நேபாள மாநிலங்கள்

நேபாள மாநிலங்கள் ( Provinces of Nepal) (நேபாளி: प्रदेश Pradesh) 2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை எண் 4ன் படி, நிர்வாக வசதிக்காக 20 செப்டம்பர் 2015 அன்று, 77 நேபாள மாவட்டங்களைக் கொண்டு, ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.

மாநிலம்
प्रदेश
Pradesh
வகைநேபாள மாநிலங்கள்
அமைவிடம்நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு
உருவாக்கப்பட்டது20 செப்டம்பர் 2015
எண்ணிக்கை7
அரசுஆளுநர்
முதலமைச்சர்
சட்டமன்றம்
உட்பிரிவுகள்மாவட்டங்கள்

ஏழு புதிய மாநிலங்கள் நிறுவப்பட்டப் பின்னர், ஐந்து வளர்ச்சி பிராந்தியங்கள் மற்றும் 14 மண்டலங்களின் நிர்வாக ஆட்சி முறை முடிவுக்கு வந்தது.

அரசியல் தொகு

அரசாங்கம் தொகு

நேபாள மாநிலங்களின் அன்றாட நிர்வாகத்தை மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை மேற்கொள்ளும். நேபாள அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர், மாநிலங்களின் ஆளுநர்களை நியமிக்கிறார்.

மாநில சட்டமன்றங்கள் தொகு

நேபாளத்தின் மாநிலங்கள் ஓரவை கொண்ட சட்டமன்றங்கள் கொண்டுள்ளது.[1] இச்சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகாலம் ஆகும்.

நேபாள மாநில சட்டமன்றங்கள் 550 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் 330 (60%) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் முறையிலும், 220 (40%) சட்டமன்ற உறுப்பினர்கள், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு இடஒதுக்கீடு உள்ளது.[2]

நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்ற ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டணியோ அரசு அமைக்க உரிமை உள்ளது.

நேபாள மாநிலங்கள் தொகு

# மாநிலம் தலைநகரம் ஆளுநர் முதலமைச்சர் மாவட்டங்கள் பரப்பளவு
(KM²)
மக்கள்தொகை
(2011)
அடர்த்தி
(people/KM²)
1 மாநில எண் 1 விராட்நகர் டாக்டர். கோவிந்த சுப்பா செர் தான் ராய் 14 25,905 KM² 4,534,943 175
2 மாதேஷ் மாநிலம் ஜனக்பூர் ரத்தினேஸ்வர் லால் ரவுத் முகமது லால்பாபு ரவுத் 8 9,661 KM² 5,404,145 559
3 பாக்மதி மாநிலம் ஹெடௌதா அனுராதா கொய்ராலா தோர்மணி பௌதேல் 13 20,300 KM² 5,529,452 272
4 கண்டகி மாநிலம் பொக்காரா பாபுராம் குன்வர் பிரிதிவி சுப்பா குரூங் 11 21,504 KM² 2,413,907 112
5 லும்பினி மாநிலம் பூத்வல் உமாகாந்த ஜா சங்கர் பொக்காரேல் 12 22,288 KM² 4,891,025 219
6 கர்ணாலி மாநிலம் விரேந்திரநகர் துர்கா கேசர் கனால் மகேந்திர பகதூர் ஷா 10 27,984 KM² 1,168,515 41
7 தொலைதூர மேற்கு மாநிலம் தங்கடி மோகன்ராஜ் மல்லா திரிலோசன பட்டா 9 19,539 KM² 2,552,517 130
மொத்தம் நேபாளம் காட்மாண்டு குடியரசுத் தலைவர் பிரதம அமைச்சர் 77 147,181 KM² 26,494,504 180

மேற்கோள்கள் தொகு

  1. "CA approves ceremonial prez, bicameral legislature". Kanptipur Media Group. 16 September 2015. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017. Provincial parliaments will be unicameral. "The CA also approved a mixed electoral system for parliamentary election with 60 percent directly elected and 40 percent proportionally elected."
  2. "NEPAL: Diluted proportional electoral system". scoop.co.nz. Scoop world. 16 October 2017. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.



"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_மாநிலங்கள்&oldid=3597242" இலிருந்து மீள்விக்கப்பட்டது