ஹெடௌதா
ஹெடௌதா (Hetauda) (நேபாளி: हेटौडा, மத்திய நேபாளத்தின் மாநில எண் 3ல் உள்ள மக்வான்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், துணை-நிலை மாநகராட்சியும் ஆகும். [1]
ஹெடௌதா (Hetauda )
हेटौंडा | |
---|---|
ஆள்கூறுகள்: 27°25′N 85°02′E / 27.417°N 85.033°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண 3 |
மாவட்டம் | மக்வான்பூர் மாவட்டம் |
அரசு | |
• வகை | துணை-நிலை மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 261.59 km2 (101.00 sq mi) |
ஏற்றம் | 345 m (1,132 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,53,875 |
• அடர்த்தி | 590/km2 (1,500/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 44100, 44107 |
இடக் குறியீடு | 057 |
இணையதளம் | www.hetaudamun.gov.np |
2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, ஹெடௌதா நகரத்தின் மக்கள் தொகை 1,54,660 1,53,875 ஆகும். இதில் ஆண்கள் 76,511 ஆகவும்; பெண்கள் 78,149 ஆகவும் உள்ளனர். [2]
ஹெடௌதா நகரம் திரிபுவன் நெடுஞ்சாலை மற்றும் மகேந்திரா நெடுஞ்சாலைகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. ஹெடௌதா நகராட்சி 1969ல் நிறுவப்பட்டது.
நேபாளத்தின் தலைநகரம் காட்மாண்டிற்கு தென்கிழக்கே 76 கிமீ தொலைவில் உள்ளது.
புவியியல்
தொகுமலைகளால் சூழ்ந்த, உள் தராய் சமவெளியில் ஹெடௌதா நகரம் உள்ளது. இந்நகரத்தின் வடக்கில் மகாபாரத மலைத்தொடர்களும்; தெற்கில் சிவாலிக் மலைத் தொடர்களாலும் சூழ்ந்துள்ளது. கண்டகி ஆறு தப்தி ஆறு மற்றும் சமாரி ஆறுகள் இந்நகரத்தில் பாய்கிறது. கடல் மட்டத்திலிருந்து 300-390 மீட்டர் உயரத்தில் உள்ள ஹடௌதா நகரத்தின் மொத்த பரப்பளவு 261 சகிமீ ஆகும்.
பொருளாதாரம்
தொகுஹெடௌதா தொழில் நகரம், குடிசைத் தொழில்கள் மற்றும் நடுத்தர தொழில்கள் கொண்டது.