மரீச் மான் சிங் சிரேஸ்தா

மரீச் மான் சிங் சிரேஸ்தா (Marich Man Singh Shrestha) (நேபாளி: मरिचमान सिंह श्रेष्ठ; 1 சனவரி 1942 – 15 ஆகஸ்டு 2013) நேபாள நாட்டின் 28வது பிரதம அமைச்சராக 15 சூன் 1986 முதல் 6 ஏப்ரல் 1990 முடிய பதவி வகித்தவர்.[1] நேவார் இனத்தைச் சேர்ந்த இவர், சுயேச்சை அரசியல்வாதி ஆவார்.

மரீச் மான் சிங் சிரேஸ்தா
मरिचमान सिंह श्रेष्ठ
28வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
15 சூன் 1986 – 6 ஏப்ரல் 1990
அரசர் மன்னர் பிரேந்திரா
முன்னவர் நாகேந்திர பிரசாத் ரிஜால்
பின்வந்தவர் லோகேந்திர பகதூர் சந்த்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 1, 1942(1942-01-01)
காலங்க பஜார், சல்யான், நேபாளம்]]
இறப்பு 15 ஆகத்து 2013(2013-08-15) (அகவை 71)
காட்மாண்டு, நேபாளம்
அரசியல் கட்சி சுயேச்சை அரசியல்வாதி
வாழ்க்கை துணைவர்(கள்) விஷ்ணுதேவி பிஸ்தா
பிள்ளைகள் அனில் சஞ்சயன், ராஷ்மி, ரஞ்சன்

அரசியல் பணிதொகு

இவர் நேபாளத்தின் பிரதம அமைச்சராவதற்கு முன்னர், நேபாள தேசிய சபையின் சபாநாயகராக பதவி வகித்தார். நேபாளத்தின் மீது 23 மார்ச் 1989 முதல் இந்தியா 16 மாத பொருளாதாரத் தடை ஏற்படுத்தியிருந்த காலத்தில், பல கட்சிகள் அரசியல் ஜனநாயக முறை வேண்டி கடுமையான போராட்டங்கள் நடத்தின. இதனால் மரீச் மான் சிங் சிரஸ்தாவை, மன்னர் பிரேந்திரா பதவி நீக்கம் செய்தார். மக்கள் எழுச்சியின் விளைவாக நேபாளத்தில் ஈரவை முறைமை கொண்ட நாடாளுமன்றம் அமைத்திட நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3]

இறப்புதொகு

மரீச் மான் சிங் சிரேஸ்தா தமது 71வது அகவையில் உடல்நலக் குறைவால் 15 ஆகஸ்டு 2013 அன்று மறைந்தார்.[4][5]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

அரசியல் பதவிகள்
முன்னர்
நாகேந்திர பிரசாத் ரிஜால்
நேபாள பிரதம அமைச்சர்
1986 – 1990
பின்னர்
லோகேந்திர பகதூர் சந்த்
தூதரகப்பதவிகள்
முன்னர்
ராஜீவ் காந்தி
சார்க் அமைப்பின் தலைவர்
1987
பின்னர்
பெனசீர் பூட்டோ