும் அடங்கும். காப்புறுதி கொண்ட பற்றாளர் அவ்வாறு காப்புறுதியற்ற கடன் கொடுத்தோரை விட அதிக அளவிலான பண வழங்கீடலுக்கு உரிமை கொண்டவர்கள் ஆவார்கள்.

அத்தியாயம் 13 என்பதன் கீழான நிவாரணம், சீரான வருமானம் கொண்ட மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை மீறாத அளவு கடன் கொண்ட தனி நபர்களுக்கு மட்டுமே கிடைப்பதாகும். நீங்கள் ஒரு தனிப்பட்ட நபராகவோ அல்லது ஒரு தனி உரிமையாளராகவோ இருந்தால், அத்தியாயம் 13 என்பதன் கீழ் உங்களது கடன்கள் அனைத்திற்குமோ அல்லது அதன் ஒரு பகுதிக்கோ தீர்வு காண திவாலா மனுச் செய்ய அனுமதி பெறுவீர்கள். இந்த அத்தியாயத்தின் கீழ் நீங்கள் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் முடிந்து விடுவதான கடன் தீர்வுத் திட்டம் ஒன்றை முன் வைக்கலாம். மாநிலத்தின் நடுத்தர வருவாயை விட உங்களது மாத வருமானம் குறைவாக இருப்பின், அத்திட்டத்தின் கால அளவை நீட்டிப்பதற்கான "நியாயமான காரணங்களை" நீதி மன்றம் கண்டறியாதவரை, உங்களது கடன் தீர்வுத் திட்டம் மூன்று வருடங்களுக்காக இருக்கும். மாநிலத்தின் நடுத்தர வருவாயை விட உங்களது மாத வருமானம் அதிகமாக இருப்பின், அத்திட்டம் பொதுவாக ஐந்து வருடங்களுக்காக இருக்க கூடும். ஐந்து வருடக் காலத்திற்கு மேலாக எந்த ஒரு திட்டமும் இருக்க இயலாது.

அத்தியாயம் ஏழு என்பதற்கு மாறாக, அத்தியாயம் 13 என்பதன் கீழ் விலக்கு உள்ள அல்லது அற்ற சொத்துக்கள் அனைத்தையுமே கடனாளி தன்னுடன் வைத்துக் கொள்ளலாம். திட்டத்தின் செயல் முறைமை வெற்றி அடையுமென்று காணப்பட்டால் மற்றும் இதர தேவைகளைக் கடைப்பிடிப்பதிலும் கடனாளி இணக்கம் தெரிவித்தால், திவாலா நீதி மன்றம் இந்தத் திட்டத்தை உறுதி செய்யும் மற்றும் அதன் நிபந்தனைகளுக்கு கடனாளி மற்றும் பற்றாளர் ஆகிய இரு தரப்பினரும் உட்படுவார்கள். இந்தத் திட்டம் கோட்பாடின் சட்டரீதியான தேவைகளில் ஏதாவது ஒன்றுடன் இணங்கவில்லை என்று ஆட்சேபம் தெரிவிப்பதைத் தவிர்த்து கடன் கொடுத்தோருக்கு, இந்தத் திட்ட உருவாக்கத்தில் வேறு பங்கேதும் கிடையாது. பொதுவாக, பண வழங்கீடுகள் அறங்காவலருக்கு அளிக்கப்படும். அவர் அவற்றை உறுதி பெற்ற திட்ட நிபந்தனைகளின்படி விநியோகிப்பார்.

திட்டத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப பண வழங்கீடுகளைக் கடனாளி நிறைவேற்றிய பிறகு, நீதி மன்றம் அத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடன்களிலிருந்து கடனாளிக்கு விடுதலை வழங்கும். இருப்பினும், ஒப்புக் கொள்ளப்பட்ட அளவு பண வழங்கீடுகளை கடனாளி செய்யத் தவறினாலும், அல்லது மாறுதலுக்குள்ளான ஒரு திட்டத்திற்கு நீதி மன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறத் தவறினாலும், அறங்காவலரின் மனுத் தாக்குதலின் பேரில் திவாலா நீதி மன்றம் அந்த வழக்கை அநேகமாகத் தள்ளுபடி செய்து விடும். அவ்வாறு தள்ளுபடியான பிறகு, பற்றாளர்கள், அரசின் சட்ட ரீதியான வழி முறைகளுக்கு உட்பட்டு, மீதமிருக்கும் தங்களது கடனை கடனாளியிடமிருந்து வசூல் செய்யும் வழி முறைமைகளில் ஈடுபடுவார்கள்.

அத்தியாயம் 11 என்பதன் கீழ் சொத்துக்களின் உரிமை மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆகியவற்றைக் கடனாளியே தக்க வைத்துக் கொள்வார். உடமைக்கான உரிமம் பெற்ற கடனாளி (டெட்டார் இன் பொசஷன் -டிஐபி) என்று அவர் மறுபெயரிடப்படுகிறார். இவ்வாறான, உடமைக்கான உரிமம் பெற்ற கடனாளி தமது வர்த்தகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவார். கடனாளியும், பற்றாளரும் கடனாளியும் திவாலா நீதி மன்றத்துடன் ஒருங்கிணைந்து, கடன் தீர்வுக்கான ஒரு திட்டத்தின் மீதான பேச்சு வார்த்தைகள் நடத்தி, அத்திட்டத்தை நிறைவேற்றுவர். சில தேவைகளை சந்திக்குங்காலை (எ.கா : பற்றாளர்களுக்கு இடையில் நியாய முறைமை, சில வகைப் பற்றாளர்களுக்கான முன்னுரிமை ஆகியன), திட்டத்தின் மீதான ஒட்டெடுப்பில் வாக்களிக்க கடனாளிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஒரு திட்டத்தினை உறுதி செய்து விட்டால், கடனாளி தன் செயற்பாடுகளைத் தொடர்ந்து நடத்தி வந்து, உறுதி செய்யப்பட்ட திட்டத்தின் வரையறைகளின்படி தனது கடனைத் திரும்ப அடைப்பார். பற்றாளரில் குறிப்பிட்ட அளவு பெரும்பான்மையோர் அவ்வாறு வாக்களித்துத் திட்டத்தை உறுதி செய்யவில்லை எனில்,அத்திட்டத்தை உறுதி செய்ய, கூடுதலான நிபந்தனைகளை நீதி மன்றம் விதிக்கலாம்.

பெரும்பாலும், திவாலா சட்டத்தின் அத்தியாயங்களில் ஏழு மற்றும் 13 ஆகியவையே தனிப்பட்ட நபர்களால் திறம்படப் பயன்படுத்தப்படுகின்றன.

நுகர்வோர் கடனாளிகளை ஏறத்தாழ நேரடியாக ஈடுபடுத்தும் அத்தியாயங்கள், "நேரடித் திவாலா நிலை" என்று அறியப்படும் அத்தியாயம் ஏழு மற்றும் கடனைத் திரும்பச் செலுத்தும் வசதியுள்ள திட்டத்தை அளிக்கும் அத்தியாயம் 13 ஆகியவையாகும். எல்லா விதமான திவாலா மனுக்களுக்கும் பொருந்துவதான ஒரு முக்கியமான அம்சம் தானியங்கி முறையிலான தடைதான். தானியங்கி முறையிலான தடை என்பதின் பொருள் என்னவென்றால், திவாலா சட்டத்தின் கீழ் பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுவின் பேரில், நிலுவையில் உள்ள பெரும்பான்மையான வழக்குகள், மறு உரிமை மேற்கொள்ளுதல்கள், முன்னதாகவே செயல்படுத்தப்படும் மூடுதல்கள், வெளியேற்றங்கள், சட்ட ரீதியான உரிமைகளைக் கட்டுப்படுத்துதல்கள், சொத்துக்களின் பேரிலான சட்ட ரீதியான தளைகள், மற்றும் பயன்பாடு இடுபொருள் நிறுத்தங்கள் மற்றும் கடனைத் திரும்பக் கேட்டுத் தொல்லை உண்டாக்குதல் ஆகியவை தாமாகவே நின்று விடும் என்பதுதான்.

திவாலா நிலையின் தவறான பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் நுகர்வோர் காப்பு சட்டம் (பிஏபீசிபீஏ)

தொகு

2005வது வருடத்திய, திவாலா நிலையின் தவறான பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் நுகர்வோர் காப்பு சட்டம் பிர.எல்.எண்.109-8 பு.வி. 23 (ஏப்ரல் 20,2005) (பிஏபீசிபீஏ) திவாலா கோட்பாடுகளைப் பெருமளவில் திருத்தியமைத்தது. பிஏபீசிபீஏவின் ஷரத்துக்களில் பலவும் நுகர்வோர் பற்றாளர்களால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டும், பல நுகர்வோர் வழக்கறிஞர்கள், திவாலா நிலை தொடர்பான கல்வியாளர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோரால் அதே அளவு தீவிரமாக எதிர்க்கப்பட்டும் வந்தன.[9] காங்கிரஸில் ஏறத்தாழ எட்டு வ்ருடங்கள் நீடித்த விவாதத்திற்குப் பின்னர் பிஏபீசிபீஏ அமலானது. இந்தச் சட்டத்தின் ஷரத்துக்கள் பலவும் 2005ஆம் ஆண்டு 17ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாயின. இந்த சட்டத்திற்கான முன் வரைவில் கையெழுத்திட்ட பிறகு, அதிபர் புஷ் இவ்வாறு கூறினார்:

Under the new law, Americans who have the ability to pay will be required to pay back at least a portion of their debts. Those who fall behind their state's median income will not be required to pay back their debts. The new law will also make it more difficult for serial filers to abuse the most generous bankruptcy protections. Debtors seeking to erase all debts will now have to wait eight years from their last bankruptcy before they can file again. The law will also allow us to clamp down on bankruptcy mills that make their money by advising abusers on how to game the system.[10]

நுகர்வோர் திவாலா நிலை சட்டத்தின் பல மாற்றங்களில் ஒன்றாக, பிஏபீசிபீஏ "வருவாய்வகை சோதனை" ஒன்றையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதன் மூலமாக, முதன்மையாக, நுகர்வோர் கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கிய குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள தனி நபர் கடனாளிகள் திவாலா நிலை கோட்பாடுகளின் அத்தியாயம் 7 என்பதன் கீழ் நிவாரணம் பெறத் தகுதி அடைவது மேலும் கடினமானது. இந்த "வருவாய்வகை சோதனை", மனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு 180 நாட்களுக்கு முன்னாலான கால கட்டத்தில், ஒத்த அளவு கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வருடாந்தர வருமானத்தை விட அதிக அளவில் நுகர்வோர் கடன் கொண்ட கடனாளிகளைப் பொறுத்த வழக்குகளில் பிரயோகமாகிறது. இவ்வாறாக அந்தத் தனி நபரானவர் "வருவாய்வகை" சோதனைக்கு "உட்பட" வேண்டுமென்றால், குறிப்பிட்ட 180 நாட்கள் கால கட்டத்தில் அவரது மாத வருமானத்திலிருந்து, வாழ்க்கை செலவீனங்களும் மற்றும் காப்புறுதி கொண்ட கடன்களுக்கான பண வழங்கீடுகளும் தொடர்ச்சியாக நுணுக்கமான முறையில் கணக்கிடப்பட்டு கழிக்கப்படுகின்றன. இது அந்த நபரின் மாதாந்திர வரவு-செலவுத் திட்டத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்காது போகலாம். இவ்வாறான வருவாய்வகை சோதனையின் முடிவில் பகிர்ந்தளிப்பதற்குப் பணம் ஏதும் மிஞ்சாவிட்டால் (அல்லது சில நேரங்களில் மிகச் சிறிய அளவில் மிச்சம் இருந்தால்), பிறகு குறிப்பிட்ட நபர், அத்தியாயம் ஏழு என்பதன் கீழ் நிவாரணத்திற்குத் தகுதி உடையவராகிறார். திவாலா நிலைக் கோட்பாடுகளின் அத்தியாயம் ஏழு என்பதன் கீழாக, வருவாய்வகை சோதனையின் காரணமாகவோ அல்லது அத்தியாயம் ஏழு காப்புறுதி கொண்ட செலுத்தப்படாத கடன்களுக்கான பண வழங்கீட்டிற்கு நிரந்தரமான ஒரு தீர்வை அளிக்காவிட்டால், உதாரணமாக, அடமானங்கள் அல்லது வாகனக் கடன்கள், ஒரு பற்றாளர் தகுதி பெறாவிட்டால், இந்தக் கோட்பாடுகளின் அத்தியாயம் 13 என்பதன் கீழ் கடனாளி நிவாரணம் கோரலாம். அத்தியாயம் 13 என்பதன் கீழான திட்டம், அநேகமாக, கடன் அட்டைகள் அல்லது மருத்துவக் கட்டணப் பட்டியல்கள் போன்ற காப்புறுதி பெறாத பொதுவான கடன்களுக்கு பண வழங்கீடுகளை அவசியமாக்குவதில்லை.

திவாலா நிலைக்கான நிவாரணம் வேண்டுவோர்கள், அதன் அதற்கான மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னால், அங்கீகாரம் பெற்ற கலந்தாய்வு முகமைகளில் பற்று அறிவுரைகள் பெற வேண்டும் எனவும், மற்றும் அத்தியாயங்கள் ஏழு அல்லது 13 ஆகியவற்றின் கீழ் கடன் விடுவிப்பு பெறுவதற்கு முன்பாக அங்கீகாரம் பெற்ற முகமைகளில் தனி நபர் நிதி மேலாண்மை தொடர்பான கல்வி பெற வேண்டும் என்றும் பிஏபீசிஏ வலியுறுத்துகிறது. இவ்வாறு பற்று தொடர்பான கலந்தாலோசிப்பின் நடைமுறைப் படுத்தலின் தேவை குறித்து நடத்தப்பட்ட சில ஆய்வுகள், திவாலா கோட்பாடுகளின் கீழ் நிவாரணம் பெற விரும்பும் பல கடனாளிகளுக்கு இதுவே சட்டத்தின் கீழ் ஒரே வழிமுறையாக இருப்பதனால், அத்தகைய கடனாளிகள் இவ்வாறான கலந்தாலோசிப்பினால் பெறும் நன்மை மிகக் குறைவே என்று கருத்துத் தெரிவித்துள்ளன.[சான்று தேவை]

பொதுவாக ஐரோப்பாவில்

தொகு

2004ஆம் ஆண்டு, பல ஐரோப்பிய நாடுகளில், நொடித்துப் போன வணிகங்களின் எண்ணிக்கையானது வரலாறு காணாத அளவு உயரலானது. ஃபிரான்ஸ் நாட்டில், நிறுவனங்கள் நொடித்துப் போவதானது நான்கு சதவிகிதத்திற்கும் மேலாகவும், ஆஸ்திரியாவில் 10 சதவிகிதத்திற்கும் மேலாகவும், கிரீஸ் நாட்டில் 20 சதவிகிதத்திற்கும் மேலாகவும் அதிகரித்தது. இருப்பினும், இவ்வாறு நொடித்துப் போன நிறுவனங்களின் எண்ணிக்கை அந்த நாடுகள் ஒவ்வொன்றின் நிதி நிலைமையின் மீதான அவற்றின் முழுத் தாக்கத்தை சுட்டிக் காட்டுவதாக அமையவில்லை. ஏனெனில், ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய நிகழ்வுகளின் அளவு சுட்டிக்காட்டப்படவில்லை. திவாலா நிகழ்வுகளின் மொத்த எண்ணிக்கையானது, வாராக் கடன்களின் எண்ணிக்கை விகிதத்தின் அதிகரிப்பையோ அல்லது அந்த நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தையோ அறிவிப்பதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

திவாலா பற்றிய புள்ளி விபரங்கள் ஒரு பின் தொடர்வு சுட்டிக் காட்டுதல்களே. நிதி நெருக்கடி மற்றும் திவாலா நிலை ஆகியவற்றிற்கு இடையில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி உண்டு. பெரும்பாலான நிகழ்வுகளில், நிதி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் திவாலா நிலைமை உருவாதல் ஆகியவற்றிற்கு இடையில் பல மாதங்களும், ஏன் வருடங்களும் கூட கடந்து விடலாம். சட்டம், வரி மற்றும் கலாசாரம் சார்ந்த இடுகைகள் ஆகியவை திவாலா புள்ளி விபரங்களை மேலும் உரு மாற்றிச் சிக்கலாக்கலாம், குறிப்பாக, சர்வதேச அளவில் ஒப்புமை செய்ய முயல்கையில் இவ்வாறு நிகழலாம். இரண்டு எடுத்துக் காட்டுகள்:

 • ஆஸ்திரியாவில், 2004ஆம் வருடம் சாத்தியமான திவாலா சட்ட நடைமுறைகளில் பாதிக்கும் மேலானவை, நிதிப் பற்றாக்குறையின் காரணமாக, மேற்கொண்டு நடத்தப்படவில்லை.
 • ஸ்பெயின் நாட்டைப் பொறுத்தவரையில், சில வகையான நொடித்துப் போன வணிகம்/ திவாலா நிலை ஆகியவற்றிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் துவக்குவது பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இருப்பதில்லை. ஆகவே, இந்த நாட்டில் நொடித்துப் போன நிறுவனங்கள் என்று அறிவிக்கப்படுபவற்றின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. ஒப்புமைக்கு: 2004ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டில் 40,000 என்பதற்கும் அதிகமான திவாலா சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; ஆனால் ஸ்பெயின் நாட்டில் அவற்றின் எண்ணிக்கை 600 என்பதற்கும் குறைவானதாகவே இருந்தது. அதே நேரம், ஸ்பெயின் நாட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடனான 2.6 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், ஃபிரான்ஸ் நாட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடன் 1.3 சதவிகிதமாகவே இருந்தது.

தனி நபர்களுக்கான திவாலா நிலை எண்ணிக்கையும் முழுமையான நிலையைக் காட்டுவதாக அமைவதில்லை. மிகச் சிறு கூறாக, மிகவும் அதிக அளவில் கடன்பட்டு விட்ட குடும்பங்களே திவாலா மனு தாக்கல் செய்யத் தீர்மானிக்கின்றன. இதற்கான முதன்மையான இரண்டு காரணங்கள், தங்களை நொடித்துப் போனவர்களாக அறிவித்துக் கொள்வதில் சமூக ரீதியாக உணரப்படும் களங்கம் மற்றும் இதன் காரணமாக அவர்களது வணிகத்தின் மீது சாத்தியமாக விளையக் கூடிய பாதிப்பு ஆகியவையாகும்.

குறிப்புகள்

தொகு
 1. ட்யூட்டரெனோமி 15:1–3
 2. லெய்டிக்யூஸ் 25:8–54
 3. பார்க்கவும் 140 காங். ரெக். எஸ்14, 461 (தினசரி வெளியீடு. அக்ட். 6, 1994).
 4. பார்க்கவும் 18 யூ.எஸ்.சி. ஷரத்து 152. ஹெச்டிடிபி://டிரேஸ்.எஸ்ஒய்ஆர்.ஈடியூ/லாஸ்/18யூஎஸ்152.ஹெச்டிஎம்எல்[தொடர்பிழந்த இணைப்பு]
 5. ஐடிஎஸ்ஏ
 6. ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.பிளனால்டோ.ஜிஓவி.பிஆர்/சிசிஐவிஐஎல்_03/_ஏடிஓ2004-2006/2005/எல்ஈஐ/எல்11101.ஹெச்டிஎம்[தொடர்பிழந்த இணைப்பு] பிரேசில். லா. 11,105/05.
 7. "2006வது வருடத்தில் கனடாவில் திவாலா " பரணிடப்பட்டது 2007-03-29 at the வந்தவழி இயந்திரம்: திவாலா மேற்பார்வையாளரின் அலுவலகம்(கனடா தொழில்). 9-05-2009 அன்று பெறப்பட்டது.
 8. "கொங்குர்ஸ்". Archived from the original on 2005-11-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
 9. "திவாலா சீர்திருத்தங்களின் மீது செனட்டின் நீதி ஆணையத்தின் முன்னால் நடைபெற்ற வாதங்கள் ", 109வது காங். பிப்ரவரி 10, 2009 ஜூலை 14, 2007 அன்று பெறப்பட்டது.
 10. Press Release, White House, "President Signs Bankruptcy Abuse Prevention, Consumer Protection Act" (April 20, 2005). Retrieved July 30, 2007.

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

புற இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=திவாலா_நிலை&oldid=3849340" இலிருந்து மீள்விக்கப்பட்டது