ஒரத்தநாடு அருகில் உள்ள ஊர் பற்றி அறிய, ஆயங்குடி, ஒரத்தநாடு வட்டம் கட்டுரையைப் பார்க்கவும்.


ஆயங்குடி (Ayangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும்.

ஆயங்குடி
Ayangudi
ஆயங்குடி
Ayangudi
அமைவிடம்: ஆயங்குடி
Ayangudi, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°12′58″N 79°32′21″E / 11.216122°N 79.539213°E / 11.216122; 79.539213
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

1,817 (2006)

303/km2 (785/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi)
குறியீடுகள்

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,817 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்[4] இவர்களில் 898 ஆண்கள், 929 பெண்கள் ஆவார்கள். ஆயங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79.47% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். காட்டுமன்னார்கோயில் மக்கள் தொகையில் 14.69% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பொது

தொகு

ஆயங்குடி எங்கு பார்த்தாலும் பசுமை சூழ்ந்த முற்றிலும் நெல் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. மேற்கு புறத்திலிருந்து வடக்கு புறம் ஓடுகின்ற வடவாறும் தெற்கே ஓடுகின்ற கொள்ளிடமும் முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும .

சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இவ்வூரில் ஒரு மழலையர் பள்ளி , ஒரு உயர்நிலைப் பள்ளி, இரண்டிற்கு மேற்பட்ட இஸ்லாமிய பாட கல்லூரிகள், அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் ஆகிய வசதிகள் உள்ளது.

இவ்வூரின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள், ஆயங்குடி  ஒன்பது பள்ளிவாசல்களை கொண்ட ஊராகும்  

அருகில் உள்ள சிறுநகரங்கள் காட்டுமன்னார்கோயில் மற்றும் இலால்பேட்டை பேரூராட்சிகள். கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி மற்றும் நெய்வேலி என்பன இவ்வூரைச் சுற்றி உள்ள பெருநகரங்கள் ஆகும். இந்த ஊர்களில் இருந்தும் மற்றும் திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆயங்குடியைச் சார்ந்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தாலும், சமீப காலமாக அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.

நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகளையும், ஐந்து கல்லூரி பேராசிரியர்களையும், ஐந்து மருத்துவர்களையும் கொண்டிருப்பதும், அவர்களின் கூட்டு முயற்சியால் தனியாக ஒரு தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டு வருவதும் சிறப்பிற்குரிய விதயமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://www.census.tn.nic.in/pca2001.aspxRural - Cuddalore District;Kattumannarkoil Taluk;Ayangudi Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை

http://www.ayangudi.net/ பரணிடப்பட்டது 2010-08-18 at the வந்தவழி இயந்திரம் http://www.ayangudi.com/ பரணிடப்பட்டது 2010-06-10 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயங்குடி&oldid=4199442" இலிருந்து மீள்விக்கப்பட்டது