அக்கிரா சுசுக்கி
அக்கிரா சுசுக்கி (Akira Suzuki, 鈴木 章) (பிறப்பு செப்டம்பர் 12, 1930) 2010 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர். போரானிக் காடி, பலேடியம் வினையூக்கி தொடர்பான சுசுக்கி விளைவு என்னும் விளைவை 1979 இல் கண்டுபிடித்தார்.[1][2][3][4]
அக்கிரா சுசுக்கி Akira Suzuki | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 12, 1930 முக்காவா, ஒக்கைடோ, நிப்பான் (சப்பான்) |
தேசியம் | சப்பான் ஜப்பானியர் |
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | ஒக்கைடோ பல்கலைக்கழகம் (Hokkaidō University) |
கல்வி கற்ற இடங்கள் | ஒக்கைடோ பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | சுசுக்கி விளைவு |
விருதுகள் | வேதியியல் நோபல் பரிசு (2010) |
2010 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை, அக்கிரா சுசுக்கி, ரிச்சர்டு ஃகெக், ஐ-இச்சி நெகிழ்சி ஆகிய இருவருடனும் சேர்ந்து பெற்றார்[5].
வாழ்க்கை
தொகுசுசுக்கி செப்டம்பர் 12, 1930 இல் நிப்பானில் (சப்பானில்) ஒக்கைய்டோவில் முக்கவா என்னும் இடத்தில் பிறந்தார். ஒக்கைடோ பல்கலைக்கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அங்கேயே துணைப்பேராசிரியராக சில காலம் இருந்த பின்னர், 1963 முதல் 1965 வரை அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் எர்பர்ட் சார்லசு பிரௌன் என்பாரிடன் மேல் முனைவராக (posdoc) பணிபுரிந்துவிட்டு மீண்டும் ஒக்கைடோ பல்க்லைக்கழகத்துக்கே திரும்பினார். 1994 இல் ஒக்கைடோ பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்[6]
உசாத்துணை
தொகு- ↑ Miyaura, N. et al. Tetrahedron Lett. 1979, 3437.
- ↑ Miyaura, N.; Suzuki, A. Chem. Commun. 1979, 866.
- ↑ Suzuki, A. Pure Appl. Chem. 1991, 63, 419-422. (Review)
- ↑ Suzuki, A. J. Organometallic Chem. 1999, 576, 147–168. (Review)
- ↑ Royal Swedish Academy of Sciences(6 October 2010). "The Nobel Prize in Chemistry 2010". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 6 October 2010.
- ↑ Miyaura, Norio.; Suzuki, Akira. (1995). "Palladium-Catalyzed Cross-Coupling Reactions of Organoboron Compounds". Chemical Reviews 95: 2457. doi:10.1021/cr00039a007.