வேலூர் (நாமக்கல்)
வேலூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும், பேரூராட்சி தலைவர் லக்ஷ்மி முரளி B.A.
இப்பேரூராட்சி பகுதியில் வாழை, வெற்றிலை, கோரை போன்ற பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஜேடார்பாளையம் தடுப்பணை 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அமைவிடம்
தொகுவேலூர் பேரூராட்சியானது கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை எண் 37-இல் காவேரி ஆற்றின் வடகரையில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 8 கிமீ தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது. இப்பேரூராட்சிக்கு கிழக்கில் மோகனூர் 16 கிமீ; மேற்கில் கபிலர்மலை 13 கிமீ; தெற்கில் கரூர் 22 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு15 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 மக்கள்தொகையும் கொண்டது. [2]
கல்வி
தொகு- கந்தசாமி கவுண்டர் கலைக் கல்லூரி