பக்தபூர் நகர சதுக்கம்

பக்தபூர் நகர சதுக்கம் (Bhaktapur Durbar Square), நேபாள நாட்டின் பழைய தலைநகரான பக்தபூர் நகரத்தில் அமைந்த வணிக வளாகமாகும். காத்மாண்டு சமவெளியில் அமைந்த மூன்று நகர சதுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] இச்சதுக்கம் கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[1], காட்மாண்டு நகரிலிருந்து கிழக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பக்தபூர் சதுக்கத்தை, உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

பக்தபூர் நகர சதுக்கம், பக்தபூர், நேபாளம்

பக்தபூர் நகர சதுக்கம், பக்தபூர் எனும் நகரில் அமைந்துள்ளது. இந்நகரத்தை பட்கான் என்றும் அழைப்பர்.

வரலாறு

தொகு

காத்மாண்டு சமவெளியை ஆண்ட மல்ல வம்ச மன்னர்கள் பக்தபூர் நகரச் சதுக்கத்தை நிறுவினர். பின்னர் கோர்க்கர்களின் மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா, 1768ல் பக்தபூர் போர், கீர்த்திப்பூர் போர் மற்றும் காட்மாண்டுப் போர்களில் பக்தபூர், லலித்பூர் மற்றும் காட்மாண்டு நகரங்களைக் கைப்பற்றி, காத்மாண்டு சமவெளி முழுவதையும் தங்கள் கட்டுக்கள் கொண்டுவந்தார்.

பக்தபூர் நகரத்தின் சதுக்கங்கள்

தொகு

பக்தபூர் நகரத்தில் பக்தபூர் அரண்மனை, தௌமதி சதுக்கம், தத்தாத்திரேயர் சதுக்கம், மட்பாண்ட சதுக்கம் என நான்கு சதுக்கங்களை சேர்ந்ததே பக்தபூர் நகர சதுக்கம் ஆகும். காத்மாண்டு சமவெளியில், வெளிநாட்டு சுற்றலா பயணிகளால் அதிகம் ஈர்க்கும் இடம் பக்தபூர் நகர சதுக்கமாகும். காத்மாண்டு சமவெளியில் உள்ள நான்கு உலகப் பாரம்பரியக் களங்களில் இதுவும் ஒன்று.[3]

அதிகமாக ஈர்க்கபடுமிடங்கள்

தொகு
 
பக்தபூர் நகர தர்பார் சதுக்கம்

55 சன்னல்கள் கொண்ட அரண்மனை

தொகு

யட்ச மல்லர் என்ற மன்னர் 1427இல் கட்டிய அழகிய மரச்சிற்பங்களுடன் கூடிய 55 சன்னல்கள் கொண்ட அழகிய அரண்மனையை, மன்னர் பூபதிந்திரநாத் 17ஆம் நூற்றாண்டில் செப்பனிட்டார். அரண்மனையில் சன்னல்கள் 55 அழகிய வேலைபாடுகள் கொண்ட மரச்சிற்பங்களால் ஆனது.

தங்க வாசல் கதவு

தொகு
 
உலகப் புகழ்பெற்ற தங்கக் கதவு, பக்தபூர் அரண்மனை/’

மன்னர் ரஞ்சித் மல்லர் என்பவர் எழுப்பிய பக்தபூர் அரண்மனையின் தங்கக் கதவு உலகிலே அழகிய வேலைபாடுகள் கொண்டது. இக்கதவில் இந்து சமயக் கடவுளர்களான் காளி, கருடன், தேவலோக தேவதைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. 55 சன்னல் கொண்ட அரண்மனையின் அரசவைக்கு இத்தங்கக் கதவின் வழியாக செல்ல வேண்டும்.

சிங்கக் கதவு

தொகு

வேறு இடத்தில் இதே போன்ற அழகிய கதவை மீண்டும் அமைத்துவிடக்கூடாது என்பதற்காக, இந்த அழகிய பெரிய சிங்கக் கதவை அமைத்த கலைஞர்களின் விரல்கள் பகத்பூர் மன்னரால் துண்டிக்கப்பட்டது.

சிறு பசுபதி கோயில்

தொகு
 
சிறு பசுபதிநாத் கோயில், பகத்பூர்

பட்கோன் மன்னரின் கனவுப்படி, அரண்மனையின் வலப்புறத்தில் அழகிய பசுபதிநாதரின் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

பாட்சாலா கோயில்

தொகு

தேவி பாட்சாலாவுக்கு மன்னர் ரஞ்சித் மல்லா என்பவர் 1737இல் கட்டிய அழகிய சிற்பங்களுடன் கட்டிய கற்கோயிலில், வெண்கல மணியுடன் கூடியது. 2015 நேபாள நிலநடுக்கத்தில் இக்கோயில் முற்றிலும் இடிந்து வீழ்ந்தது.

கோயில்கள்

தொகு
 
பக்தபூர் நகர சதுக்கம், ஆண்டு 2004
  1. சிற்றின்ப யாணைகளின் கோயில்.
  2. உக்கிர சண்டி மற்றும் உக்கிர பைரவர் கோயில்
  3. இராமேஷ்வர் கோயில்
  4. பத்ரிநாத் கோயில்
  5. கோபிநாத் கோயில்
  6. கேதார்நாத் கோயில்
  7. வச்சலா தேவி கோயில்
  8. அனுமான் சிலை
  9. மன்னர் பூபேந்திரநாத் சிலை

நிலநடுக்கத்தின் விளவுகள்

தொகு

1934ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தால் பக்தபூர் நகரவை சதுக்கம் பலத்த சேதமடைந்தது.[4]

99 வாசல்களுடன் இருந்த பக்தபூர் அரண்மனை தற்போது 6 வாசல்களுடன் மட்டுமே எஞ்சியுள்ளது. 1934 நிலநடுக்கதிற்கு முன்னர் மூன்று தொகுதிகளுடன் கோயில்கள் இருந்தது. தற்போது பக்தபூர் நகர சதுக்கதில் கட்டிடங்கள் மட்டுமே காணப்படுகிறது.

25 ஏப்ரல் 2015இல் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கதில், பக்தபூர் நகர சதுக்கத்தில் அமைந்திருந்த முக்கிய கோயிலின் கூரை இடித்து வீழ்ந்தது. இங்கிருந்த வச்சலா தேவி கோயில் மற்றும் பௌத்த விகாரைகளும் நிலநடுக்கத்தில் தப்பவில்லை.[5]

படக்காட்சியகம்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Bhaktapur Durbar Square nepalandbeyond.com பரணிடப்பட்டது 2013-01-08 at the வந்தவழி இயந்திரம்
  2. Kathmandu Valley
  3. World Heritage Sites in Nepal
  4. Woodhatch, Tom (1999). Nepal Handbook (2nd ed.). Bath: Footprint Handbooks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-900949-44-6. பார்க்கப்பட்ட நாள் 27 October 2015.வார்ப்புரு:Pages needed
  5. "Nepal's Kathmandu Valley landmarks flattened by quake". BBC News. 26 April 2015. http://www.bbc.co.uk/news/world-asia-32472307. பார்த்த நாள்: 27 April 2015. 

வெளி இணைப்புகள்

தொகு

பகுப்பு:நேப்பாள இந்துக் கோயில்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தபூர்_நகர_சதுக்கம்&oldid=4054655" இலிருந்து மீள்விக்கப்பட்டது