சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி
சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி (மெயின் கார்டு கேட் பேருந்து நிலையம்) என்பது திருச்சிராப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையங்களில் ஒன்று. மற்றொன்று மத்திய பேருந்து நிலையம்.[3] சத்திரம் பேருந்து நிலையம் புனித சூசையப்பர் கல்லூரிக்கு அருகில் சிந்தாமணியில் அமைந்துள்ளது.
சத்திரம் பேருந்து நிலையம் | |
---|---|
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சிந்தாமணி, திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு. அஞ்சல் குறியீட்டு எண் 620 002. இந்தியா |
ஆள்கூறுகள் | 10°49′53″N 78°41′36″E / 10.83139°N 78.69333°E |
உரிமம் | திருச்சிராப்பள்ளி மாநகராட்சி |
இயக்குபவர் | தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை |
நடைமேடை | 6 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1979[1] |
பயணிகள் | |
பயணிகள் 2010 | 50,000 தினந்தோறும்[2] |
கண்ணோட்டம்
தொகு1979 முதல் செயல்பட்டு வரும்[4] இந்த பேருந்து நிலையம் அருகிலுள்ள சின்னையா பிள்ளை சத்திரம் என்பதிலிருந்து இதன் பெயரை பெற்றது. [2] இந்த பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளையும் சிற்றுந்துகளையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு, மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இயக்குகிறது.[5][6][7]
சேவைகள்
தொகு- திருச்சியின் வடக்கு மற்றும் மேற்கே செல்லும் உள்ளூர் பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் குறிப்பிட்ட கால இடைவேளையில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
- சென்னை, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி, முசிறி, நாமக்கல், சேலம், பாண்டிச்சேரி போன்ற தமிழக பெரும் நகரங்களுக்கு செல்லும் சில பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு செல்கின்றன.
- மேலும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குளித்தலை, கரூர், முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், மோகனூர், வேலூர், தாத்தையங்கார்பேட்டை, புளியஞ்சோலை, துறையூர், தம்மம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, சேலம், பெரம்பலூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தொழுதூர், லப்பைகுடிக்காடு, லால்குடி, புள்ளம்பாடி, திருவையாறு, தஞ்சாவூர், கல்லக்குடி, அரியலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் பெண்ணாடம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், ஜெயங்கொண்டம், கங்கைகொண்டசோழபுரம், சிதம்பரம், பாண்டிச்சேரி போன்ற திருச்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.
- மேலும் பாலக்காடு, பெங்களூர், திருப்பதி, ஐதராபாத்து போன்ற பக்கத்து மாநிலங்களும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.[4]
நடைமேடை | செல்லும் இடம் |
---|---|
1 | அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர், பாய்லர், துவாக்குடி, HAPP, நவல்பட்டு மற்றும் பூதலூர் |
2 | கீரனூர் மார்க்கமாக செல்லும் உள்ளூர் பேருந்துகள், விராலிமலை மார்க்கமாக செல்லும் உள்ளூர் பேருந்துகள், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம், திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம், உறையூர் மற்றும் பொன்மலை |
3 | சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர்புரம், கே. கே. நகர் மற்றும் வயலூர் |
4 | சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் |
5 | முக்கொம்பு, பெட்டவாய்த்தலை, குளித்தலை மற்றும் கல்லணை, பூண்டி மாதா பேராலயம் |
6 | இலால்குடி |
இணைப்பு
தொகுசத்திரம் பேருந்து நிலையம் தென்மேற்கில் 1.3 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்துடனும், தென்கிழக்கில் 1.4 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி டவுன் ரயில் நிலையத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில்
தொகு2013 ஆம் ஆண்டு வெளிவந்த சத்திரம் பேருந்து நிலையம் என்ற தமிழ்த்திரைப்படத்தில் இப்பேருந்து நிலையம் காட்சிப்படுத்தப்பட்டது.[8][9]
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ ச.கணேசன் (20 ஆகஸ்ட் 2009). "Bus Stand to get roof". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/bus-stand-to-get-roof/article209220.ece. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014.
- ↑ 2.0 2.1 "Plea to rename Chathram Bus Stand after Kamarajar". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி). 12 நவம்பர் 2010. http://www.hindu.com/CPC/11/12/stories/2010111262180300.htm. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ R. கோகுல் (12 ஜூலை 2013). "Chatram Bus Stand vendors up in arms against midnight closure of shops". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி) இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004222557/http://articles.timesofindia.indiatimes.com/2013-07-12/madurai/40535690_1_bus-stand-shops-mofussil-buses. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014.
- ↑ 4.0 4.1 ச.கணேசன் (11 ஜூன் 2012). "Commuters face the heat without bus shelters". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி). http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article3514306.ece. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014.
- ↑ "Six exclusive bus services for women introduced in the city". தி இந்து (ஆங்கில நாளிதழ்). 21 ஆகஸ்ட் 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/six-exclusive-bus-services-for-women-introduced-in-the-city/article3093707.ece. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2014.
- ↑ "New bus services". தி இந்து (ஆங்கில நாளிதழ்). 9 ஜூன் 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/around-the-city/article1854101.ece. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2014.
- ↑ "New buses on roads". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி). 6 ஜனவரி 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-buses-on-roads/article1173513.ece. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014.
- ↑ S. R. அசோக் குமார் (17 நவம்பர் 2012). "Music for the masses". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/music-for-the-masses/article4105489.ece. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014.
- ↑ "சத்திரம் பேருந்து நிலையம் (திரை விமர்சனம்) [சத்திரம் பேருந்து நிலையம் (திரை விமர்சனம்)]" (in Tamil). மாலை மலர். 12 ஜூலை 2013 இம் மூலத்தில் இருந்து 2014-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140201215352/http://www.maalaimalar.com/2013/07/12091259/Sathiram-Perunthu-Nilayam-movi.html. பார்த்த நாள்: 28 ஜனவரி 2014.