கொள்ளிடம் ஆறு
காவிரியாற்றின் கிளை ஆறு
(கொள்ளிடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.[1]
ஆற்றின் போக்கு
தொகுதிருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் திருச்சி, அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கரையில் உள்ள நகரங்கள்
தொகுகொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.[2] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருமழபாடி மற்றும் திருமானூர் ஆற்றின் வட கரையில் உள்ளது .
மேற்கோள்கள்
தொகு- ↑ கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895
- ↑ பொதுப்பணித்துறை,கடலூர்