ரிச்சர்டு கெக்

அமெரிக்க வேதியியலாளர் (1931-2015)
(ரிச்சர்டு ஃகெக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரிச்சர்டு எஃப். ஃகெக் (Richard F. Heck, ஆகத்து 15, 1931 – அக்டோபர் 10, 2015)[3] ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[4] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.

ரிச்சர்டு எஃப். கெக்
Richard F. Heck
2010 இல் கெக்
பிறப்புரிச்சர்டு பிரெட் கெக்
(1931-08-15)ஆகத்து 15, 1931
மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா
இறப்புஅக்டோபர் 10, 2015(2015-10-10) (அகவை 84)
மணிலா, பிலிப்பீன்சு
வாழிடம்குவிசோன் நகரம், பிலிப்பீன்சு[1][2]
தேசியம்அமெரிக்கர்
துறைவேதியியல்
பணியிடங்கள்டெலவெயர் பல்கலைக்கழகம்
எர்க்குலிசு
சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்
டெ லா சால் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
அறியப்படுவதுகெக் வினை
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (2010)
துணைவர்சொக்கோரோ நார்டோ (இ. 2012)
பிள்ளைகள்எவருமில்லை

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. Suarez, Larissa Mae. "US scientist residing in Philippines wins 2010 chemistry Nobel". GMANews.tv.
  2. Quismundo, Tarra. "He's the only Nobel winner living in RP". Inquirer.net. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-10-14.
  3. "UK Nobel Prize winner Heck dies in Philippines". Archived from the original on 2015-10-15. பார்க்கப்பட்ட நாள் 2015-10-14.
  4. Press release 6 October 2010, Royal Swedish Academy of Sciences, பார்க்கப்பட்ட நாள் 6 October 2010.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Richard Fred Heck
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்டு_கெக்&oldid=3569799" இலிருந்து மீள்விக்கப்பட்டது