முக்கொம்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முக்கொம்பு திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலை 67-இல் அமையப்பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பெரிய சுற்றுலாத்தலமாகும்.
பெயர் காரணம்
தொகு- கர்நாடகாவின் தலைக்காவிரியாக உருவெடுத்து ஒற்றைக் காவிரியாக வரும் ஆறானது இவ்விடத்தில் (முக்) மூன்று (கொம்பு) முனை இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு எனப் பெயர் பெற்றது.
நீர் ஆதாரம்
தொகு- ஒற்றை காவேரியில் இருந்து வரும் நீரை நேராக காவேரி ஆற்றில் திருச்சி, கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக சென்று கடைமடை பகுதியான பூம்புகாரில் உள்ள வங்காள விரிகுடா கடலில் சேருகின்றது.
- இவ்வூர் வழியாக செல்லும் நீரானது விவசாய பாசனத்திற்கும் பல நீர் ஆதாரமாக பயனளிக்கின்றது. குறிப்பாக திருச்சி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் இப்பகுதிகளில் தமிழ்நாட்டின் வேளாண்மை சார்ந்த வளமிக்க நகரமாக இந்த காவேரி நீர் பயன்படுகிறது.
- இரண்டாவதாக பிரியும் கொள்ளிடம் ஆறானது காவேரியின் நீர்வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்திலும், வெள்ள அபாய நேரங்களில் காவேரி நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.
- மேலும் கொள்ளிடம் ஆறானது கல்லணை, திருமானூர், ஜெயங்கொண்டம், அணைக்கரை, சிதம்பரம் வழியாக சென்று வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
- இவ்வூர் வழியாக செல்லும் கொள்ளிடம் நீரானது அந்த ஊர்களில் விவசாய பாசன வசதிக்காக பயன்படுத்தி கொள்ளப்படுகிறது.
- புள்ளம்பாடி கால்வாய் திருச்சியின் வடபகுதியில் உள்ள அணைத்து விவசாயம் சார்ந்த கிராம பகுதிகளான குணசீலம், மண்ணச்சநல்லூர், சமயபுரம், இலால்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் வழியாக புள்ளம்பாடி வரை விவசாயத்திற்கு பயன்படுகிறது.
- அதே போல் காவேரி நீர் பிடிப்பு பகுதியில் முக்கொம்பு அடுத்து முத்தரசநல்லூர் என்ற இடத்தில் இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக காவேரி நீரை ஆழ் குழாய் மூலமாக நீர் இல்லாத வறண்ட பகுதி மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், இராமேஸ்வரம் வரை இக்கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் அனைத்து கிராமப்புறங்களிலும் குடிநீர் சேவையாகவும் கொண்டு செல்லப்பட்டு அம்மாவட்ட மக்கள்களின் அவசிய தேவையான சுத்தமான குடிநீர் தேவையாக இக்கூட்டு குடிநீர் திட்டத்தை கடந்த (2006-2011) திமுகழக ஆட்சி காலத்தில் அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் இக்கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
சுற்றுலா தளம் அமைப்பு
தொகு- திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ தொலைவில் முக்கொம்பு அமைந்துள்ளது. வழிதடம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜியாபுரம் வழியாக முக்கொம்புவை அடையளாம்.
- அதே போல் ரயிலில் வரும் பயணிகள் திருச்சி–கரூர் ரயில்வே வழித்தடத்தில் எலுமனூர் என்ற சிறிய ரயில் நிலையத்தில் இறங்கி முக்கொம்புவை அடையாளம்.
- கர்நாடகாவில் இருந்து வரும் அகண்ட காவேரி ஆறானது இங்கு மூன்று ஆறாக பிரிந்து காவேரி, கொள்ளிடம், புள்ளம்பாடி கால்வாய் என மூன்று நீர் நிலையாக மாறி செல்கிறது. இந்த மூன்று ஆறுகளுக்கும் கதவனைகள் மூலம் இங்கு நீர் திறந்துவிடப்படும் பகுதியாக முக்கொம்பு அமைந்துள்ளது.
- இந்த மூன்று ஆறுகளும் பிரியும் இடத்தை நீர் ஆதார பகுதியாகவும் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கும் காவேரி ஆற்றின் நடுவே மேட்டூர், பவானி, மாயனூர்க்கு பிறகு நீர் தேக்க தடுப்பனையாக முக்கொம்பு அமைந்துள்ளது.
- அதனால் திருச்சி மாவட்டத்துக்கே ஒரு நீர் ஆதாரமாக உள்ளது.
- கர்நாடகாவில் தலைகாவேரியாக அகண்ட ஒற்றை ஆறாக வரும் காவேரி இங்கு மூன்று ஆறுகளாக பிரிந்து செல்லும் இடமாக இருப்பதால் முக்கொம்பு ஒரு அழகான சுற்றுலா தளமாக விளங்குகிறது.
- முக்கொம்பு காவேரி பகுதிகளில் புதைமணல்கள் அதிகம் அமைந்திருக்கின்றன.
- அதே போல் திருச்சியின் மேற்கில் முக்கொம்பு (மேலணை) 15 கி.மீ தொலைவிலும் திருச்சியின் கிழக்கில் கல்லணை 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளதால் இந்த இரண்டு மிக பெரிய அணைகளுக்கு நடுவே திருச்சிராப்பள்ளி நகரமே அமைந்துள்ளது.
- முக்கொம்பு கதவணை பாலங்களில் மூன்று ஆறுகளையும் கடந்து சென்றால் திருச்சி–நாமக்கல் சாலையை அடையளாம்.
- முதல் கதவணை பாலத்தை கடந்து சென்றால் காவேரிக்கும்–கொள்ளிடத்திற்க்கும் நடுவே ஸ்ரீரங்கத்திற்க்கு செல்லும் பாதை அமைந்துள்ளது.
ஆடிப்பெருக்கு விழா
தொகு- ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.