கண்டகி ஆறு, நேபாளம்

காளி கண்டகி ஆறு அல்லது கண்டகி ஆறுஅல்லது நாராயணீ ஆறு (Kali Gandaki or Gandaki River or Narayani River), நேபாள நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். நேபாளத்தில் இவ்வாற்றை காளி-கண்டகி[1] என்றும் நாராயணீ என்றும், இந்தியாவில் கண்டகி என்றும் அழைப்பர். கண்டகி ஆறு, துணை ஆறாக, இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சோன்பூரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. நேபாளத்தில் பாயும் காளி-கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை வைணவ சமயத்தினர் திருமாலின் அம்சமாக கருதி பூஜையில் வைத்து வழிபடுவர்.

காளி-கண்டகி (காளி)
நாராயணீ
River
காளி-கண்டகி ஆறு, நேபாளம்
நாடுகள் திபெத் (சீனா), நேபாளம், இந்தியா
கிளையாறுகள்
 - இடம் திரிசூலி ஆறு, புத்திகண்டகி, மர்ஷியாந்தி, மடி ஆறு, சேத்தி-கண்டகி ஆறு
 - வலம் பாடிகாட் ஆறு
நகரங்கள் லோ மாந்தாங், ஜோம்சோம், பெனி, (தவளகிரி), குஸ்மா, ரித்தி, தேவ்காட், நாராயணன்கார், சித்வான், வால்மீகிநகர், திரிவேணி, நேபாளம், ஹாஜிப்பூர், இந்தியா, சோன்பூர், பாகஹா, இந்தியா
உற்பத்தியாகும் இடம் நுபின் இமயமலை பனியாறு
 - அமைவிடம் மஸ்டாங் மாவட்டம், நேபாளம், நேபாளம்
 - உயர்வு 6,268 மீ (20,564 அடி)
 - ஆள்கூறு 29°17′0″N 85°50′5″E / 29.28333°N 85.83472°E / 29.28333; 85.83472
கழிமுகம் கங்கை ஆறு
 - அமைவிடம் சோன்பூர், இந்தியா
 - elevation 44 மீ (144 அடி)
 - ஆள்கூறு 25°39′9″N 85°11′4″E / 25.65250°N 85.18444°E / 25.65250; 85.18444
நீளம் 630 கிமீ (391 மைல்)
வடிநிலம் 46,300 கிமீ² (17,877 ச.மைல்)
Discharge
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
கங்கை ஆற்றின் துணைஆறுகளான கண்டகி மற்றும் காக்கரா ஆறுகள்
கங்கை ஆற்றின் துணைஆறுகளான கண்டகி மற்றும் காக்கரா ஆறுகள்
கங்கை ஆற்றின் துணைஆறுகளான கண்டகி மற்றும் காக்கரா ஆறுகள்

கோசி மற்றும் காக்கிரா ஆறுகளிடையே பாயும் கண்டகி ஆறு, 8000 மீட்டருக்கும் அதிக உயரத்தில் உள்ள அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு கொடுமுடிகளிலிருந்து உற்பத்தியாகிறது. இமயமலையில் உருவாகும் கண்டகி ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி, புனல் மின்சாரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நீர்தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதி 46,300 சதுர கிலோ மீட்டராகும்.

ஆற்றின் அமைப்பு தொகு

நேபாளம் தொகு

 
பல்வேறு தட்ப-வெப்ப நிலைகளில் பாயும் காளி-கண்டகி ஆறு
 
25 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து தேவதாரு காட்டில் பாயும் காளி-கண்டகி ஆறு

இமயமலையின் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் 6268 மீட்டர் உயரத்தில் நுபின் இமயமலையின் உறைபனி ஆற்றிலிருந்து காளி-கண்டகி ஆறு உற்பத்தியாகி, [2][3]பின் தென்மேற்காக முக்திநாத் வழியாக பாய்கிறது. பின் காளி-கண்டகி ஆறு கிழக்கே திரும்பி, மகாபாரத மலைத்தொடர்கள் வழியாக செல்லும் போது, கண்டகி ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி, நேபாள நாட்டின் மிகப்பெரிய புனல் மின்நிலையம், மின்சாரம் உற்பத்தி செய்கிறது. பின் காளி-கண்டகி ஆறு தெற்கில் திரும்புகையில், திரிசூலி எனும் துணை ஆறு, தேவிகாட் எனுமிடத்தில், காளி-கண்டகி ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் சித்வான் சமவெளியில் பாய்ந்து, பின் தென்மேற்கே கோவிந்தகாட் நகரத்தை கடந்து இந்தியப் பகுதிக்குள் நுழையும் போது காளி-கண்டகி ஆற்றின் பெயர் கண்டகி ஆறு எனப் பெயர்க் கொள்கிறது.

 
இந்தியாவில் நுழைவதற்கு முன் நேபாளத்தின் காக்பெனி நகரத்தில் பாயும் காளி-கண்டகி ஆறு

இந்தியா தொகு

காளி-கண்டகி ஆறு, இந்திய-நேபாள எல்லையில் பாய்கையில் பட்ச்னாடு மற்றும் சோன்கா ஆகிய துணை ஆறுகளுடன் சேர்ந்து சோன்பூரில் கூடுமிடத்தை, திரிவேணி சங்கமம் என்பர்.

கொடுமுடிகள், ஏரிகள் தொகு

காளி-கண்டகி ஆற்று வடிநிலப் பகுதியில் உள்ள அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு மலைபகுதிகளில் 1025 உறைபனியாறுகளும், 338 ஏரிகளும் உள்ளது.

முக்கிய நகரங்கள் தொகு

 
அன்னபூர்ணா 1 மற்றும் தவுளகிரி மலைகளுக்கிடையே காசா எனுமிடத்தில் பாயும் காளி-கண்டகி ஆறு

நேபாள நாட்டுப் பகுதியின் காளி-கண்டகி ஆற்றாங்கரையில் லோ மந்தாங், ஜோம்சோம், பெனி (தவுளகிரி), பாக்லுங், குஸ்மா, ரித்தி, தேவ்காட், பரத்பூர், வால்மீகி நகர் மற்றும் திரிவேணி ஆகிய நகரங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு சித்வான் தேசியப் பூங்காவின் மேற்கு எல்லைப் பகுதியில் பாய்கிறது. நேபாளத்தின் காளி-கண்டகி ஆற்றின் நீர், பெருமளவு இமயமலையின் வண்டல் மண்னுடன் கலந்து வருவதால், நீரின் நிறம் கருமையாக காணப்படுகிறது.


தொன்ம வரலாற்றில் கண்டகி ஆறு தொகு

 • வியாசரின் மகாபாரதத்தில் இதிகாசத்தில் கண்டகி ஆறு குறித்த செய்திகள் உள்ளது.
 • சிவபுராணத்தில், சிவபெருமான் சங்கச்சூடனை வதம் புரியும் படலத்தில் கண்டகி ஆறு குறித்த செய்தி உள்ளது.
 • டேவிட் அட்டன்பரோவின் தி லிவ்விங் பிளானட் (The Living Planet) என்ற ஆவணப்படத்தின் முதல் தொடரில் காளி-கண்டகி பள்ளத்தாக்கு செய்திகளுடன் காட்டியுள்ளார்.

சித்வான் தேசியப் பூங்கா தொகு

 
யாணை மீது அமர்ந்து சித்வான் தேசியப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள்

நேபாளத்தின் கண்டகி சமவெளியில், காளி-கண்டகி ஆறு பாயுமிடத்தில் சித்வான் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. நேபாள நாட்டின் பெரிய தேசியப் பூங்கா, சித்வான் தேசியப் பூங்காவாகும். காட்மாண்டிற்கு மேற்கே 150 கிலே மீட்டர் தொலைவில் சித்வான் மாவட்டத்தில் 932 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள இப்பூங்கா 1973ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டில் யுனேஸ்கோ, இயற்கை சார்ந்த உலகப் பாரம்பரிய களமாக அங்கீகரித்துள்ளது.[4] இப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வான் மாவட்டம், நவல்பாரசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது. இத்தேசியப் பூங்காவில் வங்கப் புலிகள், இந்தியப் பனிச் சிறுத்தைகள், சோம்பேறிக் கரடிகள், நீர்நாய்கள், வங்காள நரிகள், புள்ளி புனுகுப் பூனைகள், தேன்வளைக்கரடிகள், வரிக் கழுதைப்புலிகள் உள்ளன.[4] 2011இல் நடந்த ஆய்வுகளின் படி, செந்நாய்கள், தங்க நிற குள்ள நரிகள், மீன்பிடிப் பூனைகள், சிறுத்தைப் பூனைகள், பெரிய மற்றும் சிறியஆசிய மரநாய்கள், நண்டை உண்ணும் கீரிகள், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் , காட்டு யாணைகள், புள்ளிமான்கூட்டங்கள், புல்வாய்கள், நான்கு கொம்புகள் கொண்ட மறிமான்கள், செம்முகக் குரங்குகள், அனுமார் குரங்குகள், எறும்பு தின்னிகள், இந்திய முள்ளம்பன்றிகள், பறக்கும் அணில்கள், பல இன காட்டு முயல்கள் மற்றும் தேவாங்குகள் காணப்படுகின்றன. [5] சித்வான் தேசியப் பூங்காவின் தெற்கு பக்கத்தில் வால்மீகி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

சமய முக்கியத்துவம் தொகு

வால்மீகி ஆசிரமம் தொகு

நேபாளின் வால்மீகி நகரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சித்வான் தேசியப் பூங்காவில் வால்மீகி முனிவரின் ஆசிரமம் அமைந்துள்ளது. இராமாயணம் இதிகாசத்தில் வரும் சீதைக்கு இலவன் மற்றும் குசன் எனும் இரட்டையர்கள் வால்மீகி ஆசிரமத்தில் பிறந்தனர். இவ்விடத்தில்தான் இராமாயணம் என்ற காவியத்தை வால்மீகி படைத்தார்.

முக்திநாத் மற்றும் சாளக்கிராமம் தொகு

 
முக்திநாத் பகுதியில் பாயும் கண்டகி ஆற்றாங்கரையில் காணப்படும் சாளக்கிராமக் கற்கள்

நேபாளத்தின் மஸ்டாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் பகுதியில் பாயும் காளி-கண்டகி ஆற்றில் வைணவ சமயத்தினர் திருமாலின் அம்சமாக கருதி பூஜை அறையில் வைத்து வழிபடும் சாளக்கிராம கற்கள் கிடைக்கிறது.

இச்சாளக்கிரமக் கற்கள் இயற்கையாக வட்ட வடிவத்தில் அல்லது சுருள் வட்ட வடிவில் காளி-கண்டகி ஆற்றாங்கரையில் கிடைக்கிறது. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.

மஸ்டாங் குகைகள் தொகு

காளி-கண்டகி ஆறு பாயும் இமயமலையின் மஸ்டாங் மலைப் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 3400 மீட்டர் உயரத்தில், 12 முதல் 14ஆம் நூற்றாண்டு காலத்திய, அஜந்தா குகைகள் போன்ற, மனிதனால் குடைந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குகைகள் காணப்படுகிறது. [6]சில குகைகளில் புத்தரின் வரலாற்றை எடுத்துரைக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. பல குகைகளில் பனிச் சிறுத்தை, காண்டாமிருகம், புலி, குரங்கு மற்றும் மான்களின் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. பனிச்சிறுத்தைகளின் காலடித் தடங்கள் இக்குகைகளில் காணப்பட்டதாக இத்தாலிய, அமெரிக்க மற்றும் நேபாள நாட்டு தொல்லியல்ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாளந்தா பல்கலைகழகத்தின் புத்தரின் உபதேசங்கள் இக்குகைகளில் பௌத்த குருமார்கள் தங்களது சீடர்களுக்கு புகட்டியதாக தெரிகிறது. [7]

புனல் மின்நிலையம் தொகு

நேபாள நாட்டின் மிகப்பெரிய புனல் மின்நிலையம், காளி-கண்டகி ஆற்றின் சப்த கண்டகி எனுமிடத்தில் அமைந்துள்ளது. இப்புனல் மின்நிலையத்திலிருந்து 20,650 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. [8] காளி-கண்டகி ஆற்றில் மேலும் இடங்களில் மூன்று சிறு புனல் மின்நிலையங்கள் அமைந்துள்ளது.

காளி-கண்டகி ஆற்றுப் பாசானம் தொகு

வால்மீகி நகரில் அமைந்துள்ள கண்டகி திட்டத்தின்படி, வால்மீகி நகரில் உள்ள 37,410 சதுர கிலோ மீட்டர் நீர்பிடிப்பு பகுதியின் நீரை, நேபாள நாடு 90% மற்றும் இந்தியா 10% பங்கீட்டுக் கொள்ள நேபாள-இந்திய அரசுகள் 4 டிசம்பர் 1959இல் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளது.[9]மேலும் நேபாள நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, 1964ஆம் ஆண்டில் சில திருத்தங்களுடன் காளி-கண்டகி வடிநில ஆற்றுப் பாசானம் குறித்த ஒப்பந்தகள் செய்து கொள்ளப்பட்டன.[10]1975இல் முடிவடைந்த கிழக்கு கண்டகி கால்வாய் திட்டத்தின்படி, நேபாள நாட்டின் 1,03,500 ஏக்கர் நிலங்கள் நீர்பாசானம் பெறுகிறது.[11]

கிழக்கு கண்டகி கால்வாயில் 15 மெகாவாட் (3X5mw) மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. Negi, Sharad Singh. Himalayan Rivers, Lakes and Glaciers. Google Books. பார்க்கப்பட்ட நாள் 2010-05-28. {{cite book}}: |work= ignored (help)
 2. Upper & Lower Mustang (Map). 1:70000. Nepal Map Publisher Pvt., Ltd., Kathmandu.
 3. Garzione, Carmala N.; et al. (2000), "Predicting paleoelevation of Tibet and the Himalaya from δ18O vs. altitude gradients in meteoric water across the Nepal Himalaya", Earth and Planetary Science Letters, 183 (1–2): 215–229, Bibcode:2000E&PSL.183..215G, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0012-821X(00)00252-1 (Table 2)
 4. Chitwan National Park
 5. Bhuju, U. R., Shakya, P. R., Basnet, T. B., Shrestha, S. (2007). Nepal Biodiversity Resource Book. Protected Areas, Ramsar Sites, and World Heritage Sites. பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம் International Centre for Integrated Mountain Development, Ministry of Environment, Science and Technology, in cooperation with United Nations Environment Programme, Regional Office for Asia and the Pacific. Kathmandu, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-9115-033-5
 6. "Mustang Caves". Archived from the original on 2013-06-12. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.
 7. Rahman, Maseeh (2007-05-04). "Shepherd leads experts to ancient Buddha cave paintings | World news | guardian.co.uk". London: Guardian. http://www.guardian.co.uk/international/story/0,,2072736,00.html. பார்த்த நாள்: 2009-11-28. 
 8. "Nepalnews.com Mercantile Connumications Pvt. Ltd". Nepalnews.com.np. Archived from the original on 2006-10-07. பார்க்கப்பட்ட நாள் 2009-11-28.
 9. "Ministry of Water Resources". Wrmin.nic.in. Archived from the original on 2010-01-08. பார்க்கப்பட்ட நாள் 2009-11-28.
 10. "Commissioned Projects of BHPC". Bshpcltd.com. Archived from the original on 2009-04-30. பார்க்கப்பட்ட நாள் 2009-11-28.
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.
 • India's Water Wealth (1975, Dr. K.L.Rao, Orient Longman Ltd, Hyderabad, New Delhi
 • "Waters of Hope" (1993), B.G.Vargehese, New Delhi
 • A Framework for Sustainable Development of the Ganges- Brahmaputra- Meghna (GBM Region), Proceedings of Conference held in Dhaka, 4–5 December 1999–Nepal Water Vision in the GBM Regional Framework, Institute for Integrated Studies, Kathmandu).

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டகி_ஆறு,_நேபாளம்&oldid=3706801" இலிருந்து மீள்விக்கப்பட்டது