துணை ஆறு
பிரதான ஆற்றில் பாயும் ஆறு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துணை ஆறு (Tributary) என்பது நேரடியாக கடலில் கலக்காமல் வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம். துணை ஆற்றைக் கிளை ஆறுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. துணை ஆறு முதன்மை ஆற்றுடன் வந்து கலப்பது. கிளை ஆறோ முதன்மை ஆற்றில் இருந்து கிளைத்துப் பிரிந்து செல்வது. எடுத்துக்காட்டு பவானி ஆறு,அமராவதி, நொய்யல்,கபினி,அர்க்காவதி போன்றவை காவிரியின் துணை ஆறுகள். கொள்ளிடம்,வெண்ணாறு,அரசலாறு போன்றவை காவிரியின் கிளை ஆறுகள்.