ஆண்டிமடம்
ஆண்டிமடம் (Andimadam) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்து கிராமமாகும். இது 16.09.2016-இலிருந்து ஒரு வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் அதிகமாக காணப்படுவதால் சிமெண்ட் நகரம் என அழைக்கப்படுகிறது. ஆண்டிமடம் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
ஆண்டிமடம் Andimadam | |
---|---|
பஞ்சாயத்து ஒன்றியம் | |
ஆள்கூறுகள்: 11°20′7″N 79°22′33″E / 11.33528°N 79.37583°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 6,633 |
மொழிகள் | |
• ஆட்சி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பின்கோடு | 621 801 |
தொலைபேசிக் குறியீடு | 04331 |
வாகனப் பதிவு | TN-61 |
அருகிலுள்ள நகரம் | செயங்கொண்ட சோழபுரம் |
பாலின விகிதம் | 1001 ♂/♀ |
கல்வியறிவு | 73.35% |
லோக் சபா தொகுதி | சிதம்பரம் |
மக்கள்தொகை
தொகு2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 6633 ஆண்கள் 3315 பெண்கள் 3318.[1]இது அரியலூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வடகிழக்கில் 242 கி.மீ. தொலைவில் சென்னை அமைந்துள்ளது. தென்மேற்கில் 111 கி.மீ. தொலைவில் திருச்சியும், தென்கிழக்கில் 23 கி.மீ. தொலைவில் கங்கைகொண்டசோழபுரமும் அமைந்துள்ளது.
பார்க்க வேண்டியவை
தொகுபழமை வாய்ந்த சிவன் கோவில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது[2].(மேல அகத்தீச்வரர் ஆலயம் விளந்தை ஆண்டிமடம்[தொடர்பிழந்த இணைப்பு]). இக்கோவிலின் சிவலிங்கம் அகத்தியரால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலைச்சுற்றி ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளது. மேலும் இங்கு புகழ் பெற்ற புனித மார்த்தினார் ஆலயம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது ஆகத்து 6, 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ https://sites.google.com/site/vilanthai/