சல்யான் மாவட்டம்
சல்யான் மாவட்டம் (Salyan District) (நேபாளி: सल्यान जिल्लाⓘ), தெற்காசியாவின் நேபாள நாட்டின் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 6-இல் அமைந்த, நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சல்யான் நகரம் ஆகும். இம்மாவட்டம் காட்மாண்டு நகரத்திலிருந்து மேற்கே 320 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ரப்தி மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டம் 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 2,41,716 ஆகும். [1][2][3]
வரலாறு
தொகுகாக்ரா சமவெளியில் அமைந்த இருபத்தி இரண்டு சிறு இராச்சியங்களின் கூட்டமைப்பில் சல்யான் மாவட்டத்தின் பைசே இராச்சியமும் ஒன்றாக இருந்தது. கிபி 1760-இல் நேபாள ஷா வம்ச மன்னர்கள், ஒன்றுபட்ட நேபாள இராச்சியத்தை நிறுவும் பொருட்டு, நேபாளத்தில் இருந்த சல்யன் மாவட்ட பைசே இராச்சியம் உட்பட அனைத்து சிறு இராச்சியங்களும் ஒன்றுபட்ட நேபாள இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.
பெயர்க் காரணம்
தொகுசல்யான் என்பதற்கு நேபாள மொழியில் தேவதாரு என்று பொருள். இம்மாவட்டத்தில் தேவதாரு மரங்கள் அதிகம் இருந்த காரணத்தினால் இம்மாவட்டத்திற்கு சல்யான் எனப் பெயராயிற்று.
புவியியல் தட்ப வெப்பம்
தொகுஇமயமலையில் அமைந்த மலை மாவட்டமான சல்யான் மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை என மூன்று காலநிலைகளில் காணப்படுகிறது. [4]
உள்ளாட்சி மன்றங்கள்
தொகுசல்யான் மாவட்டத்தில் நாற்பத்தி எட்டு கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Districts of Nepal". Statoids. Gwillim Law. பார்க்கப்பட்ட நாள் January 23, 2014.
- ↑ #National Population and Housing Census 2011, Volume 3 (PDF). Kathmandu, Nepal: Government of Nepal, Central Bureau of Statistics. January 2014. Archived from the original (PDF) on ஏப்ரல் 18, 2013. பார்க்கப்பட்ட நாள் January 23, 2014.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ Central Bureau of Statistics, Kathmandu, Nepal, Jan. 2014
- ↑
The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
{{citation}}
: horizontal tab character in|series=
at position 89 (help)
வெளி இணைப்புகள்
தொகு- [ http://ddcsalyan.gov.np/ சல்யன் மாவட்ட இணையதளம்]