மெலிண்டா கேட்ஸ்

மெலிண்டா கேட்ஸ் (ஆங்கிலம்:Melinda French Gates) 1964ம் [2] ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதி பிறந்தவர். இவர் ஒரு பெண்தொழிலதிபராகவும், இரக்க குணம் உள்ள பெண்ணாகவும் உள்ளார். இவர் பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவராகவும் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸின் மனைவியாவார். மைக்ரோசாப்ட் பாப், (Microsoft Bob), என்கார்ட்டா கலைக்களஞ்சியம், என்கார்டா(வலைத்தளம்) ((Encarta)Expedia) போன்றவற்றின் திட்ட மேலாளராகவும் உள்ளார்.

மெலிண்டா கேட்ஸ்
2011ம் ஆண்டு நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் மெலிண்டா கேட்ஸ்
பிறப்புமெலிண்டா ஆனா கேட்ஸ்
ஆகத்து 15, 1964 (1964-08-15) (அகவை 60)
டாலஸ், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
இருப்பிடம்மெடினா, வாஷிங்டன்WA, அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்டியூக் பல்கலைக்கழகம்
பணிபில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவர்
சமயம்ஆர்.சி [1]
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்3
வலைத்தளம்
Bill and Melinda Gates Foundation Home Page

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அமெரிக்க நாட்டின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டாலஸ் என்ற நகரில் 1964ம் ஆண்டு ஒரு கத்தோலிக்க[3] கிறித்தவ குடும்பத்தில் பிறந்தார். வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் கணினியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். பிக்யூ வணிக பள்ளி நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை முடித்துள்ளார்.

பதவி

தொகு

1987ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். 1996ம் ஆண்டு தனது நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்றார்.[4]

மேற்கோள்

தொகு
  1. http://www.nndb.com/people/533/000044401/
  2. Texas Births, 1926–1995. Familytreelegends.com. Retrieved on 2013-06-29.
  3. The Independent. Catholic Melinda Gates defies the Vatican over birth control funds. Independent.co.uk (2012-07-12). Retrieved on 2013-06-29.
  4. "Profile: Bill Gates". BBC News. 2004-01-26. http://news.bbc.co.uk/1/hi/business/3428721.stm. பார்த்த நாள்: 2007-04-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலிண்டா_கேட்ஸ்&oldid=3043669" இலிருந்து மீள்விக்கப்பட்டது