முக்திநாத்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

முக்திநாத்
முக்திநாத் கோயில்
முக்திநாத் is located in நேபாளம்
முக்திநாத்
முக்திநாத்
ஆள்கூறுகள்:28°49′0″N 83°52′15″E / 28.81667°N 83.87083°E / 28.81667; 83.87083
பெயர்
வேறு பெயர்(கள்):சாளக்கிராமம்
அமைவிடம்
நாடு:நேபாளம்
மாவட்டம்:முஸ்தாங் மாவட்டம்
அமைவு:தவளகிரி மண்டலம்
கோயில் தகவல்கள்
உற்சவர்:ஸ்ரீமூர்த்தி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பௌத்த கட்டிடக் கலை
முக்திநாத் மற்றும் தவளகிரி (உயரம்: 8,167 மீ)

வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.

முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.[1]

முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக சாக்தர்கள் கருதுகின்றனர்.[2] திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்று வழிபடுகிறார்கள்.[3] தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள், முக்திநாத்தில் உள்ள டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர். [4]

பயண காலம் & வழி தொகு

ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாதரை தர்சனம் செய்ய ஏற்ற காலமாகும். கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் முக்திநாதரை தரிசிக்கலாம். பொக்காராவிலிருந்து முக்திநாத் செல்லும் வழியில் ராணிபௌவா, ஜோர்கோட், ஜார்கோட், சோங்கூர், காக்பெனி அல்லது ஜோம்சோம் ஆகிய இடங்களில் தங்க வசதியுள்ளது. சிற்றுந்து மூலம் காத்மாண்டிலிருந்து 377 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்திநாத் கோயிலை அடைய 10 மணி நேரமாகும். காத்மாண்டிலிருந்து வான் வழியாக 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[5]

இதனையும் காண்க தொகு

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

கூகுள் மேப்பில் முக்திநாத் கோயிலின் அமைவிடம்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Muktinath
என்பதின் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்திநாத்&oldid=3575749" இருந்து மீள்விக்கப்பட்டது