ரிச்சர்டு கெக்
ரிச்சர்டு எஃப். ஃகெக் (Richard F. Heck, ஆகத்து 15, 1931 – அக்டோபர் 10, 2015)[3] ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[4] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.
ரிச்சர்டு எஃப். கெக் Richard F. Heck | |
---|---|
![]() 2010 இல் கெக் | |
பிறப்பு | ரிச்சர்டு பிரெட் கெக் ஆகத்து 15, 1931 மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா |
இறப்பு | அக்டோபர் 10, 2015 மணிலா, பிலிப்பீன்சு | (அகவை 84)
வாழிடம் | குவிசோன் நகரம், பிலிப்பீன்சு[1][2] |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | டெலவெயர் பல்கலைக்கழகம் எர்க்குலிசு சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக் டெ லா சால் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) |
அறியப்படுவது | கெக் வினை |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (2010) |
துணைவர் | சொக்கோரோ நார்டோ (இ. 2012) |
பிள்ளைகள் | எவருமில்லை |
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் தொகு
- ↑ Suarez, Larissa Mae. "US scientist residing in Philippines wins 2010 chemistry Nobel". GMANews.tv. http://www.gmanews.tv/story/202862/us-scientist-residing-in-philippines-wins-2010-chemistry-nobel.
- ↑ Quismundo, Tarra. "He’s the only Nobel winner living in RP". Inquirer.net இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225133903/https://newsinfo.inquirer.net/.
- ↑ "UK Nobel Prize winner Heck dies in Philippines" இம் மூலத்தில் இருந்து 2015-10-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151015024516/http://uk.reuters.com/article/2015/10/10/uk-nobel-prize-heck-philippines-idUKKCN0S40DD20151010.
- ↑ Press release 6 October 2010, Royal Swedish Academy of Sciences, retrieved 6 October 2010.