மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி

மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி அல்லது ஏ. எஸ். ஜி. லூர்துசாமி பிள்ளை மத்திய பேருந்து நிலையம் என்பது திருச்சிராப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பஞ்சப்பூர் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் என மொத்தம் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன.[2] இது கண்டோன்மென்ட் அருகில் அமைந்துள்ளது.

மத்திய பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வ. உ. சி. சாலை , கண்டோன்மென்ட்,
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
அஞ்சல் குறியீட்டு எண்
620 001.
இந்தியா
ஆள்கூறுகள்10°47′55″N 78°40′50″E / 10.7987°N 78.6805°E / 10.7987; 78.6805
உரிமம்திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
இயக்குபவர்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் துறை
நடைமேடை5
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுTRI (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்)
TRH (கர்நாடக அரசு சாலை போக்குவரத்து கழகம்)
வரலாறு
திறக்கப்பட்டது1970 (1970)[1]
போக்குவரத்து
பயணிகள் 1,00,000 தினந்தோறும்

கண்ணோட்டம் தொகு

மாநிலத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள திருச்சிக்கு, இப்பேருந்து நிலையம் ஒரு முக்கியமான போக்குவரத்து புள்ளியாக உள்ளது. இது 4.5 ஏக்கர்களில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கிருந்து தினந்தோறும் 2,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.[3][4]

சேவைகள் தொகு

 
மத்திய பேருந்து நிலையத்தின் உட்பகுதி

வடக்கு மற்றும் மேற்கே செல்லும் உள்ளூர் பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் குறிப்பிட்ட கால இடைவேளையில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கர்நாடக, கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

நடைமேடை சேரும் இடம்
A சென்னை, பெங்களூர், மைசூர், திருப்பதி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோட்டயம், மங்களூரு, குருவாயூர்
1 தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, காரைக்கால், சிதம்பரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, சீர்காழி, முத்துப்பேட்டை, பொறையார்
2 மணப்பாறை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி,கொடைக்கானல், தேனி, போடிநாயக்கனூர், கம்பம், சங்கனாச்சேரி, துவரங்குறிச்சி, மேலூர், நத்தம், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், குற்றாலம், கொல்லம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி
3 புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, மீமிசல், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, தேவிபட்டினம், ராமநாதபுரம், ராமேஸ்வரம்
4 குளித்தலை, முசிறி, கரூர், காங்கேயம், பல்லடம், கோயம்புத்தூர், திருப்பூர், ஊட்டி, தாராபுரம், ஈரோடு, நாமக்கல், சேலம், மேட்டூர், தர்மபுரி, ஓசூர் மற்றும் பெங்களூர்
 
மத்திய பேருந்து நிலையம், திருச்சி

இணைப்பு தொகு

மத்திய பேருந்து நிலையம் திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து 700 மீட்டர்கள் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 5.6 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது.

மேலும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. ச. கணேசன் (5 July 2007). "Too many encroachments drive out passengers City Pulse". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி) இம் மூலத்தில் இருந்து 7 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070707160942/http://www.hindu.com/2007/07/05/stories/2007070556070300.htm. பார்த்த நாள்: 6 பிப்ரவரி 2014. 
  2. R. கோகுல் (12 July 2013). "Chatram bus stand vendors up in arms against midnight closure of shops". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி) இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004222557/http://articles.timesofindia.indiatimes.com/2013-07-12/madurai/40535690_1_bus-stand-shops-mofussil-buses. பார்த்த நாள்: 6 பிப்ரவரி 2014. 
  3. ச. கணேசன் (3 June 2013). "Town bus terminus at central bus stand cramped for space". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி). http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/town-bus-terminus-at-central-bus-stand-cramped-for-space/article4778028.ece. பார்த்த நாள்: 6 பிப்ரவரி 2014. 
  4. S. கணேசன் (20 June 2011). "Fate of integrated bus stand hinges on choice of location". தி இந்து (ஆங்கில நாளிதழ்) (திருச்சிராப்பள்ளி) இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110810023537/http://www.hindu.com/2011/06/20/stories/2011062060640300.htm. பார்த்த நாள்: 6 பிப்ரவரி 2014. 

வெளிப்புற இணைப்புகள் தொகு