ஜீயபுரம்
ஜீயபுரம் (Jeeyapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமமாகும்.
வேளாண்மை
தொகுவிவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கும் காவிரி ஆற்றின் அருகே ஜீயபுரம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாரம்பரியமாகப் பல விவசாய நிலங்களும் விவசாயிகளும் உள்ளனர். ஜீயபுரத்தில் நெல், வாழை, பருத்தி மற்றும் உளுந்து முதலியன முக்கிய விவசாயப் பயிர்களாகப் பயிரிடப்படுகின்றன.
கோயில்கள்
தொகுஇக்கிராமத்தைச் சுற்றிப் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் உள்ளன. குறிப்பாக ஸ்ரீசந்திரசேகர சுவாமி கோயில் [1] மற்றும் எலம்புலியம்மன் கோயில். பெரியகருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்ற சக்திவாய்ந்த கோயிலாகும்.
சுற்றுலா இடங்கள்
தொகுமுக்கொம்பு இதன் அருகில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.